search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "appar"

    • இதைக் கேட்போர் எல்லையற்ற ஆச்சரியத்தையும் பிரமிப்பையும் மந்திரச் சொற்களினால் வரும் ஆனந்தத்தையும் அடைவர்.
    • ராவணனின் கூற்றுப்படி இதைக் கேட்போர் சிறந்த சிவபக்தியைப் பெற்று சிவனின் அருளும் பெற்று வாழ்வர்

    மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று தான் சிவபெருமான் பதஞ்சலி முனிவருக்கும் வியாக்ரபாதருக்கும் தன் திரு நடனத்தை ஆடிக் காண்பித்தார்.

    எல்லையற்ற விண்வெளியைக் குறிக்கும் சிதம்பரத்தில் இந்நாள் பெரும் விழாவாக இன்றும் கொண்டாடப்படுகிறது.

    இந்தத் திருநடனம் உலகின் இயக்கத்தைச் சுட்டிக் காட்டும் அற்புத நடனம்.

    இறைவனின் சிவதாண்டவத்தைக் கண்டு பிரமித்துப் போன சிவபக்தனான ராவணன் சிவதாண்டவ ஸ்லோகத்தை இயற்றியுள்ளான்.

    இதைக் கேட்போர் எல்லையற்ற ஆச்சரியத்தையும் பிரமிப்பையும் மந்திரச் சொற்களினால் வரும் ஆனந்தத்தையும் அடைவர்.

    ராவணனின் கூற்றுப்படி இதைக் கேட்போர் சிறந்த சிவபக்தியைப் பெற்று சிவனின் அருளும் பெற்று வாழ்வர்

    இத்தகைய பெருமை கொண்ட ஆதிரை நாளை அப்பர் எப்படிப் பாடி விளக்குகிறார் என்று பாருங்கள்....

    பாடல் எண் : 1

    முத்துவிதான மணிப்பொற்கவரி முறையாலே

    பத்தர்களோடு பாவையர்சூழப் பலிப்பின்னே

    வித்தகக்கோல வெண்டலைமாலை விரதிகள்

    அத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.

    பாடல் எண் : 2

    நணியார் சேயார் நல்லார் தீயார் நாடோறும்

    பிணிதான் தீரும் என்று பிறங்கிக் கிடப்பாரும்

    மணியே பொன்னே மைந்தா மணாளா என்பார்கட்கு

    அணியான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.

    பாடல் எண் : 3

    வீதிகள் தோறும் வெண்கொடியோடு விதானங்கள்

    சோதிகள்விட்டுச் சுடர்மாமணிகள் ஒளிதோன்றச்

    சாதிகளாய பவளமும் முத்துத் தாமங்கள்

    ஆதியாரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.

    பாடல் எண் : 4

    குணங்கள்பேசிக் கூடிப்பாடித் தொண்டர்கள்

    பிணங்கித்தம்மிற் பித்தரைப்போலப் பிதற்றுவார்

    வணங்கிநின்று வானவர்வந்து வைகலும்

    அணங்கன் ஆதிரை நாளால் அது வண்ணம்.

    பாடல் எண் : 5

    நிலவெண்சங்கும் பறையும் ஆர்ப்ப நிற்கில்லாப்

    பலரும்இட்ட கல்லவடங்கள் பரந்தெங்கும்

    கலவமஞ்ஞை கார்என்று எண்ணிக் களித்துவந்து

    அலமர்ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.

    பாடல் எண் : 6

    விம்மா வெருவா விழியாத் தெழியா வெருட்டுவார்

    தம்மாண்பு இலராய்த் தரியார் தலையால் முட்டுவார்

    எம்மான் ஈசன் எந்தையென் அப்பன் என்பார்கட்கு

    அம்மான்ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.

    பாடல் எண் : 7

    செந்துவர் வாயார் செல்வன் சேவடி சிந்திப்பார்

    மைந்தர்களோடு மங்கையர்கூடி மயங்குவார்

    இந்திரனாதி வானவர்சித்தர் எடுத்தேத்தும் அந்திரன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.

    பாடல் எண் : 8

    முடிகள் வணங்கி மூவாதார் முன்செல்ல

    வடிகொள் வேய்த்தோள் வானரமங்கையர் பின்செல்லப்

    பொடிகள்பூசிப் பாடும்தொண்டர் புடைசூழ

    அடிகள் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.

    பாடல் எண் : 9

    துன்பநும்மைத் தொழாதநாள்கள் என்பாரும்

    இன்பநும்மை ஏத்து நாள்கள் என்பாரும்

    நும்பின் எம்மை நுழையப்பணியே என்பாரும்

    அன்பன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.

    பாடல் எண் : 10

    பாரூர்பௌவத் தானைபத்தர் பணிந்தேத்தச்

    சீரூர்பாடல் ஆடல் அறாத செம்மாப்பார்ந்து

    ஓரூர் ஒழியாது உலகமெங்கும் எடுத்தேத்தும்

    ஆரூரன்றன் ஆதிரை நாளால் அது வண்ணம்.

    அனைவருக்கும் பொருள் புரியும் வண்ணம் எளிதாக அமைந்துள்ளன இப்பாடல்கள்.

    • சக்தியின் மேனியை பொன்னிறமாக்கியதால் பொன்முகலி என்று மணிகங்கைக்கு பெயர்.
    • கணநாதரை வழிபட்டு கல்யாண உற்சவம் செய்பவருக்கு விரைவில் திருமணம் நடக்கும்.

    அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய தெய்வீக நால்வர் போன்று பிருங்கி முனிவரும் பிறப்புக்கு அப்பாற்பட்ட பரபிரும்மத்தை மட்டுமே வழிபடும் செம்மையான திருநெறியில் நிற்பவர். தோற்றம் அவதாரம் பிறப்பு போன்ற மாசு உள்ள ஜீவராசிகளான ஆண் தெய்வங்களையோ பெண் தெய்வங்களையோ எக்காரணத்தைக் கொண்டும் எந்த சூழ்நிலையிலும் பூஜை செய்து வணங்காத செம்மையான மனம் கொண்டவர். தன்னை பூஜை செய்து வழிபடவில்லை என்பதற்காக பராசக்தி பிருங்கி முனிவருக்கு எலும்புக் கூடாகப் போகுமாறு சாபம் கொடுத்தாள்.

    ஒரு சிறந்த சிவபக்தையாக இருந்தும் சிவபக்தர்களின் அருமை பெருமைகளையும் சிவபக்தியின் மகிமையையும் உணர்ந்து கொள்ள முடியாத அஞ்ஞானத்தினால் ஒரு சிறந்த சிவனடியாரை துன்புறுத்திய தீவினையின் பலனை பராசக்தி அனுபவிக்க நேர்ந்தது. அம்மன் மேனி தெய்வத்தன்மையை இழந்து துர்நாற்றம் எடுக்கலாயிற்று.

    மீண்டும் நறுமணத்தையும், தெய்வத்தன்மையையும் பெறுவதற்காக பராசக்தி திருக்காளஹஸ்திக்கு வந்தாள். நல்வினை, தீவினை என்ற இருவினைகளுக்கும் அப்பாற்பட்ட ஈசனை நினைத்து தவம் புரிந்தாள்.

    ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு போவதும், வருவதும் இல்லாமல் எல்லா உலகங்களிலும் எல்லா இடங்களிலும் நிறைந்து மறந்து உள்ள காற்றுப்பெருமான் திருச்சடையிலிருந்து கங்கைநீரைத் தெளித்தருளினார். அந்த நீர்த்துளிகள் நதியாகப் பெருக்கு எடுத்து ஓடின.

    கங்கை நீர்த்துளிகள் நதியானதால் அந்த நதி மணிகங்கை என்று பெயர் பெற்றது. சக்திதேவி அந்த மணிமங்கையில் சிவநாமம், ஓதி நீராடியபோது அவள் மேனியின் துர்நாற்றம் நீங்கிப் பொன்னிறமும், தெய்வத்தன்மையும் பெற்றாள். சக்தியின் மேனியை பொன்னிறமாக்கியதால் பொன்முகலி என்று மணிகங்கைக்கு பெயர் உண்டாயிற்று.

    பொன்முகலியில் நீராடிய பராசக்தி வாயுலிங்க பரம்பொருளை பூஜை செய்து வழிபட்டாள். அம்மனின் ஆணவத்தையும், அஞ்ஞனத்தையும் நீக்கியருளிய காளத்தீஸ்வரர் பராசக்தியை மெய்ஞானப் பூங்கோதையாக்கி நறுமணம் வீசச்செய்தார். அம்மனுக்கு ஞானஒளி வழங்கியதால் பரமேஸ்வரனுக்கு ஞானப்பிரகாசம் என்று திருநாமம் உண்டானது.

    திருமுறை ஞானப்பிரகாசத்தை போற்றுகின்றது. பராசக்தியை நறுமணம் வீசும் ஞானப்பூங்கோதையாக்கி அருளியதையே பரமேஸ்வரன் கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறை தும்பி....என்று தொடங்கும் பாடலில் எழுதிப் பாண்டியனிடமிருந்து பரிசில் பெறுவதற்காக தருமிக்குக் கொடுத்தருளினார்.

    காளத்தீஸ்வரரின் திருவருளால் மெஞ்ஞானமும், ஆணவமும் துர்நாற்றம் நீங்கி மெய்ஞானமும் பூவின் நறுமணமும் பெற்ற அம்மன் ஞானப்பூங்கோதை என்ற திருநாமத்துடன் தனிச் சன்னதியில் உள்ளாள். தனிக்கோவில் போன்று உள்ள இந்த பெரிய சன்னதி காளத்தீஸ்வரருக்கு பின்புறம் எதிர்திசையை நோக்கியவாறு அமைந்துள்ளது.

    கல்யாண உற்சவம்

    அம்மன் திருநாமம் வடமொழியில் ஞானப்பிரசுனாம்பா என்று வழங்கப்படுகின்றது. அம்மன் பிரதிஷ்டை செய்து பூஜை புரிந்த லிங்கங்கள் அம்மன் சன்னதியில் உள்ளன. அம்மனை தான பூங்கோதையாக்கி அருளிய கல்யாணசுந்தரர் எழுந்தருளியுள்ள கல்யாண மண்டபத்தில் திருக்கோயிலின் சிறந்த உற்சவங்களில் ஒன்றான கல்யாண உற்சவம் நடக்கின்றது.

    காளத்திக் கணநாதரை வழிபட்டு கல்யாண உற்சவம் நடத்துகின்றவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கின்றது. அம்மன் சன்னதிக்கு அருகே அக்கண்ணலிங்கம், நாதள்ளலிங்கம், காளத்தீசர் ஆகிய பல லிங்கங்கள் உள்ளன.

    • ஓம் அருள்நிறை அம்மையே போற்றி ஓம் அமுத நாயகியே போற்றி
    • ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி ஓம் கல்யாண சுந்தரியே போற்றி

    ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி

    ஓம் அகிலாண்டநாயகியே போற்றி

    ஓம் அருமறையின் வரம்«ப போற்றி

    ஓம் அறம் வளர்க்கும் அம்மையேபோற்றி

    ஓம் அரசிளங் குமரியே போற்றி

    ஓம் அப்பர் பிணிமருந்தே போற்றி

    ஓம் அமுத நாயகியே போற்றி

    ஓம் அருந்தவ நாயகியே போற்றி

    ஓம் அருள்நிறை அம்மையே போற்றி

    ஓம் ஆலவாய்க் கரசியே போற்றி

    ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி

    ஓம் ஆதியின் பாதியே போற்றி

    ஓம் ஆலால சுந்தரியே போற்றி

    ஓம் ஆனந்த வல்லியே போற்றி

    ஓம் இளவஞ்சிக்கொடியே போற்றி

    ஓம் இமையத்தரசியே போற்றி

    ஓம் இடபத்தோன் துணையே போற்றி

    ஓம் ஈஸ்வரியே போற்றி

    ஓம் உயிர் ஓவியமே போற்றி

    ஓம் உலகம்மையே போற்றி

    ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி

    ஓம் எண் திசையும் வென்றாய் போற்றி

    ஓம் ஏகன் துணையே போற்றி

    ஓம்ஐயம் தீர்ப்பாய்போற்றி

    ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி

    ஓம் ஒப்பிலா அமுதே போற்றி

    ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி

    ஓம் கற்றோர்க்கு இனியோய் போற்றி

    ஓம் கல்லார்க்கும் எளியோய் போற்றி

    ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி

    ஓம் கல்யாண சுந்தரியே போற்றி

    ஓம் கனகமணிக் குன்றே போற்றி

    ஓம் கற்பின் அரசியே போற்றி

    ஓம் கருணை யூற்றே போற்றி

    ஓம் கல்விக்கு வித்தே போற்றி

    ஓம் கனகாம்பிகையே போற்றி

    ஓம் கதிரொளிச் சுடரே போற்றி

    ஓம் கற்பனைக் கடந்த கற்பமே போற்றி

    ஓம் காட்சிக் கினியோய் போற்றி

    ஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி

    ஓம் காமாட்சி அம்பிகையே போற்றி

    ஓம் காளிகாம்பாள் அம்பிகையே போற்றி

    ஓம் கிளியேந்திய கரத்தோய்போற்றி

    ஓம் குலச்சிறை காத்தோய் போற்றி

    ஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றி

    ஓம் கூடற்கலாப மயிலே போற்றி

    ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி

    ஓம் சம்பந்தன் ஞானத்தாயே போற்றி

    ஓம் சக்தி வடிவே போற்றி

    ஓம் சங்கம் வளர்த்தாய் போற்றி

    ஓம் சிவகாமி சுந்தரியே போற்றி

    ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி

    ஓம் சிவயோக நாயகியே போற்றி

    ஓம் சிவானந்த வல்லியே போற்றி

    ஓம் சிங்கார வல்லியே போற்றி

    ஓம் செந்தமிழ்த் தாயே போற்றி

    ஓம் செல்வத்துக்கரசியே போற்றி

    ஓம் சேனைத் தலைவியே போற்றி

    ஓம் சொக்கர் நாயகியே போற்றி

    ஓம் சைவநெறி நிலைக்கச் செய்தோய் போற்றி

    ஓம் ஞானாம்பிகையே போற்றி

    ஓம் ஞானப் பூங்கோதையே போற்றி

    ஓம் தமிழ்க் குலச்சுடரே போற்றி

    ஓம் திருவுடையம்மையே போற்றி

    ஓம் திசையெல்லாம் புரந்தாய் போற்றி

    ஓம் திரிபுர சுந்தரியே போற்றி

    ஓம் திருநிலை நாயகியே போற்றி

    ஓம் தீந்தமிழ் சுவையே போற்றி

    ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி

    ஓம் தென்னவன் செல்வியே போற்றி

    ஓம் தேன்மொழி யம்மையே போற்றி

    ஓம் தையல் நாயகியே போற்றி

    ஓம் நற்கனியின் சுவையே போற்றி

    ஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றி

    ஓம் நல்ல நாயகியே போற்றி

    ஓம் நீலாம்பிகையே போற்றி

    ஓம் நீதிக்கரசியே போற்றி

    ஓம் பக்தர் தம் திலகமே போற்றி

    ஓம் பழமையின் குருந்தே போற்றி

    ஓம்பரமானந்தப் பேருக்கே போற்றி

    ஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி

    ஓம் பவளவாய்க் கிளியே போற்றி

    ஓம் பசுபதி நாயகியே போற்றி

    ஓம் பாகம் பிரியா அம்மையே போற்றி

    ஓம் பாண்டிமாதேவியின் தேவி போற்றி

    ஓம் பார்வதி அம்மையே போற்றி

    ஓம் பிறவிப்பணி தீர்ப்பாய் போற்றி

    ஓம் பேரிய நாயகியே போற்றி

    ஓம் போன்மயிலம்மையே போற்றி

    ஓம் போற்கொடி அம்மையே போற்றி

    ஓம் மங்கல நாயகியே போற்றி

    ஓம் மழலைக் கிளியே போற்றி

    ஓம் மனோன்மனித் தாயே போற்றி

    ஓம் மண்சுமந்தோன் மாணிக்கமே போற்றி

    ஓம் மாயோன் தங்கையேபோற்றி

    ஓம் மாணிக்க வல்லியே போற்றி

    ஓம் மீனவர்கோன் மகளே போற்றி

    ஓம் மீனாட்சி யம்மையே போற்றி

    ஓம் முழுஞானப் பேருக்கே போற்றி

    ஓம் முக்கண் சுடர் விருந்தே போற்றி

    ஓம் யாழ்மொழி யம்மையே போற்றி

    ஓம் வடிவழ கம்மையே போற்றி

    ஓம் வேலனுக்கு வேல் தந்தோய் போற்றி

    ஓம் வேதநாயகியே போற்றி

    ஓம் சவுந்த ராம்பிகையே போற்றி

    ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி

    ஓம் அம்மையே அம்பிகையே போற்றி

    ஓம் ஸ்ரீகாளிகாம்பாள் அம்பிகையே போற்றி போற்றி

    ×