என் மலர்
நீங்கள் தேடியது "புற்றுநோய"
- புத்தாண்டிற்கு பிறகு எனது புற்றுநோய்க்கான சிகிச்சை குறைந்துவிடும்.
- நல்ல செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்றார் மன்னர் சார்லஸ்.
லண்டன்:
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் (96), 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பிறகு ராணி 2-ம் எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசருமான சார்லஸ் இங்கிலாந்து மன்னராக அறிவிக்கப்பட்டார்.
மன்னர் 3-ம் சார்லசின் முடிசூட்டு விழா லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் கடந்த ஆண்டு மே மாதம் கோலாகலமாக நடைபெற்றது. உலக தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் முடிசூட்டு விழாவில் பங்கேற்றனர்.
இதற்கிடையே, மன்னர் சார்லசுக்கு சமீபத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதில் அவருக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், பிரிட்டன் மன்னர் சார்லஸ் தனிப்பட்ட காணொளியில் கூறியதாவது:
புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது அந்நோய் பாதிப்பிலிருந்து எளிதாக மீள்வதற்கு உதவுகிறது.
புத்தாண்டிற்கு பிறகு எனது புற்றுநோய்க்கான சிகிச்சை குறைந்துவிடும். நல்ல செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
புற்றுநோய் பாதிப்பை விரைவாக அறிந்து, சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான வாழ்வை பெற முடியும்.
தொடக்கத்திலேயே புற்றுநோயைக் கண்டறிவதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை நேரடியாக பெற்றுள்ளேன்.
சரியான நேரத்தில் நோயைக் கண்டறிந்ததால்தான், இன்று நான் சிகிச்சையில் இருக்கும்போதும்கூட சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறேன்.
புற்றுநோயியல் நிபுணர்கள், செவிலியர்கள், ஆராய்ச்சியாளர்கள், தன்னார்வலர்களின் தன்னலமற்ற பணிகளுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
- நிற வெறிக்கு எதிராக போராடிய தலைவர்களில் முக்கியமானவராக திகழ்ந்தார்.
- புற்று நோயால் உயிர் இழந்த ஜோலேசா மண்டேலா ஒரு சிறந்த எழுத்தாளராக திகழ்ந்தார்.
ஜோகன்ஸ்பர்க்:
தென் ஆப்பிரிக்கா நாட்டில் ஜனநாயக முறைப்படி முதல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் நெல்சன் மண்டேலா. நிற வெறிக்கு எதிராக போராடிய தலைவர்களில் முக்கியமானவராக திகழ்ந்தார். இவரது பேத்தி ஜோலேகா மண்டேலா (வயது 43).
இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அவருக்கு கல்லீரல், நுரையீரல், முதுகுதண்டு போன்ற உறுப்புகள் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மரணம் அடைந்து விட்டதாக நெல்சன் மண்டேலா அறக்கட்டளை தெரிவித்து உள்ளது. அவரது குடும்பத்தினருக்கு அறக்கட்டளை இரங்கலும் தெரிவித்தது.
புற்று நோயால் உயிர் இழந்த ஜோலேசா மண்டேலா ஒரு சிறந்த எழுத்தாளராக திகழ்ந்தார். தன் வாழ்நாள் முழுவதும் சுகாதாரம் மற்றும் நீதிக்காக உழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.






