என் மலர்
நீங்கள் தேடியது "பாம்பு கடித்து பெண் பலி"
- தூங்கிக் கொண்டிருந்தபோது பரிதாபம்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
ராணிப்பேட்டைமாவட்டம் அரக்கோணம் அடுத்த அமீர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன். இவ ரது மனைவி நதியா (வயது 35). இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது பாம்பு கடித்துள்ளது.
இதனையடுத்து அவர் சிகிச் சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனையிலும், பின் னர் அங்கிருந்து மேல் சிகிச் சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையிலும் சேர்க் கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நதியா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சாமல்பட்டி அருகே பாம்பு கடித்து பெண் ஒருவர் பலியானார்.
- நேற்று தங்களது நிலத்தில் மஞ்சுளா வயல் வேலைக்கு சென்றுள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அருகேயுள்ள சின்னனூர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். விவசாயி. இவரது மனைவி மஞ்சுளா (வயது 37).
நேற்று தங்களது நிலத்தில் மஞ்சுளா வயல் வேலைக்கு சென்றுள்ளார்.அப்போது அவரை பாம்பு கடித்து விட்டதாக கூறப்படுகிறது.
வாயில் நுரை தள்ளி அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். அவ்வழியாக சென்றவர்கள் மஞ்சுளாவை பார்த்து அவரை மீட்டு மத்தூர் ராசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மஞ்சுளா உயிரிழந்து விட்டார்.
இது குறித்து பார்த்திபன் தந்த புகாரின்பேரில் சாமல்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வானூர்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள வரகப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி வெள்ளச்சி (வயது 63). இவர் கோழிகள் வளர்த்து வருகிறார். தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த இவரது கோழி முட்டையிட்டது. அதனை எடுக்க வெள்ளச்சி சென்றபோது, அங்கு கிடந்த பனை ஓலையில் இருந்த நல்லப்பாம்பு அவரை கடித்து விட்டது.
மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் வெள்ளச்சி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கிளியனூர் போலீசில் வெள்ளச்சியின் மகன் ஆறுமுகம் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
குடியாத்தம்:
குடியாத்தம் அருகேயுள்ள எர்த்தாங்கல் குட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் கோதண்டன். விவசாய கூலி. இவருடைய மனைவி அம்பிகா (வயது 40). நேற்றிரவு காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கினர்.
அதிகாலை 2 மணியளவில் அம்பிகாவின் கையில் நாகப் பாம்பு கடித்தது. தூக்கத்தில் இருந்த அவர் ஏதோ பூச்சி என்று உதறி தள்ளியுள்ளார். மீண்டும் நாகப்பாம்பு கடித்த போது, அலறி அடித்து எழுந்தார்.
குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், அம்பிகாவை மீட்டு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். நாகப்பாம்பையும் அடித்துக் கொன்று ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். இதனால் ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.
அம்பிகாவின் நிலைமை மிகவும் மோசமானதால், வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அம்பிகா இன்று காலை இறந்தார்.
குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






