search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Actor Visu"

    கருத்துக்கணிப்புகளை வென்று பா.ஜனதா- அ.தி.மு.க. கூட்டணி 40 இடங்களில் வெற்றி பெறப்போவது உறுதி என்று நடிகர் விசு கூறினார். #LokSabhaElections2019 #ADMK
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து நடிகர் விசு பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் நடக்கும் தேர்தலில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று கருத்துகணிப்புகள் கூறுவதாக சொல்கிறார்கள். நான் எத்தனையோ கருத்துக்கணிப்புகளை பார்த்தவன். கருத்துக்கணிப்புகளை கண்டு பயப்படப்போவதில்லை. கருத்துக்கணிப்புகளை வென்று பா.ஜனதா- அ.தி.மு.க. கூட்டணி 40 இடங்களில் வெற்றி பெறப்போவது உறுதி.

    காஷ்மீரில் இந்திய வீரர்கள் மீது பாகிஸ்தான் குண்டு போட்டது. அப்போது பிரதமராக இருந்த மன்மோகன்சிங் வருத்தம் தான் தெரிவித்தார். ஆனால் இப்போது நடந்த தாக்குதலுக்கு அடுத்த 15 நாளில் பதிலடி கொடுக்கப்பட்டது. ஆனால் இங்குள்ள அரசியல் கட்சி தலைவர்கள் அன்னிய சக்திகளின் கைக்கூலிகளாக மாறி நமது நாட்டையும், பிரதமரையும் விமர்சனம் செய்கிறார்கள் என்றால் இவர்களை ஏதோ ஒரு அன்னிய சக்தி இயக்குகிறது உறுதியாகி விட்டது. அடுத்து 5 ஆண்டுகளுக்கு பா.ஜனதாவுக்கு வாய்ப்பு கொடுத்தால் இந்தியா உலக அளவில் நம்பர் ஒன் நாடாக விளங்கும். எனவே நீங்கள் பா.ஜ.க.வை ஆதரியுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #LokSabhaElections2019 #ADMK

    காணொலி காட்சிகள் மூலம் நடிகர் விசு, அவதூறாக பேசி மிரட்டல் விடுப்பதாக நாகர்கோவில் எஸ்.பி. அலுவலகத்தில் சுப.உதயகுமார் புகார் அளித்துள்ளார்.
    நாகர்கோவில்:

    கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளரும், பச்சை தமிழகம் அமைப்பின் தலைவருமான சுப. உதயகுமார் இன்று நாகர்கோவில் எஸ்.பி. அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    நடிகர் விசு பேசும் காணொலி காட்சி ஒன்று சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அதில் நடிகர் விசு என் பெயரை குறிப்பிட்டு மிகவும் அநாகரீகமாக பேசியுள்ளார்.

    இது பற்றி நான் அவருக்கு என் முகநூல் வழியாக ஒரு வேண்டுகோள் விடுத்தேன். என்னை பற்றி பேசும் அவதூறு கருத்துக்களை நீக்கிவிடும்படி கூறியிருந்தேன்.

    ஆனால் அவர் அக்காட்சிகளை நீக்காமல் என்னை மீண்டும் அவதூறாகவும், உண்மைக்கு மாறான கருத்துக்களை கூறியும் விமர்சித்து இருந்தார்.

    இது பற்றி நான் சென்னையில் உள்ள போலீஸ் கமி‌ஷனர் அலுவலத்தின் சைபர் கிரைம் பிரிவில் புகார் கொடுத்தேன். அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நடிகர் விசு எனக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுத்து ஆபாசமாக பேசி வருகிறார்.

    நடிகர் விசுவின் கருத்துக்களால் நானும், என் குடும்பத்தினரும் மிகவும் மன உளைச்சலில் உள்ளோம். எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இப்புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நடிகர் விசுவால் பாதிக்கப்பட்டுள்ள எனக்கும், என் குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.
    ×