search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5 people injured"

    • புகையிலைப்பட்டியில் புனித சந்தியாகப்பர், புனித செபஸ்தியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.
    • கம்பீரமான காளைகளை பிடிக்க வந்த வீரர்களுக்கு காளைகள் போக்கு காட்டி அவர்களை முட்டித் தள்ளின. இதில் 5 பேர் படுகாயமடைந்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் சாணா ர்பட்டி அருகே மடூர் ஊராட்சிக்கு உட்பட்ட புகையிலைப்பட்டியில் புனித சந்தியாகப்பர், புனித செபஸ்தியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடை பெற்றது.இதையொட்டி திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டன. உதவி இயக்குனர் திருவள்ளுவர் தலைமையில் கால்நடை மருத்துவர்கள் ராஜா, ராஜேஷ்குமார் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் காளைகளை பரிசோதனை செய்து ஜல்லிக்கட்டில் 490 காளைகள் பங்கேற்க அனுமதி வழங்கினர்.

    இதேபோல் மாடுபிடி வீரர்களுக்கு டாக்டர் அசோக்குமார் தலைமை யிலான மருத்துவ குழுவினர் 214 பேரை பரிசோதனை செய்து காளைகள் பிடிக்க அனுமதித்தனர். இதையடுத்து காலை 8.15 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது.இதை கோட்டாட்சியர் பிரேம்கு மார் தொடங்கி வைத்தார்.இதில் கிழக்கு தாசில்தார் சந்தன மேரி கீதா, மண்டல துணை வட்டாட்சியர் தங்கமணி, வருவாய் ஆய்வாளர் ஜெயபால், வி.ஏ.ஓ. சைமன் ஆகியோர் உடனிருந்தனர்.முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது.அதனை யாரும் பிடிக்க வில்லை.

    அதன்பின் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்க ளில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக வாடி வாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன.சில காளைகள் யாரிடமும் பிடிபடாமல் சீறிப் பாய்ந்து சென்று தனது உரிமை யாளருக்கு பரிசுகளை பெற்றுக் கொடுத்தது.காளைகளை மாடுபிடி வீரர்கள் லாவகமாக பிடித்தனர்.

    சில காளைகள் மைதானத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடின.இதனை பார்த்த பார்வை யாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.கம்பீரமான காளைகளை பிடிக்க வந்த வீரர்களுக்கு காளைகள் போக்கு காட்டி அவர்களை முட்டித் தள்ளின.இந்த ஜல்லிக்க ட்டில் பங்கேற்று பிடிபடாத மாடுகள் மற்றும் காளை களை பிடித்த மாடுபிடி வீரர்களுக்கு சைக்கிள், பிரிட்ஜ், அண்டா, பானை, கட்டில், பீரோ உள்ளிட்ட பல பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

    இந்த ஜல்லிக்கட்டில் பாலமேட்டைச் சேர்ந்த மாட்டின் உரிமையாளர் விக்னேஷ் (வயது 26), புகையிலைப்பட்டியைச் சேர்ந்த பார்வையாளர் சந்தனம் (60), மாட்டின் உரிமையாளர் தனராஜ் (32), கணவாய்பட்டியை சேர்ந்த பூமிராஜ் (21), நெய்க்கார ப்பட்டியை சேர்ந்த மாடுபிடி வீரர் கிரேந்திரன் (21) ஆகிய 5 பேர் காயமடைந்தனர்.

    இதில் படுகாயமைடந்த தால் கிரேந்திரன் திண்டு க்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துசெல்லப்பட்டார்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பிக்கள் இமானுவேல் ராஜ்குமார், முருகன், நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பரமசாமி, சிராஜுதீன், சேகர் பவுல்ராஜ் உள்பட 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.இதில் மடூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெர்மன் சாந்தி, கனிகா மில்க் உரிமையாளர் பால ச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த விழாவிற்கான ஏற்பாடு களை விழா கமிட்டியினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • சரக்கு வாகனம் மீது கார் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் படுகாயமடைந்தனர்
    • இந்த விபத்து குறித்து வடமதுரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடமதுரை:

    திருச்சியை சேர்ந்தவர் விஜயகாந்த்(40). ஆயில்மில் வைத்து நடத்தி வருகிறார். இவர் இன்று டிரைவர் ராஜேந்திரன்(50) என்பவருடன் காரில் திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தார். திருச்சி-திண்டுக்கல் 4 வழிச்சாலை தனியார் மில் அருகே கார் வந்தபோது குறுக்கே வடமாநில தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு வாகனம் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. சரக்கு வாகனம் தலைகுப்புற கவிழ்ந்தது. காரில் வந்த விஜயகாந்த், ராஜேந்திரன், சரக்கு வாகனத்தில் வந்த வடமாநில தொழிலாளர்களான குபேந்திரகுமார்(40), பீமாகுமார்(26), நரேந்திரன்(32) ஆகியோர் படுகாயமடைந்து திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    சரக்கு வாகனத்தை ஓட்டிவந்த தினேஷ்குமார் லேசான காயத்துடன் உயிர்தப்பினார். இந்த விபத்து குறித்து வடமதுரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பின்னால் வந்த ஒரு மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டி மீது பயங்கரமாக மோதியது.
    • அனந்தபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கவரை கடகம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 60). இவர் தனது உறவினர் வேலுவின் குழந்தைகளான நேதாஜி (14), சகுந்தலாதேவி (12) ஆகியோரை தனது ஸ்கூட்டியில் உட்கார வைத்துக் கொண்டு அப்பம்பட்டில் இருந்து கவரை நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் கவரை அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த ஒரு மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டி மீது பயங்கரமாக மோதியது.

    இதில் ஸ்கூட்டியில் சென்ற மேற்படி 3 பேரும் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற மாவட்டம் பாடி கிராமத்தைச் சேர்ந்த பாலு, சத்தியசீலன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் தலை மற்றும் முதுகுப் பகுதியில் பலத்த காயமடைந்த குப்புசாமி மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், மற்றவர்களுக்கு செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து அனந்தபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    ×