search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "alcohol bottles seized"

    மதுபாட்டில்களை வெளி மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்டதா? அல்லது போலி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    காரியாபட்டி:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி பகுதியில் வெளிமாநில மதுபானங்கள் விற்பனை செய்வதாக தகவல் வந்தது. அதன் பேரில் திருச்சுழி காவல் துணை கண்காணிப்பாளர் மதியழகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் விஜய் கான்டிபன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    திருச்சுழியில் கருப்பசாமி (வயது 55) என்பவர் போலி மதுபாட்டில்கள் மறைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்ததன் பேரில் அவரை பிடித்து, ராஜபாளையம் மாவட்டம் சாத்தான் குளத்தைச் சேர்ந்த வீரன் மூலமாக திருமலை புரத்தைச் சேர்ந்த மூவேந்தன் (33), என்பவர் விற்பனைக்காக 1,566 மதுபாட்டில்கள் வாங்கப்பட்டு காரில் எம்.ரெட்டியபட்டி பகுதியில் விற்பனை செய்வதற்காக கொண்டுவரப்பட்டது தெரியவந்தது.

    இதனையடுத்து சாத்தான்குளம் வீரன், திருச்சுழியைச் சேர்ந்த கருப்பசாமி, அருப்புக்கோட்டையைச் சேர்ந்த முனியசாமி (31), மதுரையை சேர்ந்த சந்தானம் (32), மூவேந்தன் ஆகிய 5 பேர் மீது எம். ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் கருப்பசாமி, மூவேந்தன், முனியசாமி, சந்தானம் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தப்பியோடிய வீரனை தேடி வருகின்றனர்.

    மதுபாட்டில்கள் விற்பனை செய்ய பயன்படுத்திய கார் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த மதுபாட்டில்களை வெளி மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்டதா? அல்லது போலி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருச்சுழி பகுதியில் போலி மதுபாட்டில்கள் உலா வருவதால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
    அரூர் அருகே கோவில் திருவிழாவுக்கு வந்த பக்தர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்க வைத்திருந்த 300 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த இருளப்பட்டியில் காணியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது.

    இந்த திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு விற்பனை செய்ய ஒரு பெண் வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக ஏ.பள்ளிப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    போலீசார் நேரில் சென்று ஏ.பள்ளிப்பட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தி ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 300 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக கல்யாணி (வயது 62) என்ற பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே வீடுகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே உள்ள உப்புவேலூர் கிராமத்தில் சிலர் புதுவையில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து வீடுகளில் வைத்து விற்பனை செய்வதாக கிளியனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதனைதொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் விஜய குமார், தனிபிரிவு போலீஸ்காரர் ராஜாராம் ஆகியோர் உப்பு வேலூர் கிராமத்துக்கு சென்றனர். அப்போதுபோலீசார் வருவதை அறிந்ததும் வீடுகளை பூட்டிவிட்டு ஓடிவிட்டனர்.

    பின்னர் போலீசார் ஏழுமலை என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அவரது மனைவி மீனா(வயது35) வீட்டில் வைத்து மதுவிற்பனை செய்து கொண்டிருந்தார்.

    உடனே போலீசார் மீனாவை கைது செய்தனர். அவரது வீட்டின் பின்புறம் உள்ள குப்பைகிடங்கில் பதுக்கி வைத்திருந்த 50 மதுபாட்டில்கள் மற்றும் சாராயத்தை பறிமுதல் செய்தனர். அதுபோல் அதே பகுதியை சேர்ந்தஅறிவுவரசு(40) என்பவரும் வீட்டில் மதுவிற்றுக்கொண்டிருந்தார். அவரையும் போலீசார் கைதுசெய்தனர். அவரது வீட்டின் பீரோவில் பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    ×