search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MCD polls"

    • பெரும்பான்மையை தாண்டி 130 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி.
    • உலகின் மிகப் பெரிய கட்சி தோற்கடிக்கப் பட்டதாக மணீஷ் சிசோடியா கருத்து

    டெல்லி மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி பாஜகவிடம் இருந்து மாநகராட்சியை கைப்பற்றி உள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடரும் நிலையில், மதியம் 2 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி கட்சி 130 இடங்களில் வெற்றி பெற்று 4 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

    பாஜக 99 வார்டுகளில் வெற்றி பெற்று 4 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 7 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் வடகிழக்கு டெல்லியில் உள்ள சீலம்பூர் தொகுதியில் ஷகீலா பேகம் உட்பட 3 சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். தேர்தல் முடிவுகள் குறித்து பேசிய டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, டெல்லி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், உலகின் மிகப் பெரிய கட்சி தோற்கடிக்கப் பட்டதாகவும் கூறியுள்ளார். 

    • ஆம் ஆத்மி கட்சி 104 இடங்களை வென்றதுடன் 31 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
    • பாஜக 83 வார்டுகளில் வெற்றி பெற்றதுடன், 19 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

    டெல்லி மாநகராட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் ஆரம்பம் முதலே ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்றுள்ளது. பகல் 12.30 மணி நிலவரப்படி அந்த கட்சி 104 வார்டுகளில் வெற்றி பெற்றிருந்தது. மேலும் 31 வார்டுகளில் முன்னிலையில் உள்ளது, இதன் மூலம் மொத்தம் 135 வார்டுகளில் அந்த கட்சி வெற்றி பெறும் என தெரிகிறது. டெல்லி மாநகராட்சியை கைப்பற்ற 126 வார்டுகளில் வெற்றி பெற்றால் போதும்.

    இதனையடுத்து 15 ஆண்டு காலமாக பாஜகவின் வசம் இருந்த டெல்லி மாநகராட்சி தற்போது ஆம் ஆத்மி கைப்பற்றுவது உறுதியாகி உள்ளது. இந்த தேர்தலில் மதியம் 12.30 மணி நிலவரப்படி பாஜக 83 வார்டுகளை வென்று 19 வார்டுகளில் முன்னிலையில் இருந்தது. காங்கிரஸ் கட்சி ஐந்து இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 6 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில் டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி பெற்றுள்ள வெற்றி குறித்து பேசிய பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் கூறியுள்ளதாவது:  டெல்லியில் 15 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியை அரவிந்த் கெஜ்ரிவால் அகற்றினார். தற்போது மாநகராட்சியில் 15 ஆண்டு கால பாஜக ஆட்சியையும் அவர் அகற்றி உள்ளார். டெல்லி மக்கள் வெறுப்பு அரசியலை விரும்புவதில்லை, பள்ளிகள், மருத்துவமனைகள், மின்சாரம், தூய்மை மற்றும் உள்கட்டமைப்புக்காக வாக்களிக்கிறார்கள் என்பதை இந்த தேர்தல் காட்டுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • டெல்லி மாநகராட்சி தேர்தல் இன்று நடைபெறுகிறது.
    • அனைத்து கடைகளும் இன்று மூடப்படும் என வர்த்தக மற்றும் தொழில்துறை அமைப்பு தெரிவித்தது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் மாநகராட்சி தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வேட்பாளர்களை களத்தில் நிறுத்தி உள்ளன.

    மொத்தம் உள்ள 250 வார்டுகளுக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் ஓய்ந்தது.

    கடந்த தேர்தலில் பா.ஜ.க. மாநகராட்சியைக் கைப்பற்றியிருந்தது. வரும் 7ம் தேதி வாக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது

    டெல்லி மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு அனைத்து கடைகளும் நாளை மூடப்படும் என வர்த்தக மற்றும் தொழில்துறை அமைப்பு தெரிவித்துள்ளது.

    • டெல்லி மாநகராட்சியில் மொத்தம் 250 வார்டுகள் உள்ளன.
    • இந்தத் தேர்தலில் மொத்தம் 1.46 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

    புதுடெல்லி:

    டெல்லி மாநகராட்சியில் மொத்தம் 250 வார்டுகள் உள்ளன. இதில் 42 வார்டுகள் பட்டியலினத்தவர்களுக்கும், 50 சதவீத வார்டுகள் மகளிருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் மொத்தம் 1.46 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

    இதற்கிடையே, டெல்லி மாநகராட்சிக்கு டிசம்பர் 4-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில், மாநகராட்சி தேர்தல் எதிரொலியாக டெல்லியில் அரசு பள்ளிகளுக்கு இன்றும், வரும் 5-ம் தேதியும் விடுமுறை அறிவித்து மாநில கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

    ×