என் மலர்

  நீங்கள் தேடியது "Renault"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ரெனால்ட் நிறுவனத்தின் புதிய டஸ்டர் மாடல் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
  • தற்போது ரெனால்ட் இந்தியா நிறுவனத்திற்கு மிகப் பெரும் தொகை முதலீடாக கிடைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

  இந்திய சந்தையில் ரெனால்ட் நிசான் நிறுவனத்தின் நிலைமை சற்று தடுமாற்றத்திலேயே இருந்து வருகிறது. எனினும், இந்த நிலை விரைவில் மாறப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ரெனாட் மற்றும் நிசான் நிறுவனங்களின் இந்திய பிரிவுக்கு 500 மில்லியன் டாலர்கள் முதலீடு கிடைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

  இந்த முதலீட்டின் மூலம் CMF-B பிளாட்ஃபார்மை இந்தியாவுக்கு ஏற்ற வகையில் மாற்றிக் கொள்ள முடியும். இது சாத்தியமாகும் பட்சத்தில் சமீபத்தில் நிறுத்தப்பட்ட டஸ்டர் மாடல் இந்தியாவில் மீண்டும் களமிறங்கலாம். இதற்கு இடைப்பட்ட காலத்தில் ரெனால்ட் மற்றும் நிசான் நிறுவனங்கள் தங்களின் சர்வதேச தயாரிப்புகளை இந்தியாவுக்கு CBU முறையில் கொண்டுவரலாம். CMF பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கும் முற்றிலும் புதிய டஸ்டர் பெட்ரோல் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது.

  எதிர்காலத்தில் இந்த காரின் எலெக்ட்ரிக் வேரியண்ட் அறிமுகம் செய்யப்படலாம். இந்தியாவுக்காக மாற்றப்படும் CMF-B பிளாட்ஃபார்ம் பெட்ரோல், ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான வசதியை வழங்கும். அந்த வகையில் முற்றிலும் புதிய டஸ்டர் மாடல் இந்தியாவில் 2024 அல்லது 2025 வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம். நீண்ட இடைவெளியை பூர்த்தி செய்யும் வகையில் ரெனால்ட் நிறுவனம் அர்கானா கிராஸ்ஒவர் கூப் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யும் என தெரிகிறது.

  இந்திய சாலைகளில் ரெனால்ட் நிறுவனம் அர்கானா மாடலின் சோதனைகளை ஏற்கனவே துவங்கி மேற்கொண்டு வருகிறது. புதிய 500 மில்லியன் டாலர்கள் முதலீடு பற்றி ரெனால்ட் மற்றும் நிசான் தரப்பில் இருந்து எந்த விதமான தகவலும் வழங்கப்படவில்லை. மேலும் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு அக்டோபர் மாதத்திற்கான சலுகை விவரங்களை வெளியிட்டு உள்ளது.
  • இந்த சலுகைகள் ஒவ்வொரு பகுதி, கார் மாடல், வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடும் என ரெனால்ட் தெரிவித்து இருக்கிறது.

  ரெனால்ட் நிறுவன கார் மாடல்களை வாங்குவோருக்கு அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சிறப்பு சலுகைகள் பண்டிகை காலத்தை ஒட்டி அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், ரெனால்ட் கார் மாடல்களுக்கு அதிகபட்சமாக ரூ. 50 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகள் எக்சேன்ஜ், தள்ளுபடி மற்றும் கார்ப்பரேட் பலன்கள் வடிவில் வழங்கப்படுகின்றன.

  விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள், தங்களுக்கு அருகாமையில் உள்ள ரெனால்ட் விற்பனை மையம் சென்று தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகை விவரங்களை அறிந்து கொள்ளலாம். இந்த சலுகைகள் 2022, அக்டோபர் 31 ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளன. மேலும் சலுகை பலன்கள் கார் மாடல், வேரியண்ட் மற்றும் ஒவ்வொரு பகுதிக்கு ஏற்ப வேறுபடும்.

  அக்டோபர் மாதத்தில் ரெனால்ட் டிரைபர் மாடலை வாங்குவோருக்கு அதிகபட்சமாக ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இதில் RXT, RXZ வேரியண்ட்களுக்கு ரூ. 15 ஆயிரம் தள்ளுபடி, RXL மற்றும் லிமிடெட் எடிஷன் வேரியண்ட்களுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான எக்சேன்ஜ் பலன்கள், ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் பலன்கள் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.

  ரெனால்ட் க்விட் மாடலை வாங்குவோருக்கு ரூ. 35 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இதில் ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி அனைத்து வேரியண்ட்களுக்கும் வழங்கப்படுகிறது. இத்துடன் 1.0 லிட்டர் மற்றும் 0.8 லிட்டர் வேரியண்ட்களுக்கு முறையே ரூ. 15 ஆயிரம் மற்றும் ரூ. 10 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. மேலும் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களுக்கு ரூ. 10 ஆயிரம் வரை கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

  புதிய ரெனால்ட் கைகர் மாடலை வாங்குவோருக்கு க்விட் மற்றும் டிரைபர் மாடல்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன. மேலும் கைகர் காம்பேக்ட் எஸ்யுவி மாடலுக்கு தள்ளுபடி அறிவிக்கப்படவில்லை. எக்சேன்ஜ் சலுகையின் கீழ் ரூ. 10 ஆயிரம் வரையிலான பலன்களை பெற முடியும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ரெனால்ட் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு ஆகஸ்ட் மாதத்திற்கான சலுகை விவரங்களை வெளியிட்டு உள்ளது.
  • சலுகைகள் மூலம் பண்டிகை கால விற்பனை அதிகரிக்கும் என ரெனால்ட் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறது.

  ரெனால்ட் நிறுவனம் ஆகஸ்ட் மாத சலுகை மற்றும் பலன்களை அறிவித்து இருக்கிறது. தற்போது ரெனால்ட் நிறுவனம் ரெனால்ட் க்விட், ரெனால்ட் டிரைபர் மற்றும் ரெனால்ட் கிகர் என மூன்று கார் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. மூன்று மாடல்களுமே இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

  இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இடம்பிடிக்க ரெனால்ட் நிறுவனம் தடுமாறி வந்த நிலையில் தான் ரெனால்ட் க்விட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் மூலம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் எண்ட்ரி லெவல் பிரிவில் ரெனால்ட் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த துவங்கியது.


  மகாராஷ்டிரா, கேரளா மற்றும் கோவா போன்ற மாநிலங்களில் ரெனால்ட் க்விட் காரை வாங்குவோருக்கு ரூ. 50 ஆயிரம் வரையிலான பலன்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மற்ற மாநில வாடிக்கையாளர்களுக்கு ரூ. 45 ஆயிரம் வரையிலான பலன்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.

  சப்-4 மீட்டர் எம்பிவி மாடலான ரெனால்ட் டிரைபர் வாங்குவோர் ரூ. 60 ஆயிரம் வரை சேமிக்க முடியும். இந்த சலுகை மகாராஷ்டிரா, கோவா, கேரளா மற்றும் குஜராத் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. மற்ற மாநில வாடிக்கையாளர்கள் ரூ. 55 ஆயிரம் மதிப்பிலான பலன்களை பெறலாம். டிரைபர் லிமிடெட் எடிஷன் மாடலுக்கு மகாராஷ்டிரா, கோவா மற்றும் குஜராத் மாநில வாடிக்கையாளர்கள் ரூ. 45 ஆயிரம் வரையிலான பலன்களை பெறலாம்.

  கேரளா மாநில வாடிக்கையாளர்கள் ரூ. 35 ஆயிரம் வரையிலான சேமிப்புகளை பெறலாம். மற்ற மாநில வாடிக்கையாளர்களுக்கு ரூ. 15 ஆயிரம் வரையிலான சலுகை மட்டுமே வழங்கப்படுகிறது. ரெனால்ட் கிகர் மாடலுக்கு ரூ. 25 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. மற்ற மாடல்களை போன்று இல்லாமல் கிகர் மாடலுக்கு நாடு முழுக்க ஒரே மாதிரியான பலன்களே கிடைக்கின்றன.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ரெனால்ட் நிறுவன விற்பனையாளர்கள் கார் மாடல்களுக்கு அதிரடி சலுகை மற்றும் தள்ளுபடி அறிவித்து உள்ளனர்.
  • இவை இம்மமாத இறுதி வரை வழங்கப்பட உள்ளன.

  இந்தியாவில் இயங்கி வரும் தேர்வு செய்யப்பட்ட ரெனால்ட் டீலர்ஷிப்களில் அசத்தல் தள்ளுபடி மற்றும் சலுகை வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் லாயல்டி போனஸ் வடிவில் இவற்றை பெற்றுக் கொள்ள முடியும்.


  அதன்படி ரெனால்ட் டிரைபர் மாடலை வாங்குவோருக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் லாயல்டி போனஸ் ரூ. 44 ஆயிரம் வழங்கப்படுகிறது. ரெனால்ட் கைகர் மாடலை வாங்குவோருக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 55 ஆயிரம் லாயல்டி பலன்கள் வழங்கப்படுகின்றன.

  ரெனால்ட் க்விட் மாடலுக்கு ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 37 ஆயிரம் லாயல்டி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதே காரின் 1.0 லிட்டர் வேரியண்டிற்கு ரூ. 35 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 37 ஆயிரம் லாயல்டி போனஸ் வழங்கப்படுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ரெனால்ட் நிறுவனம் தனது கைகர் மாடல் உற்பத்தி குறித்து புது அப்டேட் வெளியிட்டு உள்ளது.
  • இந்த மாடல் உலகம் முழுக்க ஒன்பது பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

  ரெனால்ட் இந்தியா நிறுவனம் கைகர் மாடல் உற்பத்தியில் 50 ஆயிரம் யூனிட்களை கடந்து அசத்தி இருக்கிறது. ரெனால்ட் கைகர் 50 ஆயிரமாவது யூனிட் சென்னையில் உள்ள ரெனால்ட் ஆலையில் இருந்து வெளியிடப்பட்டது. உற்பத்தியில் புதிய மைல்கல்லை கொண்டாடும் வகையில் ரெனால்ட் நிறுவனம் கைகர் மாடலை புதிதாக ஸ்டெல்த் பிளாக் நிறத்தில் அறிமுகம் செய்து இருக்கிறது.

  சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே இந்தியாவில் அறிமுகமான மூன்றாவது கார் மாடலாக ரெனால்ட் கைகர் இருந்தது. இந்த மாடலின் சர்வதேச வெளியீடு இந்தியாவில் தான் நடைபெற்றது. தற்போது இந்த மாடல் தென் ஆப்ரிக்கா, இந்தோனேசியா, கிழக்கு ஆப்ரிக்கா, சிச்சில்ஸ், மொரிஷியஸ், பூட்டான், பெர்முடா மற்றும் புரூனெய் போன்ற நாடுகளிலும் கிடைக்கிறது.


  "தலைசிறந்த டிசைன், ஸ்மார்ட் அம்சங்கள், அதீத பாதுகாப்பு, தரம் மற்றும் செயல்திறன் என அனைத்து பிரிவுகளிலும் சிறந்த மதிப்பீட்டை கொண்டிருக்கும் ரெனால்ட் கைகர் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்திய சந்தையில் அதிக போட்டி நிறைந்த காம்பேக்ட் எஸ்.யு.வி. பிரிவில் 50 ஆயிரம் யூன்ட்கள் உற்பத்தியாகி இருக்கிறது."

  "இந்திய சந்தையில் எங்களின் வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கு வகிக்கும் மாடல்களில் ரெனால்ட் கைகர் ஒன்று. ரெனால்ட் கைகர் மாடல் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெறுவதோடு இந்தியா மட்டுமின்றி சர்வதேச சந்தையிலும் பிராண்டு வளர்ச்சிக்கு வித்திடும் என எதிர்பார்க்கிறோம்," என்று ரெனால்ட் இந்தியா சி.இ.ஒ. மற்றும் நிர்வாக இயக்குனர் வெங்கட்ராமன் மமலிப்பல்லே தெரிவித்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ரெனால்ட் நிறுவன கார் மாடல்களுக்கு ஜூன் மாதத்திற்கான சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
  • இந்த மாதம் கார்களுக்கு அதிகபட்சம் ரூ. 94 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.

  ரெனால்ட் இந்தியா நிறுவனம் ஜூன் மாதம் தனது கார் மாடல்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இந்திய சந்தையில் ரெனால்ட் கார் மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 94 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.

  அதன்படி ரெனால்ட் க்விட் ஹேச்பேக், டிரைபர் எம்.பி.வி. மற்றும் கிகர் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல்களுக்கு அதிரடி சலுகைகள் வழங்கப்படுகின்றன. இவை தள்ளுபடி, லாயல்டி பலன்கள், எக்சேன்ஜ் போனஸ் வடிவில் வழங்கப்படுகின்றன. இத்துடன் ஸ்கிராபேஜ் திட்டத்தின் கீழ் கார் மாடல்களுக்கு கூடுதலாக ரூ. 10 ஆயிரம் வரையிலான எக்சேன்ஜ் பலன்கள் வழங்கப்படுகின்றன.

  ரெனால்ட் டிரைபர்

  தள்ளுபடி ரூ. 40 ஆயிரம்

  லாயல்டி பலன்கள் ரூ. 44 ஆயிரம்

  ஸ்கிராபேஜ் திட்ட பலன்கள் ரூ. 10 ஆயிரம்

  ஜூன் மாதம் ரெனால்ட் டிரைபர் காரை வாங்குவோருக்கு அதிகபட்சம் ரூ. 94 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.


  ரெனால்ட் க்விட்

  தள்ளுபடி ரூ. 35 ஆயிரம்

  லாயல்டி பலன்கள் ரூ. 37 ஆயிரம்

  ஸ்கிராபேஜ் திட்ட பலன்கள் ரூ. 10 ஆயிரம்

  2022 க்விட் மாடலுக்கு ரூ. 30 தள்ளுபடி உள்பட மொத்தம் ரூ. 77 ஆயிரம் வரையிலான பலன்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஜூன் மாதம் ரெனால்ட் க்விட் காரை வாங்குவோருக்கு அதிகபட்சம் ரூ. 82 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.

  ரெனால்ட் கிகர்

  கார்ப்பரேட் தள்ளுபடி ரூ. 10 ஆயிரம்

  லாயல்டி பலன்கள் ரூ. 55 ஆயிரம்

  ஸ்கிராபேஜ் திட்ட பலன்கள் ரூ. 10 ஆயிரம்

  ஜூன் மாதம் ரெனால்ட் கிகர் காரை வாங்குவோருக்கு அதிகபட்சம் ரூ. 75 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.

  குறிப்பு: சலுகை மற்றும் தள்ளுபடி பலன்கள் ஸ்டாக் இருப்பு மற்றும் ஒவ்வொரு நகருக்கு ஏற்ப வேறுபடும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரெனால்ட் நிறுவனத்தின் எண்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் மாடல் இந்திய விற்பனையில் புது மைல்கல் எட்டியது.


  ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது க்விட் ஹேட்ச்பேக் மாடல் இந்திய விற்பனையில் 4 லட்சத்திற்கும் அதிக யூனிட்களை கடந்துள்ளது. 2015 ஆம் ஆண்டு அறிமுகமானது முதல் க்விட் மாடல் ரெனால்ட் நிறுவன விற்பனையில் முக்கிய பங்கு வகிக்கிறது.

  பத்தாவது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் அங்கமாக ரெனால்ட் நிறுவனம் சமீபத்தில் 2021 க்விட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் ரெனால்ட் க்விட் விலை ரூ. 4.11 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 5.56 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

   ரெனால்ட் க்விட்

  ரெனால்ட் க்விட் மாடல் 0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 53 பி.ஹெச்.பி. திறன், 72 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 67 பி.ஹெச்.பி. திறன் மற்றும் 91 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. இவற்றுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகின்றன.

  இந்திய சந்தையில் ரெனால்ட் க்விட் மாடல் மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ, ஹூண்டாய் சாண்ட்ரோ மற்றும் டேட்சன் ரெடி-கோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவில் மேம்பட்ட பாதுகாப்பு உபகரணங்களுடன் ரெனால்ட் கேப்டுர் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #RenaultCaptur  பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட் நிறுவனத்தின் ‘கேப்டுர் மாடல்’ பல்வேறு புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 

  இந்தியாவில் புகிய கேப்டுர் காரின் விலை ரூ.9.50 லட்ச என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் கேப்டுர் ஆர்.எக்ஸ்.இ மற்றும் கேப்டுர் பிளாடைன் என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. பிளாடைன் டீசல் மாடல் விலை ரூ.12 லட்சம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

  புதிய மேம்படுத்தப்பட்ட மாடலில் 7 இன்ச் தொடுதிரை மீடியா எவல்யூஷன் இன்ஃபோடைன்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்பட்டுள்ளது. இதில் கூடுதல் பாதுகாப்பு அம்சமாக இரட்டை ஏர் பேக் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த காரில் ஏற்கனவே ஏ.பி.எஸ். வசதி வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்சமயம் ரியர் பார்க்கிங் சென்சார் சேர்க்கப்பட்டுள்ளது.  இதேபோன்று முன் சீட்டில் அமரும் பயணி மற்றும் டிரைவர் சீட் பெல்ட் அணிந்திருப்பதை உணர்த்தும் ரிமைண்டர் அம்சம் வழங்கப்பட்டிருக்கிறது. அதிக வேகத்தில் சென்றால் எச்சரிக்கும் ஹை ஸ்பீடு அலெர்ட் போன்றவை கூடுதல் பாதுகாப்பு அம்சங்களாக இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

  முந்தைய மாடலில் வழங்கப்பட்டிருப்பதை போன்று, புதிய காரிலும் 106 ஹெச்.பி. பவர் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் 110 ஹெச்.பி. பவர் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் என்ஜினை கொண்டிருக்கிறது. இந்த என்ஜின்கள் 5 மற்றும் 6 கியர்களுடன் வருகிறது. 

  முந்தைய பெட்ரோல் மாடலைக் காட்டிலும் இந்த மேம்படுத்தப்பட்ட மாடல் விலை ரூ.50 ஆயிரம் குறைவாகும். இந்த கார் நிசான் கிக்ஸ், டாடா ஹாரியர், ஹுண்டாய் கிரெட்டா ஆகிய மாடல் கார்களுக்கு போட்டியாக அமைந்திருக்கிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரெனால்ட் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் க்விட் இ.வி. காரின் அதிகாரப்பூர்வ அறிமுக தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #KwidEV  ரெனால்ட் நிறுவனம் தனது க்விட் இ.வி. காரை ஷாங்காய் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. புதிய ரெனால்ட் இ.வி. அந்நிறுவனத்தின் க்விட் ஹேட்ச்பேக் மாடலை தழுவி உருவாகி இருக்கிறது. க்விட் இ.வி. கார் ஏப்ரல் 16 ஆம் தேதி நடைபெற இருக்கும் மோட்டார் விழாவில் அறிமுகமாகிறது.

  ரெனால்ட் க்விட் இ.வி. முன்னதாக கான்செப்ட் வடிவில் கடந்த ஆண்டு நடைபெற்ற பாரிஸ் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்ப்டடது. இதன் தயாரிப்பு முந்தைய வெர்ஷன் முன்னதாக வெளியிடப்பட்டது. இதில் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளது.

  இதே போன்ற வடிவமைப்பு முன்னதாக டாடா ஹேரியர் காரிலும் விரைவில் அறிமுகமாக இருக்கும் ஹூன்டாய் வென்யூ காரிலும் காணப்பட்டது. மற்ற அம்சங்களை பொருத்தவரை புதிய கிரில், சற்று வித்தியாசமான முன்புறம், பின்புறம் புதிய பம்ப்பர்கள் மற்றும் எல்.இ.டி. டெயில் லைட்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.  புதிய க்விட் இ.வி. காரின் தொழில்நுட்ப விவரங்கள் விரைவில் வெளியாக இருக்கின்றன. எனினும், இதன் பவர்டிரெயின் ரெனால்ட் மர்ரும் டாங்ஃபெங் இணைந்து உருவாக்கி இருக்கின்றன. இருநிறுவனங்களும் இதற்கான பணிகளை கடந்த ஆண்டு துவங்கின. இதற்கென இ.ஜி.டி. நியூ எனர்ஜி ஆட்டோமோட்டிவ் எனும் திட்டத்தை செயல்படுத்தியிருக்கின்றன.

  க்விட் எலெக்ட்ரிக் காரின் விவரங்கள் இதுவரை வெளியாகாத நிலையில் இதில் வழங்கப்படும் மோட்டார் ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 250 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய எலெக்ட்ரிக் காரை பயனர்கள் பொதுவெளியில் கிடைக்கும் சார்ஜிங் தளங்களிலும் சார்ஜ் செய்யலாம் என ரெனால்ட் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் தனது என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் காரின் விலை மாற்ற இருக்கிறது. #RenaultKwid  ரெனால்ட் நிறுவனத்தின் என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் மாடலான க்விட் காரின் இந்திய விலையை அதிகரிக்க இருக்கிறது.

  அந்த வகையில் இந்தியாவில் ரெனால்ட் க்விட் கார் விலை ஏப்ரல் 2019 முதல் தற்சமயம் இருப்பதில் இருந்து சுமார் 3 சதவிகிதம் வரை அதிகரிக்கப்படுகிறது. ரெனால்ட் நிறுவனத்திற்கு இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக க்விட் இருக்கிறது.

  சமீபத்தில் ரெனால்ட் தனது மேம்பட்ட 2019 க்விட் மாடல் காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. மேம்பட்ட 2019 ரெனால்ட் க்விச் காரில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டு பல்வேறு கூடுதல் அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், க்விட் காரின் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.  இந்தியாவில் மேம்பட்ட ரெனால்ட் க்விட் பேஸ் வேரியண்ட் விலை ரூ.2.66 லட்சம் என்றும் டாப்-எண்ட் மாடலின் விலை ரூ.4.6 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2019 க்விட் மாடல் புதிய பாதுகாப்பு விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

  புதிய விலை மாற்றத்தின் படி ரெனால்ட் க்வ்ட் ஹேட்ச்பேக் காரின் பேஸ் வேரியண்ட் விலையில் ரூ.9000 மற்றும் டாப் எண்ட் மாடலின் விலை ரூ.12,000 வரை அதிகமாகும். ஏப்ரல் 2019 முதல் புதிய விலை அமலாகிறது. அந்த வகையில் புதிய க்விட் பேஸ் வேரியண்ட் ரூ.2.74 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரெனால்ட் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட டஸ்டர் எஸ்.யு.வி. கார் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. #RenaultDuster  ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் டஸ்டர் எஸ்.யு.வி. காரினை 2012 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. கடந்த சில ஆண்டுகளில் இந்த கார் குறைந்தளவு அப்டேட்களை பெற்றிக்கிறது. இந்நிலையில், ரெனால்ட் தனது டஸ்டர் எஸ்.யு.வி. மாடலை அதிகளவு மேம்படுத்தி விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

  புதிய டஸ்டர் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி ரெனால்ட் நிறுவனம் டஸ்டர் காரில் இரண்டு அப்டேட்களில் வெளியிட இருக்கிறது. இதன் முதல் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்த ஆண்டும் இரண்டாம் தலைமுறை மாடல் 2020 ஆண்டின் மத்தியில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

  முதல் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் சிறிதளவு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும். அந்த வகையில் காரின் முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கும். இத்துடன் புதிய எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், டெயில் லைட்கள், தொடுதிரை வசதி கொண்ட மேம்பட்ட புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இதில் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகள் இடம்பெறும்.


  புகைப்படம் நன்றி: Zigwheels

  2019 ரெனால்ட் டஸ்டர் மாடலில் தற்போதைய மாடலில் வழங்கப்பட்டிருப்பதை போன்ற என்ஜின் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த காரிலும் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. இரு என்ஜின்களும் அவற்றுக்கான டிரான்ஸ்மிஷன்களை கொண்டிருக்கிறது. 

  இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 105 பி.ஹெச்.பி. பவர், 142 என்.எம். டார்க் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சி.வி.டி. டிரான்ஸ்மிஷன் உடன் கிடைக்கும். இதன் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 84 பி.ஹெச்.பி. பவர், 200 என்.எம். டார்க் மற்றும் 110 பி.ஹெச்.பி. பவர், 245 என்.எம். டார்க் என இருவித செயல்திறன் கொண்டிருக்கும் என்றும் இவற்றுடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது AMT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம்.


  புகைப்படம் நன்றி: Zigwheels

  2020 ரெனால்ட் டஸ்டர் காரில் தற்போதைய டஸ்டர் மாடலில் வழங்கப்பட்டிருக்கும் அம்சங்கள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2020 டஸ்டர் காரின் கேபின் முழுமையாக மாற்றப்பட்டு, அதிகளவு பிரீமியம் அனுபவத்தை வழங்கும் என தெரிகிறது. இரண்டாம் தலைமுறை டஸ்டர் கார் புதிய பி0 பிளாட்ஃபார்மில் உருவாகும் என தெரிகிறது. இதே பிளாட்ஃபார்மில் நிசான் கிக்ஸ் மற்றும் கேப்டுர் கார்கள் உருவாகியிருக்கின்றன.

  பெட்ரோல் என்ஜின் கொண்ட ரெனால்ட் டஸ்டர் கார் பி.எஸ்.-VI ரக எமிஷன்களுக்கு பொருந்தும் வகையில் இருக்கிறது. எனினும், 2020 மாடலில் தற்போதைய டீசல் என்ஜினிற்கு மாற்றாக புதிய 1.5 லிட்டர் புளு DCi என்ஜின் வழங்கப்படலாம் என்றும் இது இருவிதங்களில் டியூன் செய்யப்பட்டிருக்கும் என தெரிகிறது. இதன் குறைந்த வெர்ஷன் 95 பி.ஹெச்.பி. பவர், 240 என்.எம். டார்க் திறனும், மற்றொரு வெர்ஷன் 115 பி.ஹெச்.பி. பவர், 260 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் என தெரிகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram