என் மலர்
நீங்கள் தேடியது "Bu poll election"
- இடைத்தேர்தல் சுதந்திரமாக, நியாயமாக நடைபெறாது என்பதால் புறக்கணிப்பு.
- மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படும் அதிமுக, மீண்டும் ஆட்சியில் அமரும்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் முடிவில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- தேர்தலை கண்டு அஞ்சுகின்ற, பயப்படுகின்ற, அச்சப்படுகின்ற இயக்கமல்ல அதிமுக.
கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல், ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலின்போது வாக்காளர்களை அடைத்து வைத்து ஜனநாயக படுகொலை அரங்கேற்றப்பட்டது.
மக்களை அடைத்து வைத்தால், அந்த இடத்திற்கே சென்று மக்களை சந்திப்பேன் என நான் எச்சரித்தேன். மக்களவை சுதந்திரமாக வாக்களிக்க விட மாட்டார்கள், வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவார்கள்.
ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவார்கள் என்பதால், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிக்கிறோம். இடைத்தேர்தல் சுதந்திரமாக, நியாயமாக நடைபெறாது என்பதால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம்.
மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படும் அதிமுக, மீண்டும் ஆட்சியில் அமரும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.






