என் மலர்
நீங்கள் தேடியது "Ayurvedic hospital"
கோவை:
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை கோவை வந்தார்.
விமான நிலையத்தில் இருந்து கணபதி காந்திமாநகரில் உள்ள தனியார் ஆயுர் வேத மருத்துவமனைக்கு சென்றார்.
முதுகுவலிக்கு இயற்கை முறையில் சிகிச்சை பெறுவதற்காக அவர் சேர்ந்துள்ளதாகவும், 5 நாட்கள் தங்கி ஆயுர்வேத சிகிச்சை பெற உள்ளதாகவும் அவரது பாதுகாவலர்கள் தெரிவித்தனர். ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள ஆயுர் வைத்ய சாலையில் மூலிகை மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். அங்கு கேரள ஆயுர் வேத முறையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்போது முதுகுவலிக்காக கணபதியில் உள்ள இயற்கை வழி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முன்னதாக விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வத்திடம் நிருபர்கள் பேட்டி எடுக்க முயன்றனர். அவர் பேட்டி அளிக்க வில்லை. நான் எனது சொந்த விஷயமாக வந்துள்ளேன் என கூறி விட்டு காரில் சென்றார். #OPanneerSelvam






