search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "black eyed beans"

    • ஒரே வகையான சாகுபடியை மேற்கொள்ளாமல், சந்தை வாய்ப்புகள் அடிப்படையில், மாற்று சாகுபடியையும் சில விவசாயிகள் மேற்கொள்கின்றனர்.
    • கடந்த சில ஆண்டுகளாக, பொரியல் தட்டை சாகுபடிக்கு உடுமலை பகுதி விவசாயிகளிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது

    குடிமங்கலம் :

    உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரத்தில், கிணற்றுப்பாசனத்துக்கு ஆண்டு முழுவதும், தக்காளி, கத்தரி உள்ளிட்ட சாகுபடிகள் மேற்கொள்ளப்படுகிறது.தொடர்ச்சியாக ஒரே வகையான சாகுபடியை மேற்கொள்ளாமல், சந்தை வாய்ப்புகள் அடிப்படையில், மாற்று சாகுபடியையும் சில விவசாயிகள் மேற்கொள்கின்றனர்.அவ்வகையில் கடந்த சில ஆண்டுகளாக, பொரியல் தட்டை சாகுபடிக்கு உடுமலை பகுதி விவசாயிகளிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.கேரளாவில், அவியல், பொரியல், கூட்டு என பொரியல் தட்டை உணவில் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.எனவே இப்பகுதிகளில் விளையும் பொரியல் தட்டை, கேரள மாநிலம் மூணாறு, மறையூர் மற்றும் பாலக்காடு பகுதிகளுக்கு, விற்பனைக்கு செல்கிறது.முக்கிய சீசனின் போது கேரள மாநில வியாபாரிகள் விளைநிலங்களுக்கு நேரடியாக வந்து, கொள்முதல் செய்கின்றனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    பொரியல் தட்டை அனைத்து வகை நிலங்களிலும், அனைத்து பருவத்திலும் சாகுபடி செய்யலாம். குளிர் சீதோஷ்ண நிலை உள்ள உடுமலை சுற்றுப்பகுதிகளில் நல்ல மகசூல் கிடைக்கிறது.விதைப்பு செய்த, 50வது நாள் முதல் காய்கள் தினமும் பறிக்கலாம். நாள்தோறும் ஏக்கருக்கு 100 முதல் 150 கிலோ வரை மகசூல் கிடைக்கிறது.ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. 10 டன் வரை மகசூல் கிடைக்கிறது.கேரளா மட்டுமல்லாது உள்ளூரிலும், சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தால் அனைத்து சீசன்களிலும் பொரியல்தட்டைக்கு நிலையான விலை கிடைக்கும்.இதே போல், தோட்டக்கலைத்துறை வாயிலாக சாகுபடிக்கு தேவையான விதைகளை விற்பனை செய்தால் பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    ×