search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Acres"

    • 10 முதல் 15 நிமிடங்களில் ஒரு ஏக்கரிலும் மருந்து கலவையை தெளிக்கலாம்.
    • சரியான அளவு சீராக மருந்து கலவை தெளிக்கப்படுவதால் பயிர்களின் வளர்ச்சி நன்றாக இருக்கிறது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் வட்டாரம் திருவதேவன் கிராமத்தில் ட்ரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானம் மூலம் நானோ யூரியா தெளிப்பது மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்த செயல் விளக்கம் விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தின் மூலம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு உழவர் பயிற்சி நிலைய தஞ்சை மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் பால சரஸ்வதி தலைமை வகித்து பேசியதாவது, விவசாயத்தில் ட்ரோனின் பயன்பாடு அடுத்த தொழில்நுட்ப அலையாகும்.

    விவசாயத்தில் ட்ரோன்களை பயன்படுத்துவதால் காலநிலை மாற்றங்களை சமாளித்து எதிர்கால வேளாண் உற்பத்தி தேவைகளை பூர்த்தி செய்ய முடிகிறது.

    ட்ரோன் பயன்படுத்து–வதால் மருந்து கலவைத்–துளிகள் பயிர்களின் இலைகள் மீது நேரடியாக படுகிறது. மேலும் 90 சதவீத தண்ணீர் உபயோகத்தையும் 40 சதவீதம் மருந்தின் அளவையும் கணிசமாக குறைக்க முடிகிறது என்றார்.

    சேதுபாபாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) சாந்தி பேசும் போது, ஒரு நாளைக்கு 30 முதல் 40 ஏக்கர் வரை ட்ரோன் மூலமும், 10 முதல் 15 நிமிடங்களில் ஒரு ஏக்கரிலும் மருந்து கலவையை தெளிக்கலாம்.

    நிலத்தில் ரசாயனங்களை சரியான அளவு முறையாக பயன்படுத்துவதால் விவசாயிகளின் உற்பத்தி செலவு குறைகிறது.

    லாபம் அதிகரிக்கிறது. பயிர்களின் மேல் சரியான அளவு சீராக மருந்து கலவை தெளிக்கப்படுவதால் பயிர்களின் வளர்ச்சியை நன்றாக இருக்கிறது.

    இந்த ஆளில்லா குட்டி விமானம் 3 கிலோ மீட்டர் வரை பறக்கும் திறன் கொண்டது என்றார்.

    நிகழ்ச்சியில் சேதுபாவா–சத்திரம் வட்டாரத் துணை வேளாண்மை அலுவலர் சிவசுப்பிரமணியன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுரேஷ், உதவி வேளாண்மை அலுவலர் பிரதீபா, அட்மா திட்ட தொழில்நுட்ப உதவி மேலாளர்கள் தமிழழகன், ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • 1200 ஏக்கர் நிலங்களை 99 ஆண்டு குத்தகைக்கு விட்டது சட்டத்திற்கு புறம்பானது என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
    • அப்போது இது சம்பந்தமான ஆவணங்களை பார்த்த நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    மதுரை

    சேலம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான 1200 ஏக்கர் நிலம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. இந்த நிலங்கள் தனிநபர்களுக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. ஆதீனத்தின் நிலத்தை தனி நபர்களுக்கு இத்தனை ஆண்டுகள் குத்தகை விடுவதற்கு எந்த சட்டமும் அனுமதிக்கவில்லை.

    ஆனால் விதிகளுக்கு புறம்பாக நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டு உள்ளன. எனவே இந்த மோசடி குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த பலனும் இல்லை.

    எனவே 1200 ஏக்கர் நிலங்களை குத்தகைக்கு விட்டதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு மீதான வழக்கு விசாரணை நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது இது சம்பந்தமான ஆவணங்களை பார்த்த நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஆதீனத்தின் இந்த நடவடிக்கையை தட்டி கேட்க உரிமை தமிழக அரசுக்கு இருந்தும் ஏன் அவ்வாறு செயல்படவில்லை என்றும், இது தொடர்பாக சிவகங்கை கலெக்டர் விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படியும் உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 28-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

    • குறுவையில் 49 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிகழாண்டு இந்த உச்ச நிலை எட்டப்பட்டுள்ளது.
    • குறுவையை போல சம்பா பருவ நெல் சாகுபடியிலும் இலக்கை விஞ்சி சாதனை நிகழ்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை, திருவாரூர் ,மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட காவிரி மாவட்ட பாசனத்துக்கு இந்த ஆண்டு வழக்கத்தை விட முன்கூட்டியே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதனால், குறுவை பருவ நெல் சாகுபடிப் பரப்பில் இலக்கை விஞ்சும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

    இதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.75 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதையும் விஞ்சி 1.81 லட்சம் ஏக்கரில் நடவு செய்யப்பட்டு, வளர்ச்சி பருவத்தில் உள்ளது.

    குறுவையில் 49 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிகழாண்டு இந்த உச்ச நிலை எட்டப்பட்டுள்ளது.

    இதேபோல, திருவாரூர் மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 1.50 லட்சம் ஏக்கரை விஞ்சி 1.53 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது.

    நாகை மாவட்டத்தில் 32,800 ஏக்கருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 10,190 ஏக்கர் கூடுதல் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு, மொத்தத்தில் 42,990 ஏக்கராக உயர்ந்தது.

    டெல்டா மாவட்டங்களில் நாகை மாவட்டத்தில்தான் நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 23 சதவீதம் கூடுதல் பரப்பில் பயிரிடப்பட்டு, எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு நிகழாண்டு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது என்கின்றனர் வேளாண் துறையினர்.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் 92,500 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதையும் கடந்து 95,000 ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகிறது.

    ஒட்டுமொத்தமாக ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 4.72 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    தற்போது டெல்டா மாவட்டங்களுக்கு தேவையான அளவுக்கு நீர் வரத்து உள்ளது.

    இதனால், குறுவையைப் போல சம்பா பருவ நெல் சாகுபடியிலும் இலக்கை விஞ்சி சாதனை நிகழ்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    ஆனால், குறுவை சாகுபடிப் பரப்பளவு அதிகரித்து விட்டதால், சம்பா பருவ நெல் பயிர் பரப்பு இயல்பான அளவை விட குறைவாகவே இருக்கும் என்கின்றனர் வேளாண் துறையினர்.

    இதனால், தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.85 லட்சம் ஏக்கரிலும், திருவாரூர் மாவட்டத்தில் 1.12 லட்சம் ஏக்கரிலும் சம்பா சாகுபடி எதிர்பார்க்கப்படுகிறது.

    நாகை மாவட்டத்தில் 1.67 லட்சம் ஏக்கரிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 1.80 லட்சம் ஏக்கரிலும் சம்பா, தாளடி மேற்கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    என்றாலும், தாளடியில் இயல்பான அளவை விஞ்சும் என்ற நம்பிக்கையுடன் வேளாண் துறையினர் உள்ளனர்.

    காவிரி நீர் வரத்து, அவ்வப்போது பெய்யும் பருவ மழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் சம்பாவுக்கும் சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.

    கடந்தை ஆண்டை போல நிகழாண்டும் தண்ணீர் பிரச்னை இருக்காது என்கிறார் தனியார் வானிலை ஆய்வாளர் தகட்டூர் என். செல்வகுமார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்:-

    மேட்டூர் அணையில் தற்போதைக்கு நீர்மட்டம் குறையாது. மீண்டும் வருகிற 25 ஆம் தேதிக்கு பிறகு மழை இருக்கும்.

    அப்போது மேட்டூர் அணைக்கு 50,000 முதல் 1 லட்சம் கன அடி வீதம் வரை தண்ணீர் வரத்து இருக்க வாய்ப்புள்ளது.

    இதன் பின்னர், செப்டம்பர் மாதத்தில் 2 முதல் 4 முறை தொடர் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

    இவற்றில் இரு முறை மழை வலுப்பெறும். எனவே, செப்டம்பரிலும் ஏறத்தாழ ஒரு லட்சம் கன அடி வீதம் தண்ணீர் வர வாய்ப்பு இருக்கும்.

    இதன் காரணமாக தென் மேற்கு பருவ மழை முடியும் வரை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியிலேயே தொடரும்.

    இதேபோல, வட கிழக்கு பருவ மழையும் நன்றாக பெய்யும் என்பதால், அப்பருவத்தில் டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் தேவைப்படாது.

    கடந்த ஆண்டை போலவை நிகழாண்டும் வட கிழக்கு பருவ மழை அதிகமாகவே இருக்கும். எனவே, சம்பா பருவத்திலும் தண்ணீர் பிரச்னை இருக்காது.

    மேலும், ஜனவரியில் அணை மூடும்போது நீர்மட்டம் 100 அடிக்கும் அதிகமாகவே நீடிக்கும் என்றார்.

    • நாகை மாவட்டத்தை பொறுத்தவரை நடவு மற்றும் நேரடி விதைப்பு மூலமாக 70 ஆயிரம் ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது.
    • உரம் மற்றும் யூரியாக்கள் கொடுக்கவில்லை என்றால் பயிர்கள் வளர்ச்சி இல்லாமல் பாதிக்கக்கூடும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் ஒரத்தூர், கீழ்வேளூர், திருமருகல், கீழையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குறுவை சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நாகை மாவட்டத்தை பொறுத்தவரை நடவு மற்றும் நேரடி விதைப்பு மூலமாக 70 ஆயிரம் ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் ஒரத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் 25 நாட்களான பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ஒரு முட்டை டி ஏ பி, அரை மூட்டை யூரியா கலந்து கொடுக்க வேண்டும். ஆனால் நாகை தாலுக்கா பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய டிஏபி மற்றும் யூரியாக்கள் பற்றாக்குறை உள்ள காரணத்தால் வழங்க முடியாத நிலை உள்ளதாக விவசாயிகளிடம் அதிகாரிகள் தெரிவிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    உரம் மற்றும் யூரியாக்கள் கொடுக்கவில்லை என்றால் பயிர்கள் வளர்ச்சி இல்லாமல் பாதிக்கக்கூடும். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் தனியாரிடம் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    குறுவை தொகுப்பு திட்டம் வழங்குவது ஒரு பக்கம் இருந்தாலும் விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க மூலம் விலைக்கு வழங்க வேண்டும் எனவும் வருங்காலங்களில் தட்டுப்பாடு இல்லாமல் கையிருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×