search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jeep India"

    • ஜீப் மெரிடியன் மாடலில் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • ஜீப் இந்தியா நிறுவனம், ஒரு மாத காலத்திற்கு மழைகால சிறப்பு வாகன சரிவீஸ் திட்டத்தை அறிவித்தது.

    ஜீப் இந்தியா நிறுவனம் தனது மெரிடியன் 7 சீட்டர் எஸ்யுவி மாடலின் தேர்வு செய்யப்பட்ட வேரியன்ட்களை நிறுத்தி இருக்கிறது. ஜீப் மெரிடியன் எஸ்யுவி-இன் லிமிடெட் வேரியண்ட் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வேரியன்ட்கள் நிறுத்தப்பட்டன.

    இந்திய சந்தையில் ஜீப் மெரிடியன் லிமிடெட் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 30 லட்சத்து 10 ஆயிரம், ரூ. 32 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. ஜீப் மெரிடியன் மாடல் - லிமிடெட் (O), X, அப்லேன்ட் மற்றும் லிமிடெட் பிளஸ் என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

     

    ஜீப் மெரிடியன் மாடலில் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 168 ஹெச்பி பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்படுகிறது. இந்த காரின் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களுக்கு 4x4 சிஸ்டம் வழங்கப்படுகிறது.

    சமீபத்தில் தான் ஜீப் இந்தியா நிறுவனம் ஒரு மாத காலத்திற்கு மழைகால சிறப்பு வாகன சரிவீஸ் திட்டத்தை அறிவித்து இருந்தது. இதில் வாகன பரிசோதனை, இலவச அலைன்மென்ட், டயர் மாற்றும் சேவை வழங்கப்படுகிறது.

    • ஜீப் காம்பஸ் டீசல் வேரியண்ட்கள் மட்டுமே இந்திய சந்தையில் கிடைக்கின்றன.
    • இந்திய சந்தையில் ஜீப் காம்பஸ் விலை ரூ. 21 லட்சத்து 44 ஆயிரம் என்று துவங்குகிறது.

    ஜீப் இந்தியா நிறுவனம் தனது காம்பஸ் காரின் பெட்ரோல் வேரியண்ட் விற்பனையை அதிகாரப்பூர்வமாக நிறுத்திவிட்டது. காம்பஸ் பெட்ரோல் வேரியண்ட் நிறுத்தப்பட்டது குறித்து அறிக்கை வெளியிட்டு இருக்கும் ஜீப் இந்தியா நிறுவனம் டீசல் பவர்டிரெயின் மற்றும் மாற்று எரிபொருள் கொண்டு இயங்கும் என்ஜின் ஆப்ஷன்களில் முதலீடு செய்யப்போவதாக அறிவித்து இருக்கிறது.

    இந்த அறிக்கை காரணமாக ஜீப் இந்தியா நிறுவனம் காம்பஸ் பெட்ரோல் வேரியண்டை மீண்டும் அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகளை குறைத்து இருக்கிறது. இது குறித்து ஜீப் இந்தியா வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது..

    "பிரீமியம் எஸ்யுவி பிரிவில் டீசல் என்ஜினுக்கு இன்றும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. ஜீப் இந்தியா நிறுவனம் 2.0 லிட்டர் மல்டிஜெட் டர்போ டீசல் பவர்டிரெயினை மேம்படுத்த முதலீடு செய்யும். புதிய வெர்ஷன்கள் அதிக டார்க், குறைந்த மாசு அளவுகளை வெளிப்படுத்துவதோடு, எரிபொருள் சிக்கனத்தை வழங்கும்."

    "எதிர்காலத்தில் குறிப்பிடத்தக்க மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய ஜீப் இந்தியா திட்டமிட்டுள்ளது. அனைத்து விதமான என்ஜின் மற்றும் எரிபொருள் ஆப்ஷன்களையும் முயற்சி செய்து, பயனர்களுக்கு ஏற்ற பவர்டிரெயினை வழங்குவோம்," என்று தெரிவித்துள்ளது.

    பெட்ரோல் வேரியண்ட் நிறுத்தப்பட்டதை அடுத்து ஜீப் காம்பஸ் டீசல் வேரியண்ட்கள் மட்டுமே இந்திய சந்தையில் கிடைக்கின்றன. இவற்றின் விலை ரூ. 21 லட்சத்து 44 ஆயிரம் என்று துவங்குகிறது. டாப் எண்ட் மாடல் விலை ரூ. 31 லட்சத்து 64 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    ஜீப் காம்பஸ் டீசல் வேரியண்டில் 2.0 லிட்டர், இன்லைன், நான்கு சிலிண்டர்கள் கொண்ட, டர்போ சார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 172 பிஎஸ் பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் 4x4 சிஸ்டமும் வழங்கப்படுகிறது. 

    • ஜீப் மெரிடியண் அப்லேண்ட் என்று அழைக்கப்படும் புதிய காரில் காஸ்மடிக் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன.
    • கார்களை வித்தியாசப்படுத்தும் ஸ்போர்ட் அப்கிரேடுகளை இரண்டு மாடல்களும் கொண்டிருக்கின்றன.

    ஜீப் நிறுவனத்தின் இரண்டு ஸ்பெஷல் எடிஷன் எஸ்யுவி கார் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. மெரிடியன் X மற்றும் மெரிடியண் அப்லேண்ட் என்று அழைக்கப்படும் புதிய கார்களில் காஸ்மடிக் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. இரு மாடல்களிலும் ஒரே மாதிரியான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

     

    இவைதவிர கார்களை வித்தியாசப்படுத்தும் ஸ்போர்ட் அப்கிரேடுகளை இரண்டு மாடல்களும் கொண்டிருக்கின்றன. புதிய ஜீப் மெரிடியன் X ஸ்பெஷல் எடிஷன் மற்றும் மெரிடியன் அப்லேண்ட் மாடல்கள் லிமிடெட் (O) வேரியண்டை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இவற்றில் ஜீப் 4x4 செலக்-டெரைன் 4-வீல் டிரைவ் சிஸ்டம் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்பட்டுள்ளது.

     

    இவைதவிர இரு ஸ்பெஷல் எடிஷன் மாடல்களிலும் சைடு ஸ்டெப், ஆம்பியண்ட் லைட்டிங், புதிய கால்மிதி, யு-கனெக்ட் 5 இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களும் தற்போது சில்வரி மூன் மற்றும் கேலக்ஸி புளூ என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கின்றன. இத்துடன் பின்புறம் எண்டர்டெயின்மெண்ட் பேக்கேஜ் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.

    ஜீப் மெரிடியன் X மற்றும் மெரிடியன் அப்லேண்ட் மாடல்களில் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 168 ஹெச்பி பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    • ஜீப் நிறுவன கார் மாடல்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
    • சமீபத்தில் கார் மாடல்கள் விலையை உயர்த்துவதாக ஜீப் இந்தியா நிறுவனம் அறிவித்து இருந்தது.

    ஜீப் இந்தியா நிறுவனம் தனது காம்பஸ் மற்றும் மெரிடியன் எஸ்யுவி-க்கள் விலையை மாற்றியமைத்து இருக்கிறது. அதன்படி இரு கார்களின் பேஸ் வேரியண்ட்களுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மற்ற வேரியண்ட்களின் விலை ரூ. 35 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. விலை அப்டேட்களுடன் புதிய கார்கள் RDE விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டுள்ளன.

    விலை மாற்றத்தின் படி ஜீப் காம்பஸ் ஸ்போர்ட் ஆட்டோமேடிக் பெட்ரோல் மாடல் விலை தற்போது ரூ. 20 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இது முந்தைய மாடல் விலையை விட ரூ. 1 லட்சம் வரை குறைவு ஆகும். இதர பெட்ரோல் மாடல்களின் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதர டீசல் வேரியண்ட்களின் விலை ரூ. 35 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு விட்டது.

     

    புதிய அறிவிப்பின் படி ஜீப் காம்பஸ் மாடலின் விலை ரூ. 20 லட்சத்து 99 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 31 லட்சத்து 64 ஆயிரம் அதிகம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    ஜீப் மெரிடியன் மாடலை பொருத்தவரை மேனுவல் கியர்பாக்ஸ் மாடலுக்கு ரூ. 2 லட்சத்து 35 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு விட்டது. தற்போது ஜீப் மெரிடியன் விலை ரூ. 27 லட்சத்து 75 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 37 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    • ஜீப் நிறுவனத்தின் கிராண்ட் செரோக்கி மாடல் ஒற்றை வேரியண்டில் விற்பனை செய்யப்படுகிறது.
    • கிராண்ட் செரோக்கி மாடலில் 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் உள்ளது.

    ஜீப் இந்தியா நிறுவனம் தனது கிராண்ட் செரோக்கி விலையை அதிரடியாக உயர்த்தி இருக்கிறது. ஜீப் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் எஸ்யுவி மாடல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இதன் விலை தற்போது ரூ. 1 லட்சம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. விலை உயர்வை தொடர்ந்து ஜீப் கிராண்ட் செரோக்கி விலை ரூ. 78 லட்சத்து 50 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என மாறி இருக்கிறது.

    கிராண்ட் செரோக்கி மாடலில் 7-பாக்ஸ் முன்புற கிரில், கிளாம்ஷெல் பொனெட், 20 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கார் 5-சீட் எஸ்யுவி-யாக கிடைக்கிறது. இந்த காரில் 10.2 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், பானரோமிக் சன்ரூஃப் உள்ளது.

     

    ஜீப் கிராண்ட் செரோக்கி மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 268 ஹெச்பி பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன், பேடில் ஷிஃப்டர்கள் உள்ளன.

    இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் ஜீப் நிறுவனம் தனது ஜீப் ராங்ளர் மற்றும் மெரிடியன் மாடல்கள் விலையை உயர்த்தியது. இதில் மெரிடியன் மாடலின் அனைத்து வேரியண்ட்களின் விலையும் ரு. 20 ஆயிரமும், ராங்ளர் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 20 ஆயிரமும் உயர்த்தப்பட்டது.

    விலை உயர்வை அடுத்து இரு கார்களின் விலை தற்போது ரூ. 30 லட்சத்து 10 ஆயிரமும், ரூ. 59 லட்சத்து 05 ஆயிரம் என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • ஜீப் நிறுவனத்தின் காம்பஸ் மற்றும் ராங்ளர் மாடல் கார்களின் விலை இந்தியாவில் மாற்றப்பட்டு இருக்கிறது.
    • விலை மாற்றம் ராங்ளர் காரின் அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும் என ஜீப் தெரிவித்து இருக்கிறது.

    ஜீப் இந்தியா நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்கள் விலையை இந்தியாவில் உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வு ஏற்கனவே அமலுக்கு வந்து விட்டது. விலை உயர்வில் ஜீப் காம்பஸ் மற்றும் ராங்ளர் மாடல்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.

    அதன்படி ஜீப் ராங்ளர் மாடலின் அன்லிமிடெட் மற்றும் ரூபிகான் வேரியண்ட் விலை முன்பை விட ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் வரை அதிகரித்து இருக்கிறது. ஜீப் காம்பஸ் மாடல் விலை ரூ. 50 ஆயிரம் உயர்த்தப்பட்டு உள்ளது. விலை உயர்வை தொடர்ந்து ஜீப் காம்பஸ் பேஸ் மாடல் விலை ரூ. 19 லட்சத்து 29 ஆயிரம் முதல் துவங்குகிறது.


    ஜீப் காம்பஸ் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 32 லட்சத்து 22 ஆயிரம் என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தற்போதைய விலை உயர்வை அடுத்து ஜீப் காம்பஸ் விலை மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    முன்னதாக இதே ஆண்டின் ஏப்ரல் மற்றும் ஜூலை மாத வாக்கில் ஜீப் காம்பஸ் விலை முறையே ரூ. 25 ஆயிரம் மற்றும் ரூ. 35 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ஜீப் இந்தியா நிறுவனம் இந்தியாவில் புதிய காம்பஸ் லிமிட்டெட் பிளஸ் வேரியன்ட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. #jeepcompass #limitededition



    ஜீப் இந்தியா நிறுவனம் காம்பஸ் எஸ்.யு.வி. மாடலின் புதிய வேரியன்ட்டை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஜீப் காம்பஸ் லிமிட்டெட் பிளஸ் என அழைக்கப்படும் புதிய கார் ஏற்கனவே இந்தியாவில் விற்பனையாகும் ஜீப் காம்பஸ் எஸ்.யு.வி. டாப் என்ட் வேரியன்ட்டை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.

    புதிய லிமிட்டெட் பிளஸ் வேரியன்ட் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும். பெட்ரோல் வெர்ஷன் 2-வீல் டிரைவ் ஆடிடோமேடிக் வடிவிலும், டீசல் வெர்ஷன் 2-வீல் மற்றும் 4-வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    லிமிட்டெட் வேரியன்ட்டில் வழங்கப்பட்டு இருக்கும் மற்ற அம்சங்களை விட புதிய லிமிட்டெட் பிளஸ் வேரியன்ட் பல்வேறு கூடுதல் உபகரணங்களுடன் வழங்கப்பட்டுள்ளது. அறிமுகம் செய்யப்பட்டிருப்பதோடு, புதிய லிமிட்டெட் பிளஸ் வேரியன்ட் முன்பதிவும் துவங்கப்பட்டுள்ளது. முன்பதிவு கட்டணமாக ரூ.50,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், விநியோகம் அக்டோபர் மாத முதல் வாரத்தில் துவங்குகிறது.



    புதிய ஜீப் காம்பஸ் லிமிட்டெட் பிளஸ் வேரியன்ட்டில் பானரோமா சன்ரூஃப், 18-இன்ச் அலாய் வீல்கள் கருப்பு நிறத்திலும், அலுமினியம் ஷேட் பாலிஷ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் யுகனெக்ட் 8.4 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய லிமிட்டெட் பிளஸ் மாடலில் ஆட்டோமேடிக் ஹெட்லேம்ப்கள், ரெயின் சென்சிங் வைப்பர்கள், ஆட்டோ-டிம்மிங் ரியர்வியூ மிரர் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை ஆறு ஏர்பேக் வழங்கப்பட்டுள்ளது. புதிய உபகரணங்கள் மற்றும் அம்சங்கள் தவிர புதிய மாடலின் மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. 

    அதன்படி ஜீப் காம்பஸ் லிமிட்டெட் பிளஸ் மாடலில் 2.0-லிட்டர் மல்டிஜெட் டீசல் இன்ஜின் மற்றும் 1.3 லிட்டர் மல்டிஏர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதன் டீசல் இன்ஜின் 170 பி.ஹெச்.பி. பவர், 350 என்.எம். டார்கியூ செயல்திறனும், பெட்ரோல் மோட்டார் 160 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் இரண்டு இன்ஜின்களும் 7-ஸ்பீடு ஆட்டோமேடிக் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் ஜீப் காம்பஸ் லிமிட்டெட் பிளஸ் வேரியன்ட் விலை ரூ.21.07 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் துவங்குகிறது. இதன் டாப்-என்ட் வேரியன்ட் விலை ரூ.22.85 லட்சம்  (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. #jeepcompass #limitededition
    ஜீப் காம்பஸ் லிமிட்டெட் பிளஸ் வேரியன்ட் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது. சமீபத்தில் ஜீப் காம்பஸ் பிளாக் பேக் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டது. #jeepcompass



    இந்தியாவில் ஜீப் காம்பஸ் பிளாக் பேக் ஸ்பெஷல் எடிஷன் மாடல் அறிமுகமான சில தினங்களில் ஜீப் காம்பஸ் லிமிட்டெட் பிளஸ் வேரியன்ட் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது.

    வரும் வாரங்களில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜீப் காம்பஸ் லிமிட்டெட் பிளஸ் வேரியன்ட் பெயருக்கு ஏற்றார் போல் ஏற்கனவே விற்பனையாகும் ஓ வேரியன்ட்டை தழுவி உருவாக்கப்படுகிறது. இதன் விலை ரூ.20 லட்சத்திற்கும் அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய ஜீப் காம்பஸ் மாடல் டூயல்-டோன் நிறங்களில் புதிய ஸ்போர்ட் தோற்றத்துடன் உருவாகியுள்ளது. இதன் சக்கரங்களிலும் டூயல் டோன் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. சமீபத்திய ஸ்பை படங்களின் படி இந்த எஸ்.யு.வி. மாடலில் ஸ்போர்ட் தோற்றம் கொண்ட பானரோமிக் சன்ரூஃப், பெரிய இன்ஃபோடெயின்மென்ட் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.


    புகைப்படம் நன்றி: TeamBHP

    இத்துடன் ஓட்டுனர் மற்றும் முன்பக்க இருக்கைகளை பவர் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய வசதி வழங்கப்படுகிறது. மற்ற அம்சங்கள் ஜீப் காம்பஸ் ஓ வேரியன்ட்டில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்த வரை காம்பஸ் லிமிட்டெட் பிளஸ் மாடலிலும் பெட்ரோல் ஆட்டோ அல்லது டீசல் மேனுவல் (2wd அல்லது 4wd) ஆப்ஷனுடன் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதில் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் டீசல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் 171 பி.ஹெச்.பி. பவர், 350 என்.எம். டார்கியூ செயல்திறன் கொண்டிருக்கிறது.

    பெட்ரோல் வேரியன்ட்டில் 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு இன்ஜின் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் 160 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இரண்டும் டாப்-என்ட் வேரின்ட் என்பதால் டீசல் வேரியன்ட்டில் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், பெட்ரோல் வேரியன்ட்டில் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
    ஜீப் காம்பஸ் பெட்ராக் லிமிட்டெட் எடிஷன் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

     
    ஃபியாட் க்ரிஸ்லர் ஆட்டோமொபைல் நிறுவனம் புதிய ஜீப் காம்பஸ் பெட்ராக் லிமிடெட் எடிஷன் கார் இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது. இந்தியாவில் அறிமுகமான ஒரே வருடத்தில் 25,000 ஜீப் காம்பஸ் யூனிட் விற்பனையானதை தொடர்ந்து புதிய லிமிடெட் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    இந்தியாவில் அறிமுகமானது முதல் ஜீப் காம்பஸ் தரம் மற்றும் டிரைவபிலிட்டி உள்ளிட்ட காரணங்களுக்காக வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. 

    புதிய பெட்ராக் எடிஷன் மாடலில் காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதன்படி புதிய மாடலில் 16-இன்ச், கிளாஸ் பிளாக் அலாய் வீல், பிளாக் ரூஃப் ரெயில்கள் மற்றும் மிரர் கவர்கள் வழங்கப்பட்டுள்ளது. 



    இத்துடன் புதிய சைடு ஸ்டெப் இன்க்ரெஸ் மற்றும் எக்ரஸ், காரில் நீலவாக்கில் டீக்கல்ள் மற்றும் முன்புற ஃபென்டர்களில் பெட்ராக் பேட்ஜிங் செய்யப்பட்டுள்ளது. 

    இதன் சீட் கவர்களில் பெட்ராக் பிரான்டிங் மற்றும் பிரத்யேக மேட்கள் மற்றும் ரிவர்ஸ் கேமரா உள்ளிட்டை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 2-லிட்டர், 173 பிஎஸ் டீசல் இன்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டிருக்கிறது. எனினும் 4x2 டிரைவ் மட்டுமே கிடைக்கிறது.

    இந்தியாவில் ஜீப் காம்பஸ் பெட்ராக் லிமிடெட் எடிஷன் விலை ரூ.17.53 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஜீப் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 2019 ஜீப் ரெனகேடு ஃபேஸ்லிஃப்ட் மாடலின் புகைப்படங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
    வாஷிங்டன்:

    ஜீப் நிறுவனத்தின் 2019 ரெனகேடு ஃபேஸ்லிஃப்ட் மாடலின் புகைப்படங்களை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

    மேம்படுத்தப்பட்ட ஜீப் ரெனகேடு இந்தியாவில் மிக விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஃபேஸ்லிஃப்ட் ரெனகேடு மாடலில் பல்வேறு காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. 

    முன்னதாக இந்த மாடலின் டீசர் வெளியிடப்பட்ட நிலையில், தற்சமயம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் அதிகாரப்பூர்வ புகைப்படத்தில் எஸ்யுவி பார்க்க முந்தைய மாடல்களை விட மிக அழகாக காட்சியளிக்கிறது.



    2019 ஜீப் ரெனகேடு மாடலில் தலைசிறந்த வடிவமைப்பு கொண்ட முன்பக்க கிரில், எல்இடி ஹெட்லைட், டிஆர்எல்-கள், முன்பக்க பம்ப்பர்கள் சிசல்டு லோவர் செக்ஷன் கொண்டுள்ளது. பின்புறம் புதிய டெயில்லைட்கள், மேம்படுத்தப்பட்ட பின்புற பம்ப்பர்கள் வழங்கப்பட்டுள்ளது.

    ரெனகேடு மாடல்களின் சில்ஹௌட் மாற்றப்படவில்லை என்றாலும், 2019 மாடல் முந்தைய மாடல்களை விட அதிக ஸ்போர்ட் தோற்றம் கொண்டுள்ளது. உள்புறத்தில் 2019 ஜீப் ரெனகேடு மாடலில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

    புதிய ரெனகேடு ஃபேஸ்லிஃப்ட் மாடலின் உள்புறம் 2019 செரோக்கி மாடலை தழுவி உருவாக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2019 ரெனகேடு மாடலில் 2-லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட இருக்கிறது. எனினும் இதன் செயல்திறன் குறித்து எவ்வித தகவலும் இல்லை.
    இந்தியாவில் புதிய என்ட்ரி-லெவல் எஸ்யுவி மாடலை வெளியிட இருப்பதாக ஜீப் இந்தியா தெரிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் நான்கு மீட்டர் அளவு கொண்ட புதிய எஸ்யுவி மாடலை வெளியிட திட்டமிட்டுள்ளதாக ஜீப் இந்தியா தெரிவித்துள்ளது. புதிய எல்யுவி அந்நிறுவனத்தின் என்ட்ரி-லெவல் மாடலாக இருக்கும்.

    புதிய என்ட்ரி-லெவல் ஜீப் எஸ்யுவி அடுத்த தலைமுறை ஃபியாட் பான்டா மற்றும் 500 பிளாட்ஃபார்ம் கொண்டிருக்கும். ஃபியாட் க்ரிஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் பிளாட்ஃபார்மின் படி, பான்டா 4X4 மாடலை தழுவி பாடி மற்றும் உள்புறத்தை ஜீப் தயாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    புதிய எஸ்யுவி ஜீப் வழக்கமான வடிவமைப்புகளுடன் ஆஃப்-ரோடிங் திறன்களை கொண்டிருக்கும். சர்வதேச சந்தையில் 2022-ம் ஆண்டிற்குள் ஜீப் நிறுவனம் நான்கு எலெக்ட்ரிக் மற்றும் பத்து பிளக்-இன் ஹைப்ரிட் மாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளது. இத்துடன் 2022-ம் ஆண்டு ராங்களர் பிக்-அப் மற்றும் கிரான்ட் வேகனீர் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.



    இந்தியாவில் விற்பனையாகும் பெரும்பாலான எஸ்யுவி மாடல்கள் அளவில் நான்கு மீட்டருக்கும் குறைவாகவே இருக்கிறது. அந்த வகையில் விற்பனையை அதிகரிக்க புதிய என்ட்ரி-லெவல் எஸ்யுவி மாடலை பயன்படுத்திக் கொள்ள ஜீப் திட்டமிட்டுள்ளது. காம்பேக்ட் எஸ்யுவி மட்டுமின்றி மூன்று அடுக்குகள் கொண்ட மிட்-சைஸ் யூடிலிட்டி வாகனத்தை அறிமுகம் செய்யவும் ஜீப் திட்டமிட்டிருக்கிறது.

    ஃபியாட் க்ரிஸ்லர் ஆட்டோமொபைல் நிறுவனமும் இந்தியாவை உறுதியான ஏற்றுமதி களமாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. ஜீப் நிறுவன தலைமை செயல் அதிகாரி மைக் மேன்லி கூறும் போது, மகாராஷ்ட்ராவில் உள்ள ஃபியாட் க்ரிஸ்லர் ஆட்டோமொபைல் நிறுவன தயாரிப்பு ஆலையின் தயாரிப்பு திறனை அதிகரிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

    தற்சமயம் இந்த ஆலையில் 1,60,000 யூனிட்கள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், விரைவில் 2,40,000 யூனிட்களை தயாரிக்க ஜீப் திட்டமிடுகிறது. இத்துடன் நாட்டில் தற்சமயம் உள்ள ஜீப் விற்பனையகங்களின் எண்ணிக்கையை இருமடங்கு அதிகரிக்க ஜீப் மிடிவு செய்துள்ளது. இதேபோன்று சர்வீஸ் மையங்களும் அதிகரிக்கப்படுகிறது.
    ×