search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "asks"

    அரசு டாக்டர்களின் பணி ஓய்வு வயதை 65 ஆக உயர்த்துவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றுபவர் கே.புருஷோத்தமன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    இந்திய மருத்துவ கவுன்சில் கடந்த 2007-ம் ஆண்டு கொண்டுவந்த சட்டத்திருத்தத்தின்படி, அரசு டாக்டர்களின் பணி ஓய்வு பெறும் வயது 70 என்று நிர்ணயம் செய்துள்ளது.

    இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிக்கையின் அடிப்படையில், அரியானா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் அரசு டாக்டர்களின் ஓய்வு வயது 58-ல் இருந்து 65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஓய்வு வயதை உயர்த்தியதை பிரதமரும் வரவேற்றுள்ளார்.



    ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதனால், பொதுமக்களுக்கு மிகவும் நன்மை ஏற்படும். அனுபவம் வாய்ந்த டாக்டர்களிடம் அவர்கள் சிகிச்சை பெறலாம். அதுமட்டுமல்ல, மருத்துவ மாணவர்களுக்கும் நன்மை ஏற்படும்.

    எனவே, அரசு டாக்டர்களின் ஓய்வு வயதை உயர்த்தும்படி தமிழக அரசுக்கு கடந்த ஆண்டு நவம்பர் 23-ந்தேதி கோரிக்கை மனு கொடுத்தேன். இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. பணி ஓய்வுபெறும் வயதை உயர்த்தினால், என் வயதையொட்டி உள்ள 800 டாக்டர்கள் பயன் அடைவார்கள்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    இந்த மனுவை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் விசாரித்தனர்.

    பின்னர், மனுதாரர் கடந்த ஆண்டு கொடுத்த கோரிக்கை மனுவை தமிழக தலைமை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சட்டப்படி பரிசீலிக்க வேண்டும். அப்போது மனுதாரர் மட்டுமல்லாமல், அரசு டாக்டர்களின் கருத்தையும் கேட்கவேண்டும். அதன்பின், ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது குறித்து தகுந்த முடிவினை எடுக்கவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 
    நீட் தேர்வில் தவறான கேள்விகளுக்கு முழு மதிப்பெண் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். #NEETexam #TTVDinakaran
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தோ்வில் சுமார் 25,000 மாணவா்கள் தமிழ் மொழியில் எழுதியுள்ள நிலையில், கேட்கப்பட்ட கேள்விகளில் 66 பிழைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், மாணவா்களுக்கு 196 மதிப்பெண்கள் பாதிக்கப்படுகிறது. இப்படி பாதிக்கப்படுமானால் தமிழ் மொழியில் படித்த அரசு பள்ளி மாணவா்கள் மருத்துவ கல்லூாியில் சேருவதற்கான வாய்ப்பு நிச்சயமாக குறைவு.

    எனவே தமிழக அரசு, மாணவா்கள் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக பிரதமரை சந்தித்து இந்த தவறான கேள்விகளுக்கான முழுமதிப்பெண்கள் தமிழகத்து மாணவா்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவவாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #NEETexam #TTVDinakaran 
    ×