search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    இந்திய சந்தையில் ஆறு புதிய கார்களை கொண்டுவரும் ரெனால்ட்-நிசான்
    X

    இந்திய சந்தையில் ஆறு புதிய கார்களை கொண்டுவரும் ரெனால்ட்-நிசான்

    • ரெனால்ட்-நிசான் நிறுவனங்கள் கூட்டணியில் பல்வேறு புதிய கார் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
    • புதிய கார் மாடல்களில் ஏ பிரிவு எலெக்ட்ரிக் வாகனங்களும் இடம்பெற்றுள்ளன.

    ரெனால்ட்-நிசான் கூட்டணியின் கீழ் இந்திய சந்தையில் ஆறு புதிய மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. புதிய கார்களில் நான்கு சி பிரிவு எஸ்யுவி-க்கள் மற்றும் இரண்டு ஏ பிரிவு எலெக்ட்ரிக் வாகனங்கள் இடம்பெற இருக்கின்றன. இவற்றில் எலெக்ட்ரிக் வாகனங்கள் முதலில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இதில் இரு நிறுவனங்களுக்கும் மூன்று மாடல்கள் உள்ளன.

    புதிய கார்கள் குளோபல் காமல் மாட்யுல் (CMF) பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகின்றன. அனைத்து கார்களும் அதிகளவு உள்நாட்டு உபகரணங்களை கொண்டிருக்கும். மேலும் சென்னையில் உள்ள கூட்டணி ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இந்த குழுமம் சார்பில் புதிய திட்டத்திற்காக ரூ. 3 ஆயிரத்து 500 கோடியை முதலீடு செய்ய இருக்கிறது. இதன் மூலம் 2 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.

    இதுதவிர ரெனால்ட் நிசான் ஆட்டோமோடிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆலை மறுசுழற்சி செய்யப்பட்ட எரிசக்தியை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன் இந்த நிறுவனம் ரெனால்ட்-டிரைபர் சார்ந்த நிசான் எம்பிவி மாடலை இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிவித்து இருந்தது.

    "தமிழ் நாட்டில் ரெனால்ட்-நிசான் கூட்டமைப்பு உற்பத்தி மற்றும் டிசைன் பிரிவு கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. தமிழ் நாடு அரசு மற்றும் கூட்டணிக்கு இது மிக முக்கியமான மற்றும் அதிக மதிப்பு கொண்ட உறவு ஆகும். இதன் மூலம் மாநிலத்தில் நேரடியாக 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவின் ஆட்டோமோடிவ் தலைநகராக தமிழ் நாடு தொடர்ந்து நீடிக்கும்."

    "ஆட்டோமொபைல் உற்பத்தி, ஆட்டோ உபகரணங்கள் மற்றும் டிசைன் உள்ளிட்டவைகளுக்கான முக்கிய பகுதியாக தமிழ் நாடு மாறும். தமிழ் நாட்டில் ரெனால்ட்-நிசான் கூட்டணியின் நவீனமயமாக்கல் தொடர்பான புதிய முதலீட்டின் கீழ் துவங்க இருக்கும் திட்டம் எங்களுக்கு மகிழ்ச்சியை ஏறப்டுத்தி இருக்கிறது. இது மேக் இன் தமிழ் நாடு மற்றும் மேக் இன் இந்தியா ஃபார் தி வொர்ல்டு திட்டத்தின் கீழ் வருகிறது." என தமிழ் நாடு அரசின் தொழிற்சாலைகள் பிரிவு கூடுதல் மூத்த ஆணையர் எஸ் கிருஷ்ணன் தெரிவித்து இருக்கிறார்.

    Next Story
    ×