என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amol Muzumdar"

    • தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது
    • இந்திய வீராங்கனைகள் தலைமை பயிற்சியாளர் அமோல் முஜும்தார் அவர்களிடம் வாழ்த்து பெற்றனர்.

    மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. ஷபாலி வர்மா 87 ரன்னும், தீப்தி சர்மா 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்னும் எடுத்தனர்.

    299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வால்வார்ட் நிலைத்து நின்று விளையாடி 101 ரன்களில் அவுட் ஆனார். மற்ற வீராங்கனைகள் சீரான இடைவெளியில் அவுட் ஆகி வெளியேறினர்.

    45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    சாம்பியன் வென்ற நிலையில், இந்திய வீராங்கனைகள் தலைமை பயிற்சியாளர் அமோல் முஜும்தார் அவர்களிடம் வாழ்த்து பெற்றனர்.

    இதனையடுத்து இணையத்தில் அமோல் முஜும்தாரின் புகைப்படங்கள் வைரலாகின. யார் இந்த அமோல் முஜும்தார் என்ற பலரும் இணையத்தில் அவரை தேடி வருகின்றனர்.

    யார் இந்த அமோல் முஜும்தார்?

    * அமோல் முஜும்தார் 1974 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.

    * அமோல் முஜும்தார் தான் அறிமுகமான முதல் ரஞ்சி போட்டியிலேயே 260 ரன்கள் குவித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். அந்த காலத்தில் உலக அளவில் அறிமுக போட்டியில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

    * அமோல் முஜும்தார் 171 முதல்தர போட்டிகளில் விளையாடி 30 சதங்கள், 60 அரைசதங்களுடன் 11167 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 48.13 ஆகும். 113 'லிஸ்ட் ஏ' போட்டிகளில் 3286 ரன்கள் சேர்த்துள்ளார்.

    * உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும் இந்திய ஆடவர் அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இந்திய அணியின் மிடில் ஆர்டரில் டிராவிட், சச்சின், வி.வி.எக்ஸ். லட்சுமண் மற்றும் கங்குலி ஆகியோர் இருந்த காலத்தில் அவர் விளையாடியதே அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கு காரணம்.

    * அமோல் முஜும்தார் 2014 ஆம் ஆண்டில், முதல் தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின்னர் பயிற்சியாளர் என்ற புதிய அவதாரம் எடுத்தார்

    * தென் ஆப்பிரிக்கா அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் ஐ.பி.எல். இல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளாகவும் பணியாற்றினார்.

    * 2023 ஆம் ஆண்டு இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளர்கா பொறுப்பேற்றார்.

    * கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 11 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளராக, அவர் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றுள்ளார்.

    • 48 வயதான அமோல் மசும்தர் மும்பை அணியின் தலைமை பயிற்சியாளராகவும், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் தென்ஆப்பிரிக்க அணியின் உதவி பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.
    • அமோம் மசும்தர் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக விரைவில் அறிவிக்கப்படுகிறார்.

    புதுடெல்லி:

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரமேஷ் பவார் அந்த பதவியில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நீக்கப்பட்டார். அதன் பிறகு புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படவில்லை. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வருகிற 9-ந் தேதி முதல் வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.

    இந்த போட்டி தொடருக்கு முன்னதாக புதிய தலைமை பயிற்சியாளரை நியமிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. புதிய பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்தவர்களில் இருந்து 3 பேர் கொண்ட இறுதிபட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களிடம் கிரிக்கெட் வாரிய ஆலோசனை கமிட்டியினர் நேர்காணல் நடத்தினர்.

    இதில் இந்திய முதல் தர கிரிக்கெட் வீரர்களான அமோம் மசும்தர் (மராட்டியம்), துஷார் அரோதி (குஜராத்), ஜோனதன் லீவிஸ் (இங்கிலாந்து) ஆகியோர் கலந்து கொண்டு தங்களது பயிற்சி திட்டங்களை எடுத்துரைத்தனர். இந்த மூவரின் அமோல் மசும்தர் அளித்த பயிற்சி திட்டங்கள் மிகவும் சிறப்பாக இருந்ததால் அவரது பெயரை புதிய பயிற்சியாளர் பதவிக்கு கிரிக்கெட் ஆலோசனை கமிட்டியினர் பரிந்துரை செய்துள்ளனர். எனவே அமோம் மசும்தர் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக விரைவில் அறிவிக்கப்படுகிறார்.

    அடுத்த ஆண்டு (2024) வங்காளதேசத்தில் 20 ஓவர் பெண்கள் உலகக் கோப்பை போட்டியும், 2025-ம் ஆண்டு இந்தியாவில் 50 ஓவர் பெண்கள் உலகக் கோப்பை போட்டியும் நடக்க இருப்பதால் மசும்தருக்கு 2 ஆண்டு காலம் ஒப்பந்தம் அளிக்கப்படும் என்று தெரிகிறது. 48 வயதான அமோல் மசும்தர் மும்பை அணியின் தலைமை பயிற்சியாளராகவும், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் தென்ஆப்பிரிக்க அணியின் உதவி பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.

    ×