என் மலர்
நீங்கள் தேடியது "Black Gold"
- படத்தின் முழு படப்பிடிப்பும் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
- படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பெரும் வரவேற்பைப் பெற்றது.
எம்.எம். ஸ்டூடியோஸ் சார்பில் எம்.மூர்த்தி தயாரிப்பில், 'தீர்ப்புகள் விற்கப்படும்' மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தீரன் அருண்குமார் எழுதி இயக்கியுள்ள படம் 'பிளாக் கோல்டு'. "எட்டு தோட்டாக்கள்", "ஜீவி" படங்களின் நாயகன் வெற்றி கதாநாயகனாக நடித்துள்ள ஆக்சன் திரில்லர் திரைப்படமான இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.
ஒரு வாலிபனுக்கும், நிழல் உலக வணிக மாபியாக்களுக்கும் இடையே நடைபெறும் போராட்டமே இப்படத்தின் மையக்கரு. நம் வாழ்வில் சாதாரணமாக கடந்து செல்லும் ஒரு விசயம், எப்படி உலக அளவிலான வணிகமாக மாறியது என்பதை இதுவரை கண்டிராத புதுமையான கதைக்களத்தில் தயாராகி உள்ளது. அதிரடி ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இப்படத்தில் நாயகனாக வெற்றி நடிக்க, பிரியாலயா நாயகியாக நடித்துள்ளார். தயாரிப்பாளர் எம். மூர்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, லிவிங்ஸ்டன், துளசி, பிக்பாஸ் அபிராமி, ஏ.வெங்கடேஷ், அருள் டி. சங்கர், விஜய் டிவி ராமர், ஜீவா ரவி, அஜித் விக்னேஷ், கராத்தே வெங்கடேஷ், ஜப்பான் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் முழு படப்பிடிப்பும் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், விரைவில் படத்தின் டிரெய்லரும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மிளகை 'பிளாக் கோல்டு' என்று அழைக்கின்றனர்.
- மிளகில் உள்ள விட்டமின் சி நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
நம் இந்திய சமையலை பொருத்த வரை மிளகு என்பது மிக முக்கியமான பொருளாகும் சேர்க்கப்படுகிறது. இந்த கருப்பு மிளகை 'பிளாக் கோல்டு' என்று அழைக்கின்றனர். எனவே இந்த கொரோனா தொற்று நோய் கால கட்டத்தில் வீட்டிலேயே மிளகு கஷாயம் செய்து குடிப்பது காய்ச்சல், சளி, இருமல் மற்றும் தொண்டை புண் போன்ற பிரச்சினைகளை களைய உதவி செய்யும். இவ்வளவு நன்மைகள் தரும் இந்த மிளகு கஷாயத்தை எப்படி செய்யலாம் வாங்க தெரிஞ்சுக்கலாம்.
மிளகில் உள்ள ஊட்டச்சத்து
கருப்பு மிளகில் ஏராளமான வைட்டமின்கள், தயமின், ரிபோப்ளவின், வைட்டமின் சி, ஈ, பி6 மற்றும் கே போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கி இருக்கிறது. அதேமாதிரி ஜிங்க், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் காணப்படுகிறது. இதனாலேயே இந்த மிளகை நிறைய மருத்துவ நன்மைகளுக்கு பயன்படுத்துகின்றனர். மிளகில் உள்ள விட்டமின் சி நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.
மிளகு கஷாயம் தயாரிக்க கருப்பு மிளகு, துளசி, பனை வெல்லம், சர்க்கரை மற்றும் தண்ணீர் போன்ற பொருட்கள் தேவைப்படுகிறது. இந்த மிளகு கஷாயத்தை வெறும் 20 நிமிடங்களில் செய்து உங்க சளித்தொல்லையை நீக்கி விட முடியும்.
தேவையான பொருட்கள்:
கருப்பு மிளகு - 1/4 கப்
துளசி : 10 எண்ணிக்கை
பனை வெல்லம் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் கருப்பு மிளகை போட்டு வெடிக்கும் வரை நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதை உரலில் போட்டு நன்றாக பொடியாக்கி கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.
உடைத்த மிளகு அதனுடன் துளசி, பனை வெல்லம் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். 15 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து சூடுபடுத்த வேண்டும். அதன்பிறகு ஒரு வடிகட்டியை கொண்டு கஷாயத்தை வடிகட்ட வேண்டும். இந்த கஷாயத்தை குடித்து வந்தால் ஜீரணக்கோளாறு, இருமல் மற்றும் ஜலதோஷம் அறிகுறிகள் குறையும்.
நன்மைகள்
மிளகில் உள்ள பைபரைன் வயிற்றில் உள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை சுரக்க வைத்து ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது. மலச்சிக்கல், வாய்வுத்தொல்லை, வயிற்றுபோக்கை போக்குகிறது. இதில் உள்ள விட்டமின் சி சாதாரண ஜலதோஷம், இருமலுக்கு எதிராக ஆன்டிபயாடிக் ஆக செயல்படுகிறது.
சருமம் வயதாவது, சரும சுருக்கங்கள் மற்றும் சரும கோடுகள் போன்ற அறிகுறிகளை இதில் உள்ள வைட்டமின் சி குறைக்கிறது. இதன் ஆன்டிபயாடிக் தன்மை நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்று நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது.






