என் மலர்
நீங்கள் தேடியது "Agriculture Team"
- தருமபுரி கலெக்டர் அலுவலகம் அருகே பா.ஜ.க. விவசாய அணி மாவட்ட தலைவர் வெற்றி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தருமபுரி:
தமிழக அரசு ரேஷன் கடை அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை மற்றும் ஆயிரம் ரூபாய் சேர்த்து வழங்கப்படும் என அறிவித்திருந்தது.
இதனை கண்டித்து இன்று தருமபுரி கலெக்டர் அலுவலகம் அருகே பா.ஜ.க. விவசாய அணி மாவட்ட தலைவர் வெற்றி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வெல்லம், கரும்பு, தேங்காய் உள்ளிட்டவைகளை சேர்த்து பொங்கல் தொகுப்பாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதே போல் கிருஷ்ணகிரியிலும் பா.ஜ.க. விவசாய அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.






