search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anemia in pregnancy"

    கர்ப்ப காலத்தில் மிகமிக அவசியமான சத்துக்களில் முதன்மையானது இரும்புச்சத்து. கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம்.
    கர்ப்ப காலத்தில் மிகமிக அவசியமான சத்துக்களில் முதன்மையானது இரும்புச்சத்து. கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம். அதனால்தான் கர்ப்பம் உறுதியானதும் மருத்துவர்கள் ரத்தப் பரிசோதனை செய்து ஹீமோகுளோபின் அளவை சரிபார்த்து அதற்கேற்ப இரும்புச்சத்து மாத்திரைகளைப் பரிந்துரைக்கிறார்கள். இதன் மூலம் கர்ப்பத்திலிருக்கும் குழந்தைக்கும், அதைச் சுமக்கும் தாய்க்கும் இரும்புச்சத்துக் குறைபாட்டினால் ஏற்படுகிற எந்த பாதிப்பும் வந்துவிடாமல் தடுக்கப்படும்.

    * முதல் கட்டமாகக் குழந்தையின் வளர்ச்சி பெருமளவில் பாதிக்கப்படும்.
    * குறைப்பிரசவம் நிகழலாம்.
    * கர்ப்பத்தில் சிக்கல் வரலாம்.
    * குழந்தை எடை குறைவாகப் பிறக்கலாம். பிறந்த பிறகும் அதன் நோய் எதிர்ப்புத் திறன் வெகுவாகப் பாதிக்கப்படலாம்.
    * பிறந்த குழந்தைக்கும் ரத்தசோகை தாக்கலாம்.

    பிரசவத்தின் போதும் பெண்ணுக்குப் பெரிய அளவில் ரத்த இழப்பு ஏற்படும் என்பதால் அதன் பிறகும் ரத்த சோகைக்கு வாய்ப்புகள் அதிகம். அரிதாக பிரசவத்தின்போது தாய் உயிரிழக்கவும் நேரலாம். எனவே, கர்ப்பத்தை எதிர்நோக்கும் நாட்களிலிருந்தே ரத்தசோகை அண்டாமலிருப்பதற்கான வழிகளை மேற்கொள்ள வேண்டும்.

    என்ன செய்ய வேண்டும்?

    கர்ப்பம் உறுதியானதும் மருத்துவர் சொல்கிற பரிசோதனைகளைத் தவறாமல் மேற்கொள்ள வேண்டும். அதில் ஹமோகுளோபின் பரிசோதனையை எக்காரணம் கொண்டும் தவிர்க்கக்கூடாது. பரிசோதனையில் தெரிய வரும் அளவுகளை வைத்து மருத்துவர் கர்ப்பிணிக்கான சப்ளிமென்ட்டுகளைப் பரிந்துரைப்பார். கால்சியம் சப்ளிமென்ட்டும் சேர்த்துப் பரிந்துரைக்கப்படும்போது அது பற்றி மருத்துவரிடம் கேட்டு விளக்கம் பெறலாம்.

    கர்ப்ப கால ரத்த சோகையை வெறும் சப்ளிமென்ட்டுகளால் மட்டுமே சரி செய்துவிட முடியாது. இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் சி சத்துகள் நிறைந்த உணவுகளைப் போதுமான அளவு உட்கொள்ள வேண்டும். தினசரி உணவில் கீரைகள், நட்ஸ், பருப்புகள் போன்றவை இருக்க வேண்டும்.
    ×