என் மலர்
நீங்கள் தேடியது "auto bus crash"
நாகர்கோவில்:
நாகர்கோவில் இளங்கடை பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 45). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இடலாக்குடி உதிரம் பட்டியை சேர்ந்தவர் குமாரதாஸ். இவரது மனைவி இசக்கியம்மாள் (60), சுதா (45) ஆகிய இருவரும் ஆட்டோவில் மார்த்தாண்டத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றனர்.
மார்த்தாண்டம் பம்மம் பகுதியில் ஆட்டோ சென்று கொண்டிருந்த போது எதிரே திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த அரசு பஸ் ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. ஆட்டோவில் இருந்து இசக்கியம்மாள், சுதா, ஆட்டோ டிரைவர் மனோகரன் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
மனோகரன், சுதா இருவரும் சிகிச்சைக்காக நாகர்கோவில் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி இன்று காலை இசக்கியம்மாள் பரிதாபமாக இறந்தார்.
கவுண்டம்பாளையம்:
நாகர்கோவிலில் இருந்து ஊட்டிக்கு அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சை கன்னியாகுமரியை சேர்ந்த கிறிஸ்டோபர் ஓட்டினார். இன்று காலை பெரியநாயக்கன் பாளையம் பஸ் நிலையம் அருகே பஸ் வந்தது.
அப்போது எதிரே மேட்டுப்பாளையத்தில் இருந்து கவுண்டம்பாளையத்திற்கு பாலசுப்பிரமணியம் (வயது 48) என்பவர் ஆட்டோ ஓட்டி வந்தார். அங்குள்ள பாலம் அருகே வந்தபோது ஆட்டோ மீது பஸ் ஏறியது. இந்த விபத்தில் ஆட்டோ நொறுங்கியது. அதில் சிக்கிய பாலசுப்பிரமணியம் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பலியானார்.
இதுகுறித்து பெரிய நாயக்கன் பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பாலசுப்பிரமணியத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய பஸ் டிரைவரை கைது செய்து பஸ்சை பறிமுதல் செய்தனர். பயணிகள் மாற்றுபேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.






