என் மலர்
நீங்கள் தேடியது "ambulance hit"
விருத்தாசலம்:
விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் சீனுவாசன்(36). இவர் தன்னுடைய 5 வயது அதிஸ்ரீ என்ற பெண் குழந்தையுடன் விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அப்பகுதி வழியாக வந்த ஆம்புலன்ஸ் சீனுவாசன் மற்றும் அவரது மகள் மீது மோதியது. அப்போது சீனுவாசனும், அவரது மகளும் கீழே விழுந்தனர்.
இந்த விபத்தின் போது சீனுவாசன் கையில் இருந்த பெண் குழந்தை ஆம்புலன்ஸ் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்டு லேசான காயமடைந்தது. இதில் சீனுவாசன் உடல் மீது ஆம்புலன்ஸ் ஏறிச்சென்றதால் அவர் உடல் நசுங்கி படுகாயம் அடைந்தார். உடனே விருத்தாசலம் போலீசார் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சீனுவாசன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்துக்குறித்து புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாடிப்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம், பழைய வத்தலக்குண்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 44). இவர் மதுரையில் இலை கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
சம்பவத்தன்று முருகன் தனது மொபட்டில் மதுரைக்கு புறப்பட்டார். சமயநல்லூர் அருகே உள்ள கட்டப்புலி 4 வழிச் சாலையில் வந்து கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த ஆம்புலன்சு எதிர் பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட முருகன் படுகாயம் அடைந்தார். உடனே அதே ஆம்புலன்சில் அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சமயநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.






