search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Assam MLA"

    • பிரச்சனைகளைத் தீர்க்காமல் ராகுல் காந்தி யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
    • இந்த யாத்திரை செய்வதன் மூலம் அவர் நேரத்தை வீணடிக்கிறார் என்றார் அசாம் எம்.எல்.ஏ.

    கவுகாத்தி:

    அசாம் எம்.எல்.ஏ.வும், அனைத்து இந்திய ஒருங்கிணைந்த ஜனநாயக முன்னணி கட்சியின் பொதுச் செயலாளருமான ரபிகுல் இஸ்லாம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மக்களவை தேர்தலுக்கு இன்னும் இரு மாதங்கள் மட்டுமே உள்ளன. காங்கிரஸ் கட்சிக்குள் பல குழுக்கள் உள்ளன. ஆனால் ராகுல் காந்தி யாத்திரை செய்கிறார்.

    காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பலர் அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர்.

    மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மூத்த தலைவர் பா.ஜ.க.வில் இணைந்தார். அசாமில் முன்னாள் அமைச்சர், தலைவர்கள் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர். நிதிஷ்குமார் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளார்.

    இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்காமல் ராகுல் காந்தி யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரை செய்வதன் மூலம் அவர் நேரத்தை வீணடிக்கிறார் என நினைக்கிறேன்.

    காங்கிரஸ் கட்சி தியாகம் செய்து மற்ற அரசியல் கட்சிகளுக்கு சீட் கொடுக்க வேண்டும். பிராந்திய கட்சிகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். இதைச் செய்வதன் மூலம் மட்டுமே அவர்கள் நன்மைகளைப் பெறுவார்கள்.

    மக்களவை தேர்தலுக்கு பா.ஜ.க. முழு வீச்சில் தயாராகி வருகிறது. மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா அசாமில் தங்கியிருந்தார். இப்போது பிரதமர் இங்கு வந்துள்ளார். பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டாவும் அசாம் சென்றார். பா.ஜ.க. மூத்த தலைவர்கள் ஒவ்வொரு மாதமும் மாநிலத்திற்கு வந்து கூட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் காங்கிரஸ் தூங்கிக் கொண்டிருக்கிறது, அவர்கள் எதுவும் செய்யவில்லை என காட்டமாக தெரிவித்தார்.

    ×