என் மலர்
நீங்கள் தேடியது "20 percent bonus"
- சி.ஐ.டி.யு. தொழிற்சங்க அலுவலகத்தில் நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் சிறப்பு பேரவை கூட்டம் சங்கத்தின் ஒன்றிய தலைவர் அசன் தலைமையில் நடந்தது.
- கூட்டத்தில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அசோகன், மாவட்ட தலைவர் மோகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
பள்ளிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே காவிரி பகுதியில் உள்ள சி.ஐ.டி.யு. தொழிற்சங்க அலுவலகத்தில் நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் சிறப்பு பேரவை கூட்டம் சங்கத்தின் ஒன்றிய தலைவர் அசன் தலைமையில் நடந்தது. ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் வரவேற்றார்.
கூட்டத்தில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அசோகன், மாவட்ட தலைவர் மோகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பள்ளிபாளையம் பகுதி விசைத்தறி தொழிலாளர்களுக்கு 2022-23-ம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் 20 சதவீதம் வழங்க வேண்டும். போனஸ் பேச்சு வார்த்தையில் அரசு தலையிட வேண்டும் என வலிறுத்தி காவிரி, வசந்தநகர், ஆயக்காட்டூர், ஆக்ரஹாரம் உள்ளிட்ட பல பகுதிகளில் தெருமுனை பிரச்சாரம் நடத்துவது உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் ஏராளமான விசைத்தறி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசுத் துறை மற்றும் பொதுத்துறை மற்றும் அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் அமைப்புகளுக்கான போனஸ் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 8.33 சதவீத போனஸ், 11.67 சதவீத கருணைத் தொகை என மொத்தம் 20 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #DiwaliBonus #EdappadiPalaniswami #TransportEmployees






