search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "about waste"

    • மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கியும், குப்பைகளை பிரித்து வழங்குதல் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிறப்புநிலை பேரூராட்சியின் சார்பில் தூய்மை மக்கள் இயக்கம் சார்பாக பெருந்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கிழக்கு பள்ளி மாணவர், மாணவியர்களுக்கு "எனது குப்பை எனது பொறுப்பு" என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி, ஓவிய போட்டி, கட்டுரைப் போட்டி நடைபெற்றது.

    மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கியும், குப்பைகளை பிரித்து வழங்குதல் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மேலும், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மூலம் பேரூராட்சி அலுவலகத்திலிருந்து பேரணி தொடங்கி ஈரோடு ரோடு, பழைய பஸ்நிலைய ரோடு, மெயின் ரோடு வழியாக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தை அடைந்தது.

    அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு சதுரங்கப் போட்டி (செஸ் போட்டி) நடத்தப்பட்டது. மேலும், பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. இவ்விழாவுக்கு பேரூராட்சி தலைவர் ஓசிவி.

    ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இவ்விழாவில் பேரூராட்சிகள் உதவி இயக்குநர் (பொ), கணேசன், செயல் அலுவலர், தி.ராஜேந்திரன் மற்றும் துணைதலைவர் ஜி.சண்முகம் மற்றும் மன்ற உறுப்பினர்கள், அலுவலகப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். 

    ×