search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Actress Nilani"

    சின்னத்திரை உதவி இயக்குனர் காந்தி தற்கொலை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அவரது காதலியும் நடிகையுமான நிலானி இன்று தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #Nilani
    சென்னை:

    சின்னத்திரை நடிகை நிலானி - உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் இருவரும் காதலித்து வந்தார்கள். காந்தி நிலானியை திருமணம் செய்யவும் விரும்பினார். ஆனால் நிலானிக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால் போலீசில் புகார் அளித்தார். இதனால் மனம் உடைந்த காந்தி பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த நிலையில், நிலானி, காந்தி இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

    அதேசமயம், போலீசுக்கு பயந்து நிலானி தலைமறைவானதாகவும், அவரது செல்போன் சுவிட்ஸ்ஆப் செய்து வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து, திடீரென சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த நடிகை நிலானி, உதவி இயக்குநர் காந்தியின் தற்கொலைக்கு தான் காரணமல்ல என்றும், காந்தி தன்னிடம் பணம் வாங்கி ஏமாற்றிவிட்டதாகவும் புகார் மனு அளித்தார். மேலும் காந்தி தன்னை தொடர்ந்து டார்ச்சர் செய்ததாகவும், கூறினார்.


    ஆனால், நிலானியின் இந்த குற்றச்சட்டை காந்தியின் சகோதரர் மற்றும் குடும்பத்தினர் மறுத்துவந்தனர். நிலானி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினர். நிலானியும், காந்தியும் குடும்பம் நடத்திய போது எடுக்கப்பட்ட வீடியோக்களை வெளியிட உள்ளதாகவும் கூறினார்.

    இந்நிலையில், நடிகை நிலானி இன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். ஆலப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயங்கி விழுந்த அவர் கே.கே.நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #ActressNilani #NilaniSuicideAttempt #GandhiLalithkumar
    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக போலீசரை விமர்சித்து வீடியோ வெளியிட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த நடிகை நிலானி எப்படி கைதானார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
    கோவை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி 100-வது நாள் நடந்த போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் இறந்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அப்போது சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த டி.வி. நடிகை நிலானி(வயது 34) என்பவர் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார்.

    அதில் போலீஸ் சீருடை அணிந்திருந்த நிலானி, நம்நாட்டில் நடக்கும் சம்பவங்கள் வேதனை அளிக்கிறது. 10 பேரை கொன்று உள்ளனர். அமைதியான வழியில் போராடுகிறோம். நான் படப்படிப்பில் இருக்கிறேன். இல்லையென்றால் தூத்துக்குடி சென்று போராட்டத்தில் பங்கேற்று இருப்பேன். நான் காவல்துறை உடை அணிந்து இருப்பதற்காக வெட்கப்படுகிறேன். உடம்பு கூசுகிறது.

    அடுத்து ஒரு போராட்டம் வெடித்தால் அது அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருக்கவேண்டும் என்றும் 7.14 நிமிடம் ஓடக்கூடிய வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டு இருந்தார். போலீஸ் ஒருவரே இப்படி பேசி இருப்பதாக கருதி இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இதுகுறித்து ரிஷி என்பவர் கடந்த மே 22-ந் தேதி வடபழனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் நிலானி மீது வன்முறையை தூண்டுதல், ஆள் மாறாட்டம் செய்தல், அரசுக்கு எதிராக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து நிலானி தன்னிலை விளக்கமாக மறுநாள் ஒரு வீடியோ காட்சியை வெளியிட்டிருந்தார்.

    பின்னர், போலீசார் தேடுவதை அறிந்து அவர் தலைமறைவானார். அவரை கைது செய்ய வடபழனி இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    சைபர் கிரைம் உதவியுடன் தனிப்படை போலீசார் நிலானி மற்றும் அவரது உறவினர்களின் செல்போன் எண்ணை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதில் நிலானி, குன்னூர் அருகே கம்பிசோலை பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, நேற்று குன்னூர் வந்து நிலானியை கைது செய்தனர்.

    பின்னர் அவரை வெலிங்டன் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். கடந்த 29 நாட்களாக பல்வேறு இடங்களில் தலைமறைவாக இருந்த அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு குன்னூருக்கு வந்தது விசாரணையில் தெரிய வந்தது. அவரை குன்னூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுந்தரராஜன் முன்னிலையில் ஆஜர்படுத்தி சென்னைக்கு அழைத்து சென்றனர். #Thoothukudifiring
    தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்ட நடிகை நிலானி குன்னூரில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். #SterliteProtest
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தூத்துக்குடியில் நடத்தப்பட்ட பேரணியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்களில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தொலைக்காட்சி நடிகை நிலானி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது.

    போலீஸ் உடை அணிந்து நிலானி அந்த வீடியோவில் பேசும் போது, இது தற்செயலாக நடந்தது இல்லை. திட்டமிட்ட படுகொலை. இறந்தவர்களில் 8 பேர் போராட்டத்திற்காக முன்நின்றவர்கள். அவர்களை திட்டமிட்டே கொன்றுள்ளனர். என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார். இதையடுத்து நடிகை நிலானி மீது 4 பிரிவுகளில் தியாகராய நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 



    இந்த நிலையில், நிலானி இன்று குன்னூரில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். #SterliteProtest #Nilani

    தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டதாக நடிகை நிலானி மீது 4 பிரிவுகளில் தியாகராய நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #Bansterlite #SaveThoothukudi
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தூத்துக்குடி மக்கள் கடந்த 100 நாட்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட ஆட்சிர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்களில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் தூத்துக்குடியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

    இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டங்களை தெரிவித்து வரும் நிலையில், தொலைக்காட்சி நடிகை நிலானி, உண்மையில் தூத்துக்குடியில் நடப்பது திட்டமிட்ட படுகொலை என்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    அந்த வீடியோவில், போலீஸ் உடை அணிந்து நடிகை நிலானி பேசும் போது, 

    இந்த உடையை அணிவதற்கு ரொம்ப கேவலமாக நினைக்கிறேன். இந்த உடையை அணியவே கூசுகிறது. படப்பிடிப்பில் இருப்பதால் என்னால் போராட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள். இது முடியப்போவதில்லை. இனிமேல் தான் ஆரம்பமாகப் போகிறது. இது தமிழர்களை தீவிரவாதிகளாக்கும் முயற்சி. நம்மை போராட விட்டு, தீவிரவாதியாக்கி, இலங்கையில் நடத்தப்பட்ட படுகொலை போல் நம்மையும் கொல்ல நினைக்கின்றனர். 



    இது தற்செயலாக நடந்தது இல்லை. திட்டமிட்ட படுகொலை. இறந்தவர்களில் 8 பேர் போராட்டத்திற்காக முன்நின்றவர்கள். அவர்களை திட்டமிட்டே கொன்றுள்ளனர். என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார். 

    இந்த நிலையில், தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டதாக நடிகை நிலானி மீது 4 பிரிவுகளில் தியாகராய நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #Bansterlite #SaveThoothukudi #SterliteProtest

    ×