search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Asghar Stanikzai"

    சுழற்பந்து வீச்சில் இந்தியாவை விட நாங்கள் சிறந்தவர்கள் என்று ஆப்கானிஸ்தான் டெஸ்ட் அணி கேப்டன் தெரிவித்துள்ளார். #INDvAFG
    ஆப்கானிஸ்தான் டெஸ்ட் அந்தஸ்து பெற்றதுடன், வரலாற்று சிறப்புமிக்க முதல் டெஸ்டில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் இந்தியாவை சந்திக்கிறது. இந்த போட்டி வருகிற 14-ந்தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது.

    நம்பர் ஒன் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறோம் என்ற அச்சம் துளியளவு கூட ஆப்கானிஸ்தான் வீரர்களிடம் இல்லை. மேலும், சுழற்பந்து வீச்சில் இந்தியாவை விட நாங்கள் சிறந்தவர்கள் என்று அந்த அணியின் கேப்டன் அஸ்கர் ஸ்டானிக்சாய் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் ஸ்டானிக்சாய் கூறுகையில் ‘‘நாங்கள் ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், மொகமது நபி, ரஹ்மத் ஷா, ஜகிர் கான் போன்ற தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளோம் என்பதை உலகமே அறியும். இவர்களை பின்பற்றி ஏராளமான சுழற்பந்து வீச்சாளர்கள் உருவாகி வருகிறார்கள். இது சிறப்பான விஷயம். என்னுடைய கருத்தின்படி, இந்தியாவை விட நாங்கள் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை வைத்துள்ளோம்.



    அயர்லாந்து தனது முதல் டெஸ்டில் பாகிஸ்தானை எதிர்த்து சொந்த மண்ணில் விளையாடியது. இதனால் அவர்களால் நெருக்கடி கொடுக்க முடிந்தது. நாங்கள் இந்தியாவில் விளையாட இருக்கிறோம். இங்கு சுழற்பந்து வீச்சு சிறப்பானதாக இருக்கும். நாங்கள் இந்தியாவிற்கு நெருக்கடி கொடுப்போம். அதேபோல் எங்களுக்கும் நெருக்கடி இருக்கும். இந்தியாவிற்கு எதிரான போட்டி சிறந்ததாக இருக்கும்’’ என்றார்.
    நாங்கள் இந்தியாவிற்கு எதிராகத்தான் விளையாடுகிறோம், விராட் கோலிக்கு அல்ல என்று ஆப்கானிஸ்தான் கேப்டன் தெரிவித்துள்ளார். #INDvAFG
    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி டெஸ்டில் விளையாடுவதற்கான அந்தஸ்தை கடந்த வருடம் பெற்றது. அந்த அணி வரலாற்று சிறப்புமிக்க முதல் டெஸ்டில் இந்தியாவிற்கு எதிராக விளையாடுகிறது. இந்த டெஸ்ட் பெங்களூருவில் அடுத்த மாதம் 14-ந்தேதி நடக்கிறது.

    இந்தியா இங்கிலாந்துக்கு சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடுவதற்காக இந்திய அணி கேப்டன் விராட் கோலி இங்கிலாந்து சென்று கவுன்டி போட்டியில் விளையாட இருக்கிறார்.

    இந்தியாவின் முன்னாள் வீரர்கள் பலர் விராட் கோலி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் விளையாட வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் அதை ஏற்கவில்லை.

    இந்நிலையில் நாங்கள் இந்தியாவிற்கு எதிராகத்தான் விளையாடுகிறோம். விராட் கோலிக்கு எதிராக அல்ல என்று ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கார் ஸ்டானிக்சாய் கூறியுள்ளார்.



    இதுகுறித்து ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கார் ஸ்டானிக்சாய் கூறுகையில் ‘‘அனைத்து இந்திய வீரர்களும் சிறந்த வீரர்கள். ஒவ்வொரு வீரர்களும் விராட் கோலியை போன்றவர்கள். நாங்கள் இந்தியாவுடன்தான் விளையாடுகிறோம், விராட் கோலியை எதிர்த்து இல்லை என்பதை நான் நம்புகிறேன்.

    இந்திய சூழ்நிலை சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானதாக இருக்கும். அதிர்ஷ்டவசமாக நாங்கள் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை பெற்றுள்ளோம். எங்களது பேட்ஸ்மேன்கள் நல்ல ஃபார்மில் உள்ளனர். கடந்த மூன்று அல்லது நான்கு வருடத்தில் எங்கள் அணியின் காம்பினேசன் சிறப்பாக உள்ளது. நேர்மறையான சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற முயற்சி செய்வோம்’’ என்றார்.
    ×