என் மலர்

  சினிமா செய்திகள்

  இயக்குனர் டி.பி.கஜேந்திரன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
  X

  இயக்குனர் டி.பி.கஜேந்திரன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பல்வேறு திரைப்படங்களில் நடிகராகவும் தோன்றி கலை உலகுக்கு தமது சிறப்பான பங்களிப்பை வழங்கி வந்தவர் டி.பி.கஜேந்திரன்.
  • தற்போது எதிர்பாராதவிதமாக டி.பி.கஜேந்திரன் உடல்நலக்குறைவால் காலமாகி இருப்பது வேதனை அளிக்கிறது.

  சென்னை:

  பிரபல திரைப்பட இயக்குனரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார். அவருக்கு வயது 68.

  இயக்குநராக மட்டுமின்றி 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடிகராகவும் முத்திரை பதித்த டி.பி.கஜேந்திரனின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  டி.பி.கஜேந்திரன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்:-

  பிரபல இயக்குநரும், நடிகரும், எனது கல்லூரி தோழருமான டி.பி.கஜேந்திரன் மறைந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. எங்க ஊரு காவல்காரன், பாண்டி நாட்டு தங்கம் போன்ற பல வெற்றி படங்களை டி.பி.கஜேந்திரன் இயக்கி உள்ளார்.

  பல்வேறு திரைப்படங்களில் நடிகராகவும் தோன்றி கலை உலகுக்கு தமது சிறப்பான பங்களிப்பை வழங்கி வந்தவர். 2021 செப்டம்பரில் டி.பி.கஜேந்திரனை நேரில் சென்று நலம் விசாரித்து வந்தேன். தற்போது எதிர்பாராதவிதமாக டி.பி.கஜேந்திரன் உடல்நலக்குறைவால் காலமாகி இருப்பது வேதனை அளிப்பதாக முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

  Next Story
  ×