search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Armuganeri"

    • தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜனதா மண்டல நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டம் ஆறுமுகநேரியில் நடைபெற்றது.
    • சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கலந்து கொண்டு பேசினார்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் மண்டல நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதி களுக்கான ஆலோசனை கூட்டம் ஆறுமுகநேரியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட பொதுச் செயலா ளர்கள் ராஜா, சிவமுருக ஆதித்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கலந்து கொண்டு பேசினார். கடந்த மாதம் 13, 14-ந் தேதிகளில் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை யின் என் மண் என் மக்கள் பாதயாத்திரை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது பொதுமக்கள் அளித்த வரவேற்பு, அதற்குப் பிந்தைய கட்சியின் செயல்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    கூட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை தலைவர்கள் செல்வராஜ், ரேவதி, மாநில மகளிர் அணி செயலாளர் நெல்லையம்மாள், மாவட்ட செயலாளர்கள் கனல் ஆறுமுகம், அர்ஜுன், பாலாஜி, வீரமணி, மண்டல தலைவர்கள் ஆறுமுகநேரி முருகேச பாண்டியன், திருச்செந்தூர் நவமணிகண்டன், ஆழ்வை கிழக்கு குமரேசன், திருச்செந்தூர் ஒன்றிய தலைவர் ராமகிருஷ்ண குமார், அரசு தொடர்பு மாவட்ட தலைவர் பாலசுப்ரமணியன், சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் ஸ்டீபன் லோபோ, மத்திய அரசு திட்டங்கள் பிரிவு ஆறுமுகநேரி மண்டல தலைவர் அமலரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆறுமுகநேரி மெயின் பஜார் ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தின் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
    • முகாமில் 7 பேர் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி மெயின் பஜார் ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தின் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமில் தூரப்பார்வை, கிட்டப்பார்வை, கண்புரை நோய், அடிக்கடி தலைவலி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண் பரிசோதனை நடத்தப்பட்டது. முகாமில் சுமார் 60 பேர் பரிசோதனை செய்து கொண்டனர். இவர்களில் 7 பேர் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர். பலருக்கு கண்ணாடி வழங்கப்பட்டது.

    முகாமிற்கான ஏற்பாடுகளை கண் பரிசோதனை குழு மருத்துவர் இந்திரா, மக்கள் தொடர்பு அலுவலர் சுப்பிரமணி, ஆலோசகர் ராமலெட்சுமி, உதவியாளர் பேச்சுகுமார், ஆறுமுகநேரி ஆட்டோ ஒட்டுநர் சங்க தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் கிளாட்சன், பொருளாளர் சவரிமுத்து ஆகியோர் செய்திருந்தனர்.

    ×