search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AREA SABHA MEETING"

    • 3-வது வார்டு ஹவுசிங் போர்டு பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் மாநகர மேயர் ஜெகன் பெரிய சாமி கலந்து கொண்டு பொது மக்களிடம் மனுக்களை பெற்றார்.
    • இதேபோல் மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் நடைபெற்ற கூட்டங்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதி கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர பகுதிகளில் அமைந்துள்ள வார்டுகளுக்கு தலா 5 குழுக்கள் வீதம் 60 வார்டுகளுக்கு 300 பகுதி சபா குழுக்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளது. இதன் முதல் கூட்டம் கடந்தாண்டு நடை பெற்று பொதுமக்களின் கோரிக்கைகள் மனுக்களாக பெறப்பட்டு திட்டங்களாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக நேற்று அந்தந்த பகுதிகளில் பகுதி சபா கூட்டம் நடை பெற்றது. கூட்டத்தில் மாநகராட்சி அலுவலர்கள், வார்டு கவுன்சிலர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். 3-வது வார்டு ஹவுசிங் போர்டு பகுதியில் கவுன்சிலர் ரெங்கசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநகர மேயர் ஜெகன் பெரிய சாமி கலந்து கொண்டு மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள், மக்கள் நலத்திட்டங்கள் குறித்து விளக்க உரையாற்றி பொது மக்களிடம் மனுக்களை பெற்றார்.

    நிகழ்ச்சியில் மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் பிரபாகரன் ஜாஸ்பர் மற்றும் மாவட்ட தி.மு.க. ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் டி.டி.சி.ரா ஜேந்திரன் உள்ளிட்ட பகுதி முக்கிய நிர்வாகிகள் ஏராள மா னோர் கலந்து கொண்டனர்.

    57-வது வார்டு எம். சவேரியார்புரம் கணேஷ் நகர் மேற்கு பகுதியில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்தில் கலந்து கொண்ட திரளான பொதுமக்கள் கவுன்சிலர் ஜெயலட்சுமி சுடலைமணியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.அந்த மனுவில், எங்கள் பகுதியில் மக்கள் பயன் பாட்டில் இருந்து வந்த கழிவு நீர் வடிகால் அகற்ற ப்பட்டு மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட மழை நீர் வடிகாலில் பொதுமக்கள் குளிக்கும் தண்ணீர், துணி துவைக்கும் தண்ணீரை விட அனுமதிக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

    இதேபோல் மாநகரா ட்சியின் அனைத்து வார்டு களிலும் நடைபெற்ற கூட்டங்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதி கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். இதன்படி நடைபெற்ற பகுதி சபா கூட்டங்களில் மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், அன்ன லட்சுமி, கோட்டு ராஜா, கவுன்சிலர்கள் ராம கிருஷ்ணன், கீதாமுருகேசன், கவுன்சிலர்கள் டாக்டர் சோமசுந்தரி, ரிக்டா ஆர்தர் மச்சாது, விஜயகுமார், சுயம்பு, பச்சிராஜ், முத்து வேல், ராஜதுரை, சந்திர போஸ், வெற்றிச்செல்வன் உட்பட அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டு பொது மக்களிடம் மனுக்களை பெற்றனர்.

    • கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு வெங்கமேடு பகுதியில், பகுதி சபா கூட்டம் நடைபெற்றது
    • கூட்டத்தில் வார்டில் ரோடு அமைத்தல், இலவச வீட்டு மனை பட்டா வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    கரூர்,

    கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு வெங்கமேடு பகுதியில், பகுதி சபா கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கரூர் மாநகராட்சி 9-வது வார்டு மாமன்ற உறுப்பினரும், கரூர் வடக்கு நகர காங்கிரஸ் தலைவருமான ஸ்டீபன் பாபு கலந்து கொண்டார். கூட்டத்தில் பொதுமக்கள் பேசுகையில், தங்கள் வார்டில் ரோடு அமைத்தல், இலவச வீட்டு மனை பட்டா வழங்குதல், முதியோர் உதவித்தொகை கேட்டு மனுக்களை கொடுத்தனர்.

    இதற்கு பதில் அளித்து பேசிய மாநகராட்சி உறுப்பினர் ஸ்டீபன் பாபு கொடுக்கப்பட்ட மனுக்கள் கோரிக்கையாக மாநகராட்சியில் கொடுத்து நிறைவேற்றித் தரப்படும் என உறுதி கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் வார்டு செயலாளர் சண்முகம், சபா உறுப்பினர்கள் அருள்முருகன், சுப்பிரமணி, அண்ணாதுரை மற்றும் சேகர், ஜோதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×