என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AIADMK IT Wing"

    • அரசு வேலை வாங்கித் தருவதாக பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக பிரசாத் மீது புகார்.
    • நுங்கம்பாக்கம் பாரில் நடந்த மோதல் தொடர்பாக பிரசாத் கைது செய்யப்பட்டுள்ளார்.

    அரசு வேலை வாங்கித் தருவதாக பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக அதிமுக தொழில்நுட்ப பிரிவு மாநில நிர்வாகி பிரசாத் மீது புகார் அளிக்கப்பட்டது. மேலும், நுங்கம்பாக்கம் பாரில் நடந்த மோதல் தொடர்பாக பிரசாத் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பிரசாத் மீது நுங்கம்பாக்கம் போலீசார் மூன்று வழக்குகள் பதிவு செய்தனர். இந்த நிலையில் பிரசாத்தை அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கழகத்தின் கொள்கை- குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் T. பிரசாத், (கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர், தென் சென்னை தெற்கு கிழக்கு மாவட்டம்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

    கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    • “மக்களவை தேர்தல் 2024-ன் போகஸ்” என்கிற தலைப்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார்.
    • தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் ராஜ் சத்யன் உள்பட ஐ.டி. பிரிவு நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன.

    தேர்தல் நேரத்தில் தலைவர்கள் தங்களது கட்சி மற்றும் ஆட்சியின் சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்க ஆயத்தமாகி வரும் நிலையில் அரசியல் கட்சிகளின் ஐ.டி.விங் என்று அழைக்கப்படும் தகவல் தொழில்நுட்ப பிரிவினர் முன் கூட்டியே தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள்.

    தகவல் தொழில்நுட்ப அணிகளில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஐ.டி. பிரிவுகளை சேர்ந்தவர்கள் தங்களது கட்சி சார்ந்த செய்திகள் மற்றும் அரசின் சாதனைகளை பரப்பி வருவதுடன் 'மீம்ஸ்'களையும் பதிவிட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவினரின் ஆலோசனை கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று நடைபெற்றது.

    "மக்களவை தேர்தல் 2024-ன் போகஸ்" என்கிற தலைப்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் ராஜ் சத்யன் உள்பட ஐ.டி. பிரிவு நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

    200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. ஐ.டி. பிரிவு நிர்வாகிகள் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெறும் வகையில் செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    அ.தி.மு.க.வுக்கு எதிராக தி.மு.க. உள்ளிட்ட மற்ற கட்சிகள் சமூக வலைதளங்களில் போடும் 'மீம்ஸ்' மற்றும் பதிவுகளுக்கு உடனடியாக பதிலடி கொடுக்கும் வகையில் தீவிரமாக செயல்படுவது என்று அ.தி.மு.க. ஐ.டி. பிரிவினர் முடிவு செய்துள்ளனர்.

    இது தொடர்பாக அ.தி.மு.க. ஐ.டி. பிரிவு நிர்வாகி ஒருவர் கூறும்போது, பாராளுமன்ற தேர்தலில் எங்களின் செயல்பாடு கட்சிக்கு கூடுதல் பலத்தை அளிக்கும். அதற்கேற்ற வகையில் நாங்கள் பம்பரமாக பணியாற்ற உள்ளோம். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனை எங்களுக்கு மேலும் ஊக்கம் அளித்து உள்ளது என்று தெரிவித்தார்.

    ×