என் மலர்
நீங்கள் தேடியது "போராட்டம் .Struggle"
- அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
- கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அங்கன்வாடியில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் சார்பில் புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். இதில் அங்கன்வாடி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்ததால் இந்த போராட்டம் நேற்று இரவு வரை நீடித்தது.
- கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
- அறந்தாங்கி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு
புதுக்கோட்டை
அறந்தாங்கி, மணமேல்குடி, ஆவுடையார்கோவில் உள்ளிட்ட தாலுகாக்களில் பணிபுரியும் 33 கிராம நிர்வாக அலுவலர்களின் அடிப்படை பயிற்சி, நில அளவைப்பயிற்சி, சிறப்பு தேர்வுகள் அடங்கிய தகுதிக்கான பருவம் விளம்பல் ஆணைக்கான தேதியை இரண்டாண்டு பணி நிறைவு செய்த தேதியில் நிர்ணயம் செய்து திருத்தி அமைக்கக்கோரி அறந்தாங்கி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநில செயலாளர் அரங்க வீரபாண்டியன் தலைமை தாங்கினார். மேலும் கோரிக்கையை பரிந்துரை செய்யாத கோட்டாட்சியரை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்களுடன் கோட்டாட்சியர் ஜஸ்டின் ஜெயபால் பேச்சுவார்தை நடத்தினார். அப்போது தங்களுடைய கோரிக்கையை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று தெரிவித்தனர்.
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.
- பல்வேறு கோஷங்களை எழுப்பினர்
அரியலூர்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆண்டிமடம் கிளை சார்பாக பள்ளிகளில் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை பி.எட் பயிற்சி மாணவர்களை கொண்டு ஆய்வு செய்து அவமதிப்பதை கண்டித்து கண்டன போராட்டம், ஆண்டிமடம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு வட்டார தலைவர் மோகன் தாஸ் தலைமை தாங்கினார். மாநில துணைச் செயலாளரும், வட்டாரத் துணைத் தலைவருமான பவுலின் மேரி, மாவட்ட செயற்குழு வட்டாரத் துணைச் செயலாளர் ஜெயசீலி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் நளகீர்த்தி, ராமன், அமிர்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். முன்னதாக வட்டாரத் துணைச் செயலாளர் செல்வகுமார் வரவேற்றுப் பேசினார். வட்டார செயலாளர், மாநில செயற்குழு உறுப்பினர் வேல்மணி போராட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்டத் தலைவர் அசோகன் கோரிக்கையை விளக்கி பேசினார். இந்நிகழ்ச்சியில் திரளான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார பொருளாளர் ஜான்சன் நன்றி கூறினார்.
- புதுக்கோட்டை கந்தர்வகோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
- மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்
கந்தர்வகோட்டை,
கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் அருகே மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்திற்கு மாவட்டத் துணைச் செயலாளர் கே ஆர் தர்மராஜன் தலைமையேற்றார் மாவட்ட குழு உறுப்பினர் அரசப்பன் ஒன்றிய செயலாளர் டி சாமி கண்ணு கட்டட தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜி நாகராஜ், விவசாயிகள் சங்க நிர்வாகி அம்பலராஜ், ஒன்றிய கவுன்சிலர் ஆர் கலியமூர்த்தி, மாதர் சங்க ஒன்றிய துணைச் செயலாளர் விமலா, நிர்வாக குழு உறுப்பினர் பெருமாள், ஒன்றிய குழு உறுப்பினர் மாரிமுத்து, விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் முத்துச்சாமி, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் ராசு, கௌரவத் தலைவர் காளிமுத்து வீராசாமி, மாதர் சங்க ஒன்றிய தலைவர் ஆர் பானுமதி தங்கையன், கட்டுமான தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கண்ணையன், வெங்கடாஜலம், மாரிமுத்து, மஞ்சம்பட்டி ரங்கசாமி,காட்டு நாவல் பழனிச்சாமி. வேலாடிபட்டி வெள்ளைச்சாமி, மங்களா கோயில் முனியாண்டி, ஒத்த வீடு செல்லப்பன், குருசுப்பட்டி முத்தையா, கந்தர்வகோட்டை கருப்பையன் கல்லுப்பட்டி மற்றும் 13 பெண்கள் உட்பட 70 பேர் பேர் பங்கேற்றனர். முன்னதாக கந்தர்வகோட்டை வெள்ளை முனியன் கோவில் திடலில் இருந்து ஊர்வலமாக சென்று பேருந்து நிலையம் அருகே மறியல் போராட்டம் செய்தனர்.
- இனாம் நிலங்கள்திரும்ப பெற அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
- தாசில்தார் அலுவலகம் எதிரே தார் சாலையில் போராட்டம் நடைபெற்றது
வேலாயுதம்பாளையம்,
புகளூர் நகராட்சிக்கு உட்பட்ட புகழிமலை முருகன் கோவில் மற்றும் புகழூர் வட்டாரத்தில் உள்ள கோவில் நிலங்களில் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில் திருக்கோயிலுக்கு சொந்தமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் இனாம் நிலம் உள்ளது. இந்த இனாம் நிலங்கள், அறநிலையத்துறை க்கு சொந்தமான நிலம் என்று, அதனை திரும்ப பெற அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு பொதுமக்கள் பயன்படுத்தி வரும் இனாம் நிலங்கள்,மானிய நிலங்கள் , குத்தகைதாரர் நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
40 முதல் 50 வருடங்களுக்கு மேலாக முறையாக பத்திரப்பதிவு மறுப்பதிவு செய்தும் கட்டுமான அனுமதிகள் பெற்று மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு,சாலை வசதிகள் அரசின் மூலம் பெற்று முறையாக அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்தியும் நிலங்களை உரிமையாக வந்த பிறகு முறையாக அனுபவித்து வருவதாகவும், ஆனால் இந்து சமய அறநிலைத்துறை இந்த நிலங்களை எந்தவித ஆவணங்களும் கொடுக்காமல் கோவில் நிலங்கள் என்று சொல்லி இந்த நிலங்களை பறிமுதல் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக, இந்து அறநிலையத்துறையை கண்டித்து புகளூர் தாகிசல்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த மானிய நிலங்கள் அனைத்தும் இனாம் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் மக்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி புகளூர் தாசில்தார் அலுவலகத்தை 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள்,முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் புகளூர் வட்டாரத்தைச் சேர்ந்த இனாம் நில விவசாயிகள், குத்தகைதாரர்கள் வீடு, மனை உரிமையாளர்கள் ,தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கலந்து கொண்டனர். தாசில்தார் அலுவலகம் எதிரே தார் சாலையில் போராட்டம் நடைபெற்றதால் அந்த சாலை வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர். இதனால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.






