என் மலர்
நீங்கள் தேடியது "accust"
- 'அக்யூஸ்ட்' திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
- 'அக்யூஸ்ட்' இசை வெளியீட்டு விழாவில் திரையுலக முன்னணியினர் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
ஜேஷன் ஸ்டுடியோஸ் சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என். பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் 'அக்யூஸ்ட்' திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
பிரம்மாண்ட பட்ஜெட்டில் படமாக்கப்பட்டுள்ள 'அக்யூஸ்ட்' திரைப்படத்தில் முதல் முறையாக உதயா, அஜ்மல் மற்றும் யோகி பாபு இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தை கன்னட திரையுலகில் வெற்றி படங்களை இயக்கிய பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்கியுள்ளார். பிரபல கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைக்க, மருதநாயகம்.ஐ ஒளிப்பதிவு செய்கிறார்.
கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு, கலை இயக்கம் ஆனந்த் மணி பொறுப்பேற்கின்றனர். ஸ்டண்ட் சில்வா சண்டைக் காட்சிகளை இயக்கியுள்ளார்.
இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற 'அக்யூஸ்ட்' இசை வெளியீட்டு விழாவில் திரையுலக முன்னணியினர் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

'அக்யூஸ்ட்' படத்தின் இயக்குநர் பிரபு ஶ்ரீநிவாஸ் பேசுகையில், "திரையுலகின் மிகப்பெரிய ஜாம்பவான்கள் இங்கு இருக்கிறீர்கள், அனைவருக்கும் மிக்க நன்றி. நான் இந்தப் படத்தின் ஸ்கிரிப்டை உதயாவிடம் கொடுத்த சிறிது நேரத்திலேயே அவர் அதை முழுவதும் படித்து ஓகே சொன்னதோடு, அவரது வேறு சில படங்களையும் இதற்காக தள்ளி வைத்தார். அதற்காக அவருக்கு நன்றி. தயாரிப்பாளர்கள் அனைவரும் சிறப்பான ஒத்துழைப்பை தந்தனர்.
படம் தொடங்கிய முதல் நாளிலிருந்து படப்பிடிப்பு நிறைவடையும் வரை உதயா தந்த ஒத்துழைப்பு அலாதியானது. அவர் மற்றும் அனைத்து குழுவினரின் ஒத்துழைப்போடு பிரேக்கே இல்லாமல் தொடர் படப்பிடிப்பை நடத்தினோம்.
இப்படத்தில் இடம்பெறும் பஸ் சண்டைக்காட்சி மிகவும் பேசப்படும். ஒட்டுமொத்த படமும் ரசிகர்களை கவரும்" என்றார்.
- வழிப்பறி, திருட்டு, கொள்ளை உள்ளிட்ட 40 வழக்குகள் உள்ளது.
- கடந்த 6 மாதங்களாக தலைமறைவாக இருந்துள்ளார்.
அவிநாசி:
சேவூா் அருகே புதுச்சந்தை வரப்பளத்தான் தோட்டத்தைச் சோ்ந்த கருப்புசாமி மகன் புக்கான் (எ) மூா்த்தி (வயது 39). அவிநாசி, குன்னத்தூா், பெருமாநல்லூா், சேவூா், புன்செய்புளியம்பட்டி, வரப்பாளையம் ஆகிய காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வழிப்பறி, திருட்டு, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக இவா் மீது 40 வழக்குகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 6 மாதங்களாக தலைமறைவாக இருந்த இவரை சேவூா் காவல் உதவி ஆய்வாளா்கள் சா்வேஸ்வரன், சேகா், தலைமைக் காவலா் ஆகியோா் கொண்ட தனிப்படை போலீசார் தேடி வந்தனா்.
இந்த நிலையில் ரகசிய தகவலின்படி, ராயா்பாளையம் அருகே வண்ணாம்பாறை பகுதியில் தலைமறைவாக இருந்த புக்கான் (எ) மூா்த்தியை தனிப்படை போலீசார் பிடித்து வழக்குப்பதிவு செய்து கைது செய்தனா்.






