என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » building work
நீங்கள் தேடியது "building work"
செந்துறை அருகே கட்டுமான பணியின்போது தவறி விழுந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். தந்தை கண்முன்பே கூலி தொழிலாளி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆலத்தியூர் பகுதியில் தனியார் சிமெண்ட் ஆலைக்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கம் துளார் கிராமத்தில் உள்ளது. இங்கு லாரிகளுக்கான பணிமனை கட்டும் பணி நடைபெற்று வந்தது.
இந்த பணியில் கடலூர் மாவட்டம் பிலாந்துறை கிராமத்தை சேர்ந்த கருணாநிதி, அவரது மகன் நித்திஷ் உள்ளிட்ட பலர் வேலை பார்த்து வந்தனர். 30 அடிக்கு மேல் உள்ள செட்டில் வேலை பார்த்த நித்தீஷ் அங்கிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். உடனடியாக ஆலை நிர்வாகத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நித்திஷ் தந்தை கருணாநிதி குவாகம் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தந்தையின் கண்முன்பே கூலி தொழிலாளி விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நிலக்கோட்டையில் கட்டிட வேலையில் ஈடுபட்ட பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை கொங்கர் குளத்தைச் சேர்ந்த கருப்பையா மனைவி பாப்பாத்தி (வயது 45). இவர் கட்டிட வேலை பார்த்து வந்தார். நேற்று நிலக்கோட்டை பெரியார் காலனியைச் சேர்ந்த கணேசன் என்பவரது வீட்டில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தார். தரை தளத்தில் இருந்து மாடிக்கு சிமெண்ட் மூடைகளை ஏற்றிக் கொண்டு இருந்தபோது கால் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த பாப்பாத்தி நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அவரது மகன் வைரம் கொடுத்த புகாரின் பேரில் நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கருப்பசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X