search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alangulam-Nellai"

    • அருணாசலப்பேரி, சுப்பையாபுரம் வழியாக தடம் எண் 17 என்ற அரசு பஸ் காலை 7.30 மணி மற்றும் மதியம் 11 மணிக்கு மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.
    • பஞ்சாயத்து மக்கள் தடையில்லாமல் கூடுதலாக பயணிக்க ஆலங்குளம், நெல்லை செல்ல நகரப் பஸ் வசதி செய்து தர வேண்டும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள சுப்பையாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷிடம் வழங்கிய கோரிக்கை மனுவில் கூறியி ருப்பதாவது:-

    அருணாசலப்பேரி, சுப்பையாபுரம் வழியாக தடம் எண் 17 என்ற அரசு பஸ் காலை 7.30 மணி மற்றும் மதியம் 11 மணிக்கு மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. எங்கள் பஞ்சாயத்தில் உள்ள பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள் பயனடைகின்ற வகையில் மாலை 4.30 மணி மற்றும் 6 மணிக்கு ஆலங்குளத்தில் இருந்து குறிச்சிகுளம் செல்லும் தடம் எண் 17 அரசு பஸ் கூடுதல் நேரம் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பொதுமக்கள், மாணவ- மாணவிகள், முதியோர்கள் அனைவரும் இந்த பஸ் வசதியை நம்பி உள்ளனர். மேலும் நெல்லை பணிமனையில் இருந்து இயக்கப்படும் பஸ் தடம் எண் 33 காலை 6.30 மணி மற்றும் 11.30 மணி, மாலை 5.30 மணிக்கு மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் கூடுதலாக மாலை 2.30 மணிக்கும் மற்றும் இரவு 8.30 மணிக்கும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    எங்கள் பஞ்சாயத்தில் இருந்து நகரப் பஸ் ஆக தடம் எண் 17 மட்டுமே இயங்குகிறது. அந்த ஒரு பஸ்சும் திடீர் திடீரென்று வராமல் நின்று விடுகிறது. அதனால் அரசு வழங்கும் இலவச பஸ் பயணத் திட்டத்தை எங்கள் பஞ்சாயத்து பெண்கள் பயனடைய முடியாமல் போகிறது. எங்கள் பஞ்சாயத்து மக்கள் தடையில்லாமல் கூடுதலாக பயணிக்க ஆலங்குளம், நெல்லை செல்ல நகரப் பஸ் வசதி செய்து தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×