search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "candidates announces"

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளுக்கு 38 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று அறிவித்துள்ளது. #LSpolls #CPI(M) #CPI(M)candidates
    கொல்கத்தா:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதையடுத்து, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடுகளை முடித்து வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் மொத்தம் 42 பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளன. இங்கு ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.

    மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை போல் வலிமையான கட்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் விளங்குகிறது. இங்கு திரிணாமுல் காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற முயற்சி மேற்கொண்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்க்க காங்கிரஸ் கட்சி விரும்பியது. ஆனால் மாநில தலைமை அதனை விரும்பவில்லை. திரிணாமுல் இங்கு தனியாகவே களமிறங்குகிறது.

    இதற்கிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியானது.



    இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 38 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை இன்று அறிவித்துள்ளது. இன்னும் 4 தொகுதிகள் மட்டுமே மீதமுள்ளது. 

    இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் பிமன் போஸ் கூறுகையில், முதல் கட்டமாக 38 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளோம். காங்கிரசுடன் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைக்கு தயாராகவே உள்ளோம். கூட்டணி இல்லையென்றால் மீதமுள்ள 4 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை விரைவில் அறிவிப்போம் என தெரிவித்துள்ளார். #LSpolls #CPI(M) #CPI(M)candidates
    ×