search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aarudhra Gold Scam"

    • முக்கிய ஏஜெண்டுகளின் அசையா சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • இயக்குனர்கள் முக்கிய ஏஜெண்டுகளின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.96 கோடி முடக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    ஆருத்ரா நிதி நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறி முதலீட்டாளர்களிடம் ரூ.2400 கோடி பணத்தை சுருட்டி உள்ளது. இந்த ஆருத்ரா பண மோசடி வழக்கில் அந்த நிறுவனத்தின் இயக்குனர் உள்பட 13 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். மற்றொரு இயக்குனர் ராஜசேகர், அவரது மனைவி ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களின் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை முடக்கி உள்ளது. முடக்கப்பட்ட சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளது. இதேபோல் மேலும் சில நிதி நிறுவன மோசடிகள் தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில் நிதி நிறுவன மோசடி வழக்குகள் தொடர்பாக சென்னையில் இன்று பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. ஆசையம்மாள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் இதுவரை ரூ.6.35 கோடி பணம், ரூ.1.13 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருட்கள் மற்றும் 22 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

    நிறுவனங்கள், இயக்குனர்கள் முக்கிய ஏஜெண்டுகளின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.96 கோடி முடக்கப்பட்டுள்ளது. நிறுவன இயக்குனர்கள், முக்கிய ஏஜெண்டுகளின் அசையா சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும். இவ்வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி ஆர்.கே.சுரேசுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    ஹிஜாவு நிதி நிறுவன மோசடி வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் அலெக்சாண்டர் மீது ரெட் கார்னர் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு சொந்தமான 48 இடங்களில் சோதனை மேற்கொண்டு ரூ.3.34 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான 448 கிராம் தங்க நகைகள், ரூ.75 ஆயிரம் மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குற்றவாளிகளுக்கு சொந்தமான 162 வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.14.47 கோடி முடக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆருத்ரா மோசடி தொடர்பாக ரூ.100 கோடி மதிப்புள்ள வங்கி கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாக தகவல்.
    • பொதுமக்களிடம் இருந்து முதலீடுகளை பெற்றுக்கொடுத்த ஏஜெண்டுகள் 256 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    ஆருத்ரா நிதி நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறி முதலீட்டாளர்களிடம் ரூ.2400 கோடி பணத்தை சுருட்டி உள்ளது. இந்த ஆருத்ரா பண மோசடி வழக்கில் அந்த நிறுவனத்தின் இயக்குனர் உள்பட 13 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். மற்றொரு இயக்குனர் ராஜசேகர், அவரது மனைவி ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.

    இந்த வழக்கில் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பொதுமக்களிடம் இருந்து முதலீடுகளை பெற்றுக்கொடுத்த ஏஜெண்டுகள் 256 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். விசாரணையின் முடிவில் சொத்து முடக்கம் மற்றும் கைது நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களின் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை முடக்கி உள்ளது. முடக்கப்பட்ட சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் ரூ.100 கோடி மதிப்புள்ள வங்கி கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாகவும், ரூ.6 கோடி பணம், 4 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பல கோடி மதிப்பிலான 130 சொத்துக்களை கண்டுபிடித்திருப்பதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் தெரிவித்துள்ளது.

    இவை அனைத்தையும் முடக்கி அடுத்த 6 மாதத்திற்குள் பொதுமக்கள் இழந்த பணத்தை திருப்பி கொடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • ஆருத்ரா நிதி நிறுவனம் சுமார் 1 லட்சத்து 9255 பேரிடம் ரூ.2438 கோடியை சுருட்டியது.
    • ஆருத்ரா நிறுவனத்தின் சந்திரகாந்த் என்ற நிர்வாகியிடம் இருந்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    சென்னை:

    நிதிநிறுவனங்களில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பொதுமக்கள் கோடிக்கணக்கில் முதலீடு செய்து ஏமாந்து வருவது வாடிக்கையாகி இருக்கிறது.

    அந்த வகையில் ஆருத்ரா நிதி நிறுவனம் சுமார் 1 லட்சத்து 9255 பேரிடம் ரூ.2438 கோடியை சுருட்டியது.

    இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் அளித்த புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மோசடி தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

    இந்த நிலையில் ஆருத்ரா மோசடி வழக்கில் முக்கிய நிர்வாகியாக கருதப்படும் காஞ்சிபுரத்தை சேர்ந்த ராஜா செந்தாமரை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். ராஜா செந்தாமரை முக்கியமான முகவராக செயல்பட்டு வந்துள்ளார். காஞ்சிபுரம் பகுதியில் 200-க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.600 கோடி வரையில் அவர் வசூலித்து கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. கைதான அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதற்கிடையே ஆருத்ரா நிறுவனத்தின் சந்திரகாந்த் என்ற நிர்வாகியிடம் இருந்து 90 மூட்டைகள் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    சந்திரகாந்தின் 3 கோடி ரூபாய் வங்கி கணக்கை முடக்கியதாகவும் அவரிடம் ஆருத்ரா நிறுவனத்தின் பண பரிவர்த்தனை குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ×