என் மலர்

  நீங்கள் தேடியது "DP Gajendran"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வயது மூப்பு காரணமாக இயக்குனர் டி.பி.கஜேந்திரன் உடல்நலக் குறைவு ஏற்பட்டு காலமானார்.
  • இவரது மறைவிற்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  பிரபல திரைப்பட இயக்குனரும், நடிகருமானவர் டி.பி.கஜேந்திரன் (வயது68). இவர் கே. பாலசந்தர், விசு, ராம நாராயணன் போன்றோரிடம் 60 படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். மேலும், எங்க ஊரு காவல்காரன், மிடில் கிளாஸ் மாதவன், பட்ஜெட் பத்மநாதன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கினார்.


   

  சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலான திரையுலக வாழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். வயது மூப்பு காரணமாக இயக்குனர் டி.பி.கஜேந்திரன் உடல்நலக் குறைவு ஏற்பட்டு நேற்று காலை காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  இந்நிலையில், இயக்குனர் டி.பி.கஜேந்திரன் மறைவிற்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "எந்த விஷயத்தையும் நகைச்சுவையோடு சொல்வதன் வலிமையை அறிந்தவர் இயக்குனர் திரு டிபி கஜேந்திரன். அவருக்கான இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்." என்று பதிவிட்டுள்ளார்.


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பல்வேறு திரைப்படங்களில் நடிகராகவும் தோன்றி கலை உலகுக்கு தமது சிறப்பான பங்களிப்பை வழங்கி வந்தவர் டி.பி.கஜேந்திரன்.
  • தற்போது எதிர்பாராதவிதமாக டி.பி.கஜேந்திரன் உடல்நலக்குறைவால் காலமாகி இருப்பது வேதனை அளிக்கிறது.

  சென்னை:

  பிரபல திரைப்பட இயக்குனரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள  அவரது இல்லத்தில் இன்று காலமானார். அவருக்கு வயது 68.

  இயக்குநராக மட்டுமின்றி 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடிகராகவும் முத்திரை பதித்த டி.பி.கஜேந்திரனின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  டி.பி.கஜேந்திரன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்:-

  பிரபல இயக்குநரும், நடிகரும், எனது கல்லூரி தோழருமான டி.பி.கஜேந்திரன் மறைந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. எங்க ஊரு காவல்காரன், பாண்டி நாட்டு தங்கம் போன்ற பல வெற்றி படங்களை டி.பி.கஜேந்திரன் இயக்கி உள்ளார்.

  பல்வேறு திரைப்படங்களில் நடிகராகவும் தோன்றி கலை உலகுக்கு தமது சிறப்பான பங்களிப்பை வழங்கி வந்தவர். 2021 செப்டம்பரில் டி.பி.கஜேந்திரனை நேரில் சென்று நலம் விசாரித்து வந்தேன். தற்போது எதிர்பாராதவிதமாக டி.பி.கஜேந்திரன் உடல்நலக்குறைவால் காலமாகி இருப்பது வேதனை அளிப்பதாக முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடிகராகவும் முத்திரை பதித்தவர் டி.பி.கஜேந்திரன்.
  • வீடு மனைவி மக்கள், பாண்டி நாட்டு தங்கம், பாட்டு வாத்தியார், பட்ஜெட் பத்மநாபன், மிடில் கிளாஸ் மாதவன், உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

  பிரபல திரைப்பட இயக்குனரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள இல்லத்தில் இன்று காலமானார். அவருக்கு வயது 68.

  இயக்குநராக மட்டுமின்றி 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடிகராகவும் முத்திரை பதித்தவர் டி.பி.கஜேந்திரன்.

  வீடு மனைவி மக்கள், பாண்டி நாட்டு தங்கம், சீனா தானா, பாட்டு வாத்தியார், பட்ஜெட் பத்மநாபன், மிடில் கிளாஸ் மாதவன், உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார்.

  நேற்று பழம்பெரும் பாடகி வாணிஜெயராம் உயிரிழந்த நிலையில் இன்று இயக்குனர் டி.பி.கஜேந்திரன் மறைவால் திரையுலகினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர். 

  ×