என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bhojshala site"

    • தொழுகைக்காக வரும் முஸ்லிம் நபர்களின் பட்டியலை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்க வேண்டும்
    • போஜ்சாலா வளாகத்தில் செவ்வாய்க்கிழமைகளில் இந்துக்கள் பூஜையும், வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம்கள் தொழுகையும் நடத்தி வருகின்றனர்

    மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் உள்ள சர்ச்சைக்குரிய போஜ்சாலா-கமல் மௌலா மசூதியில் நாளை, வசந்த பஞ்சமியை முன்னிட்டு சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை இந்துக்கள் பிரார்த்தனை செய்ய இந்திய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதே நேரத்தில் முஸ்லிம்கள் அன்று மதியம் 1 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தொழுகை நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் தொழுகைக்காக வரும் முஸ்லிம் நபர்களின் பட்டியலை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. நாளை போஜ்சாலா வளாகத்தில் தொழுகை மற்றும் பூஜைகள் நடத்த இரு சமூகத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து இந்திய தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜாய்மல்யா பாக்சி மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை அளித்துள்ளது.

    இரு தரப்பினரும் பரஸ்பர மரியாதையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்காக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2003, ஏப்ரல் 7-ம் தேதி இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை செய்த ஏற்பாட்டின்படி, போஜ்சாலா வளாகத்தில் செவ்வாய்க்கிழமைகளில் இந்துக்கள் பூஜையும், வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம்கள் தொழுகையும் நடத்தி வருகின்றனர்.

    இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையின் பாதுகாப்பில் உள்ள 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போஜ்சாலா நினைவிடத்தை, இந்துக்கள் 'வாக்தேவி' (சரஸ்வதி தேவி) கோயில் என்று கருதுகின்றனர். அதேவேளையில், முஸ்லிம் சமூகத்தினர் இதனை 'கமல் மௌலா மசூதி' என்று அழைக்கின்றனர். 

    ×