search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arrest of wife"

    • குழந்தைகளை அழைத்துக் கொண்டு செம்மாங்குப்பத்திற்கு வந்து விட்டார்.
    • குடிப்பழக்கத்தை நிறுத்தி விடுவதாகவும், தன்னுடன் சேர்ந்து வாழுமாறும் கேட்டுள்ளார்.

    கடலூர்:

    வடலூர் அருகேயுள்ள திடீர் குப்பத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 29). வெல்டிங் வேலை செய்து வந்தார். இவருக்கும் பண்ருட்டி காடாம்புலியூரை அடுத்த சந்தியாவிற்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். ராமமூர்த்திக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இதில் ஆத்திரமடைந்த சந்தியா, குழந்தைகளை அழைத்துக் கொண்டு செம்மாங்குப்பத்திற்கு வந்து விட்டார். இந்நிலையில் நேற்று மாலை சந்தியாவை தேடி ராமமூர்த்தி செம்மாங்குப்பத்திற்கு வந்தார். குடிப்பழக்கத்தை நிறுத்தி விடுவதாகவும், தன்னுடன் சேர்ந்து வாழுமாறும் கேட்டுள்ளார். இதில் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் அங்கிருந்த கயிறை எடுத்த சந்தியா, தனது தந்தையின் உதவியுடன், ராமமூர்த்தியின் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். இது குறித்து தகவல் அறிந்த முத்தாண்டிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ராமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா செம்மாங்குப்பத்திற்கு விரைந்து சென்று சம்பவம் குறித்து விசாரனை நடத்தினார். ராமமூர்த்தியின் மனைவி சந்தியாவை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியே கணவனை கொலை செய்த சம்பவம் பண்ருட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×