என் மலர்
நீங்கள் தேடியது "Ayyan Devotees"
- பம்பை முதல் சபரிமலை வரை உழவாரப்பணி நடக்க உள்ளது.
- அய்யப்ப பக்தர்கள் 250 பேர் கொண்ட குழுவினர் வீரராகவப் பெருமாள் கோவிலில் இருந்து புறப்படுகின்றனர்.
திருப்பூர் :
அகில பாரத அய்யப்ப சேவா சங்கத்தின் திருப்பூர் மாவட்ட யூனியன் சார்பில் பம்பை முதல் சபரிமலை வரை உழவாரப்பணி நடக்க உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை அய்யப்ப பக்தர்கள் 250 பேர் கொண்ட குழுவினர் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட தொண்டர்படை நிர்வாகி சுனில்குமார் குருசாமி தலைமையில் நாளை 20-ந் தேதி இரவு 8:30 மணிக்கு திருப்பூரில் வீரராகவப் பெருமாள் கோவிலில் இருந்து புறப்படுகின்றனர்.
வருகிற 21-ந் தேதி அதிகாலை உழவாரப்பணியை தொடங்க உள்ளனர். முதலில் பம்பை நதி படிக்கட்டு பகுதியையும், பிறகு கன்னிமூல கணபதி கோவிலை சுற்றியுள்ள பகுதிகளை தண்ணீர்விட்டு கழுவி சுத்தம் செய்கின்றனர்.சுப்பிரமணியர் கோவில், மரக்கூட்டம், சரங்குத்தி, நடப்பந்தல் பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றி சுத்தம் செய்ய இருக்கின்றனர். இரவு 18 படிகளையும் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தல், சபரிமலை சன்னிதானம் மற்றும் சுற்றியுள்ள இடங்கள்,மஞ்ச மாதா கோவில், பாண்டி தாவளம் பகுதிகளை சுத்தம் செய்கின்றனர்.வருகிற 22-ந் தேதி அய்யப்ப தரிசனம் முடித்து சபரி பீடம், அப்பாச்சி மேடு, நீலிமலை, பம்பை பஸ் நிலையம் பகுதிகளை சுத்தம் செய்து, உழவாரப்பணியை நிறைவு செய்து திருப்பூர் திரும்ப இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.