என் மலர்
கார்

முழுமையாக மாற்றப்படும் ரெனால்ட் டிரைபர் - ஸ்பை படங்களில் வெளியான புது தகவல்
- ரெனால்ட் விரைவில் டிரைபர் ஃபேஸ்லிஃப் மாடலையும் வெளியிட திட்டமிட்டுள்ளது.
- புதிய காரில் LED DRLகளுடன் ஒருங்கிணைக்கப்பட்ட திருத்தப்பட்ட ஹெட்லேம்ப்கள் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் தனது வாகன வரிசையை விரிவுபடுத்த ரெனால்ட் தயாராகி வருகிறது. டஸ்டர் மற்றும் பிக்ஸ்டரின் புதுப்பிக்கப்பட்ட மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. சமீபத்திய தகவல்களின்படி, ரெனால்ட் நிறுவனம் முதலில் பெட்ரோல் மூலம் இயங்கும் வேரியண்ட்களையும், அதைத் தொடர்ந்து இரண்டு எஸ்யூவிக்களின் ஹைப்ரிட் மாடல்களையும் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவை தவிர, ரெனால்ட் விரைவில் டிரைபர் ஃபேஸ்லிஃப் மாடலையும் வெளியிட திட்டமிட்டுள்ளது. சமீபத்தில், ரெனால்ட் டிரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் டெஸ்டிங் கார் சென்னையில் காணப்பட்டது. சோதனை வாகனம் முழுமையாக உருமறைப்பு செய்யப்பட்டிருந்தாலும், அது புதிதாக வடிவமைக்கப்பட்ட முன்பக்கத்துடன் வெளியாகும் என்று தெரிகிறது.
ஏற்கனவே வெளியான டெஸ்டிங் புகைப்படங்களில் இந்த கார், சதுர வடிவ பின்புற விளக்குகளை கொண்டிருக்கும் என்று தெரிவித்தது. இருப்பினும், இந்த முறை, சோதனை வாகனம் டிரைபரின் வரவிருக்கும் மாடலின் முன்பக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது. டிரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் புதிதாக வடிவமைக்கப்பட்ட முன்பக்க தோற்றம் பெறும் என்று தற்போதைய புகைப்படங்கள் தெரிவிக்கின்றன.
இந்த புதிய காரில் LED DRLகளுடன் ஒருங்கிணைக்கப்பட்ட திருத்தப்பட்ட ஹெட்லேம்ப்கள் வழங்கப்படுகிறது. ஸ்பை படங்களின் படி புதிய டிரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வட்ட வடிவம் கொண்ட ஃபாக் லேம்ப்கள் மற்றும் கிடைமட்டமாக வைக்கப்பட்டுள்ள ஏர் டேம்களைப் பெறும் என்பதையும் குறிக்கிறது.
உட்புறத்தில், பெரிய இன்ஃபோடெயின்மென்ட் திரை மற்றும் புதிதாக வடிவமைக்கப்பட்ட டேஷ்போர்டு போன்ற சில புதுப்பிக்கப்பட்ட தொழில்நுட்பங்களை ரெனால்ட் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைபர் ஃபேஸ்லிஃப்ட் குறித்து ரெனால்ட் இன்னும் எந்த விவரங்களையும் குறிப்பிடவில்லை. இருப்பினும், தற்போதைய மாடல்களில் வழங்கப்படுவது போல் பவர்டிரெய்னை இது தக்க வைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT கியர்பாக்ஸ் விருப்பங்களுடன் இணைக்கப்பட்ட 1.0-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் 3-சிலிண்டர் பெட்ரோல் எஞ்சினைப் பெற வாய்ப்புள்ளது.






