search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arretst"

    • கத்தியைக் காட்டி வேல்முருகனிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனா்.
    • கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் வேல்முருகன் (வயது 45), ஆட்டோ ஓட்டுநா். இவா் கடந்த ஏப்ரல் 3ந் தேதி காலை அதே பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியாக காரில் வந்த 5 போ், முகவரி கேட்பது போல கையில் மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி வேல்முருகனிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனா். வேல்முருகன் கூச்சலிடவும், அருகில் இருந்தவா்கள் வருவதற்குள் காரில் வந்தவா்கள் தப்பிச் சென்றனா்.

    இது குறித்து பெருமாநல்லூா் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். பின்னா் இதில் தொடா்புடைய கரூா், செங்குந்தபுரம், 80 அடி சாலை, சி.எஸ். காம்ப்ளக்ஸ் பகுதியைச் சோ்ந்த நவநீதகிருஷ்ணன் மகன் தேவா (23), கரூா், வ. உ. சி நகா், 3வது வீதியைச் சோ்ந்த பரமசிவன் மகன் சரவணன் (22), தேனி, உத்தமபாளையம், பூதிபுரம், தெலுங்கு செட்டியாா் வீதியைச் சோ்ந்த ராமா் மகன் ஈஸ்வரன் (28), பல்லடம் அருள்புரம், செந்தூா் காலனி, பால்காரா் காம்பவுண்டில் வசித்து வரும் சென்னை, மேற்கு முகப்போ் பகுதியைச் சோ்ந்த சுசிதரன் மகன் தினேஷ்குமாா் (24), திருப்பூா் தாராபுரம் சாலை, பி. கே. ஆா் காலனியைச் சோ்ந்த பாலமுருகன் மகன் முத்துக்குமாா்(29) ஆகிய 5 பேரை கைது செய்தனா்.

    இவா்கள் கரூா், பல்லடம், திருப்பூா், பெருமாநல்லூா் உள்ளிட்ட காவல் எல்லைப் பகுதிகளில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடையவா்கள் என்பது தெரிந்தது. இதையடுத்து 5 பேரையும் மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி குண்டா் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.

    • வாசுதேவநல்லூர் பஜாரில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
    • மாயசுடலை, கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. போலீசார், அவரிடம் இருந்து 110 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்

    வாசுதேவநல்லூர்:

    வாசுதேவநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் நேற்று அப்பகுதியில் ரோந்த சென்றனர். அப்போது பஜாரில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

    அவரை போலீசார் பிடித்து விசாரித்தபோது அவர் அதே பகுதியை சேர்ந்த மாயசுடலை(வயது 21) என்பதும், கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 110 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    ×