என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை மழை"

    • தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    வடதமிழக - புதுவை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மெதுவாக மேற்கு திசையில் நகர்ந்து, நேற்று மாலை 17.30 மணிஅளவில், வடதமிழக பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறைந்து, இன்று காலை 08.30 மணி அளவில் மேலும் வலுவிழந்தது.

    தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

    தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    6-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கன மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    லட்சத்தீவு பகுதிகள் மற்றும் கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • 4 நாட்களுக்கு பிறகு இன்று மழை நின்றதால் சூரிய பிரவேசம் இருந்தது
    • சென்னை மக்கள் வெயிலை இன்று பார்த்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்தது. டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் கொட்டி தீர்த்த மழை கடந்த 30-ந்தேதி முதல் வட தமிழகத்தில் பெய்தது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மட்டுமின்றி ஒருங்கிணைந்த காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் 3 நாட்கள் பலத்த மழை பெய்தது.

    இந்தநிலையில் 4 நாட்களுக்கு பிறகு இன்று மழை நின்றதால் சூரிய பிரவேசம் இருந்தது. சென்னை மக்கள் வெயிலை இன்று பார்த்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். பயன்படுத்திய உடைகளையெல்லாம் துவைத்து வெயிலில் காய வைத்தனர்.

    இதனிடையே, சென்னையில் தற்போது பல்வேறு இடங்களில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது.

    • கருமேகங்கள் திரண்டு வானம் இருண்டு கனமழை கொட்டி தீர்த்தது.
    • சென்னையில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தாலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்தது. டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் கொட்டி தீர்த்த மழை கடந்த 30-ந்தேதி முதல் வட தமிழகத்தில் பெய்தது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மட்டுமின்றி ஒருங்கிணைந்த காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் 3 நாட்கள் பலத்த மழை பெய்தது.

    30-ந் தேதி வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் 1-ந் தேதி முதல் தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கியது. பகலும் இரவாக காட்சிஅளித்தது. கருமேகங்கள் திரண்டு வானம் இருண்டு கனமழை கொட்டி தீர்த்தது.

    இதனால் சென்னை வாசிகள் வீடுகளில் முடங்கினர். டிட்வா புயல் சென்னை அருகே மையம் கொண்டதால் விட்டு விட்டு கனமழை பெய்தது. சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    இன்று காலை 7 மணி வரை மழை தூறிக் கொண்டே இருந்தது. சென்னையில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தாலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது. பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்கி நின்றதாலும், ஒரு சில பகுதிகளில் மழைநீர் வடியாததாலும் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

    இந்தநிலையில் 4 நாட்களுக்கு பிறகு இன்று மழை நின்றதால் சூரிய பிரவேசம் இருந்தது. சென்னை மக்கள் வெயிலை இன்று பார்த்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். தினமும் பயன்படுத்திய துணிமணிகள் எல்லாம் வீடுகளில் உலர வைக்க முடியாமல் இருந்தனர்.

    வெயில் இன்று தலைகாட்டியதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர். பயன்படுத்திய உடைகளையெல்லாம் துவைத்து வெயிலில் காய வைத்தனர்.

    மழையால் சாலையோர கடைகள் காணாமல் போனது. காய்கறி, பழங்கள் விற்கும் சிறு வியாபாரிகள் இன்று மீண்டும் விற்பனையை தொடங்கினர். சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் கனமழை மற்றும் குளிரால் வெயிலை தேடும் நிலை ஏற்பட்டது.

    • இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    • பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

    தென்னிந்திய பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கிருஷ்ணகிரி, தர்மபுரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதனிடையே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3 தினங்களாக கன முதல் மிதமான மழை பெய்து வந்தது. இதனால் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் சற்று ஓய்ந்திருந்த மழையானது தற்போது பெய்து வருகிறது. மணலி, ராயபுரம், புதுவண்ணாரப்பேட்டை, எழும்பூர், மந்தைவெளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் பணிக்கு செல்வோர் சிரமம் அடைந்துள்ளனர். 

    • வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு உள்ளிட்டவை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
    • கால்வாய் முறையாக பராமரிக்கப்படாததால் கால்வாயின் பெரும் பகுதி காணாமல் போய்விட்டது.

    சென்னை:

    வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து டிட்வா புயலாக மாறியது. இந்த புயல் கரையை நெருங்காமல் கடலோர பகுதிகள் வழியாக பயணித்த நிலையில் வறண்ட காற்று கலந்ததால் மீண்டும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.

    சென்னைக்கு அருகே 30 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்த இந்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியது.

    'டிட்வா' புயல் வலுவிழந்த போதிலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், கடந்த 3 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையின் பல பகுதிகளில், இன்றும் வெள்ள நீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது.

    சென்னை புறநகர் பகுதியான செங்குன்றம், புழல் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று கன மழை கொட்டியது. இதனால் தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளை மழை நீர் சூழ்ந்தது.

    இரவு முழுவதும் இப்பகுதியில் இடைவிடாது மழை கொட்டி தீர்த்தது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த பகுதியில் பாலாஜி அவென்யூ என்ற இடம் அருகே உள்ள ஆர்.சி. கட்டிடத்தின் பின்புறம் கால்வாய் கரையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் மழை வெள்ளம் குடியிருப்புகளை சூழ்ந்தது.

    புழல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாடியநல்லூர் ஊராட்சி பாலாஜிநகர், குமரன்நகர், சன்சிட்டி நகர், விளாங்காடு பாக்கம் ஊராட்சி மல்லிமா நகர், நியூ ஸ்டார்சிட்டி, மற்றும் பாலாஜி கார்டன், தணிகைநகர், வடகரை ஊராட்சிக்கு உட்பட்ட பாபா நகர் உள்ளிட்ட பகுதியில் சுமார் 2 ஆயிரம் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.

    இதனால் வீடுகளுக்குள் ஏராளமானோர் தவித்து வருகிறார்கள். 2 நாட்களாகவே இங்குள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியில் வராமல் வீடுகளுக்குள் முடங்கியிருந்தனர். வெள்ளம் வரும் என்ற அச்சத்தில் சிலர் வீடுகளை விட்டு வெளியேறி வேறு பகுதிக்கு சென்றனர். பலர் வீட்டு மாடிகளில் தஞ்சம் அடைந்தனர்.

    இந்த சூழலில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். அத்தியாவசிய தேவைகளுக்காக கூட வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே கால்வாய் நீருடன் அப்பகுதி தனியார் ஆலை கழிவுகளும், சாக்கடையும் கலந்து வருகின்றன.

    மழை வெள்ளத்துடன் கழிவுநீரும் கலந்து வந்தததோடு பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகளும் வீடுகளுக்குள் புகுந்தன.

    குமரன் நகர் பகுதியில் தாழ்வான பகுதியில் இருந்த 15 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் அப்பகுதியில் 2 முதியவர்கள், 9 பெண்கள் உள்பட 25 பேர் தண்ணீரில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது. அவர்களால் வெளியில் வர முடியவில்லை. இதுபற்றி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. செங்குன்றம் தீயணைப்பு நிலைய அதிகாரி சீனிவாசன் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்றனர்.

    25 பேரையும் ரப்பர் படகு மூலம் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். பின்னர் அவர்கள் தீர்த்தங்கரை சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    இதை தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு உள்ளிட்டவை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. வெள்ள பாதிப்பு குறித்து அப்பகுதியை சேர்ந்த மணி கூறுகையில், புழல் ஊராட்சி ஒன்றியத்தில் கால்வாய்கள், நீர்நிலைகள் உள்ளிட்ட பல்வேறு ஆக்கிரமிப்புகள் காரணமாக மழைநீர் கால்வாய் வழியாக செல்லாமல் ஊருக்குள் புகுந்து விடுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பலமுறை போராடியும் நடவடிக்கை இல்லை.

    இதனால் ஆக்கிரமிப்புகள் அதிகளவில் நடைபெற்று உள்ளன. கடந்த ஆண்டுகளில் பெரிய மழை பெய்ததால் குடியிருப்புகளில் புகுந்த மழைநீர். இந்த ஆண்டு தொடர் மழையால் மழைநீர் புகுந்துள்ளது. புழல் ஊராட்சி ஒன்றியத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளதால், சமூக ஆர்வலர்களும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, நிரூபணம் ஆகியுள்ளது. ஆனால், ஆக்கிரமிப்பாளர்கள் மீது, அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அரசுக்கு வருவாய் இழப்பும், இடர்பாடுகளும் தொடர்கின்றன.

    மேலும் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான். இதுபோன்ற மழைக்காலங்களில் அதிகாரிகள் வெளியில் இருந்து பார்வையிட்டு செல்வது வழக்கமாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக பாதிப்புக்குள்ளான இப்பகுதி மக்களுக்கு தீர்வும் கிடைக்கவில்லை.

    மேலும் தற்போது பாதிக்கப்பட்டவர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

    புழல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் விளாங்காடுபாக்கம், தீர்த்த பிரியப்பட்டு, அழிஞ்சிவாக்கம், பிராண்ட்லைன் உள்ளிட்ட 7 ஊராட்சிகள் உள்ளன. இது சென்னையை ஒட்டிய புறநகர் கிராமப்பகுதிகள் ஆகும்.

    சென்னை நகருக்குள் ஆண்டுதோறும் ஏற்பட்டு வரும் மழை வெள்ள பிரச்சனைகளால் சென்னை நகர்ப்பகுதிகளில் வாடகை வீடுகளில் வசிக்கும் பலர் புறநகர் பகுதிக்கு குடி பெயர்ந்தனர். புழல் ஊராட்சி ஒன்றிய பகுதியில் மட்டும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சார்பில் பிளாட்டுகள் அமைக்கப்பட்டு ஏராளமான புதுப்புது குடியிருப்புகள் உருவாக்கப்பட்டன.

    இந்த நகரங்களில் பிளாட்டுகள் வாங்கி பலரும் வீடு கட்டி உள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் இந்த பகுதியில் 15-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உருவாகி உள்ளன. பல்வேறு தொழில் நிறுவனங்களும் தொடங்கப்பட்டு உள்ளன. வயல்வெளி பகுதிகள் குடியிருப்புகளாக மாறியது.

    இப்பகுதியில் சுமார் 5 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இந்த பகுதியில் ஒரு பாசன் கால்வாய் செல்கிறது. புதிய குடியிருப்புகள், நிறுவனங்கள் அமைந்ததன் காரணமாக இந்த பாசன கால்வாய் ஆக்கிரமிப்பால் தூர்ந்து போனது.

    கால்வாய் முறையாக பராமரிக்கப்படாததால் கால்வாயின் பெரும் பகுதி காணாமல் போய்விட்டது. சோழவரம் பகுதியில் இருந்து வரும் தண்ணீர் இந்த கால்வாய் மூலம் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வட பெரும்பாக்கம் வழியாக கடலுக்கு செல்கிறது. ஒவ்வொரு வருடமும் மழை காலங்களில் இந்த பகுதியில் வீடுகளை தண்ணீர் சூழ்வது வாடிக்கையாகிவிட்டது.

    எனவே கால்வாயை முறையாக பராமரிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கடந்த அக்டோபர் மாதம் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இதனால் தற்காலிகமாக கால்வாய் சீரமைக்கப்பட்டது. இந்த சூழலில் தான் கடந்த 3 நாட்களாக பெய்துவரும் மழையினால் இந்த பகுதியை மீண்டும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    தாம்பரம் அருகில் உள்ள ஊரப்பாக்கத்தில் ஜெகதீசன்நகர், செல்வராஜ்நகர் உள்ளிட்ட இடங்களில் சுமார் 20 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    பலத்த மழை காரணமாக திருமழிசை அருகே உள்ள மேப்பூர் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் சுமார் 600 வீடுகளை மழை நீர் சூழ்ந்து உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிப்பவர்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகிறார்கள்.

    அத்தியாவசியப் பொருட்கள் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு ஊராட்சியில் உள்ள விஷ்ணு பிரியா நகரில் 10 தெருக்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் தவித்து வருகிறார்கள். பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொருட்கள் சேதம் அடைந்து உள்ளன.

    மொத்தத்தில் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ள நீரை வடியவைக்கவும், மீட்பு நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன.

    • சென்னையில் கடந்த 3 நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
    • தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்- வானிலை ஆய்வு மையம்.

    தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவையில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதேபோல், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதேபோல், நாளை கிருஷ்ணகிரி, திருமபுரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரியில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னையில் கடந்த 3 நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், இன்றுடன் சென்னையில் மழை ஓயும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
    • திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்.

    சென்னை:

    வங்கக் கடலில் உருவான 'டிட்வா' புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னைக்கு 100 கி.மீ. தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. இது மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் தெற்கு தென்மேற்கு திசையில் மெதுவாக நகர்கிறது. மேலும் அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுக்குறையக்கூடும்ட என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே இன்று நீலகிரி, ஈரோடு, கோவை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யலாம் என்றும் திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் கனமழையின் காரணமாக சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

    • சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 2 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.
    • காரைக்கால் பகுதியிலும் 7 மணி வரை இடி மின்னலூடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    அதன்படி சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 2 மாவட்டங்களில் 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    நாகை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமாரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

    இதை தவிர காரைக்கால் பகுதியிலும் 7 மணி வரை இடி மின்னலூடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    • சென்னை அருகே வங்கக்கடலில் உள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 12 மணி நேரம் நீடிக்கும்.
    • வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை அருகே வங்கக்கடலில் உள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 12 மணி நேரம் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டு கடற்கரையை நோக்கி மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் தற்போது நகர்கிறது.

    கடற்கரை நோக்கி வரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று இரவு சென்னை - புதுச்சேரி இடையே கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் நாளை மிக கனமழை (ஆரஞ்ச் அலர்ட்) பெய்யும். சேலம், நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நேற்று முன்தினம் காலை 32 ஆயிரத்து 500 சிற்றுண்டியும் நேற்று மதியம் 91 ஆயிரத்து 600 பேருக்கு உணவும் தயாரித்து வழங்கப்பட்டன.
    • இன்று காலையில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 500 உணவு பொட்டலம் தயாரித்து வழங்கப்பட்டன.

    சென்னை:

    சென்னையில் 3-வது நாளாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஒரு சில பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மாநகராட்சி பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.

    215 முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் மழை பாதிப்பால் இதுவரையில் முகாம்களில் யாரும் தங்க வைக்கப்படவில்லை. உணவு மட்டும் வினியோகிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் காலை 32 ஆயிரத்து 500 சிற்றுண்டியும் நேற்று மதியம் 91 ஆயிரத்து 600 பேருக்கு உணவும் தயாரித்து வழங்கப்பட்டன.

    நேற்றிரவு ஒரு லட்சத்து 54 ஆயிரம் பாக்கெட் இரவு உணவு தயாரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது. இன்று காலையில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 500 உணவு பொட்டலம் தயாரித்து வழங்கப்பட்டன.

    மாநகராட்சி சமையல் கூடங்களில் சுகாதாரமாக உணவு தயாரிக்கப்பட்டு சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு 5 லட்சத்து 1,600 உணவு பொட்டலங்கள் இதுவரையில் வழங்கப்பட்டன.

    • சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 13.4 செ.மீ. மழைப்பதிவாகி உள்ளது.
    • மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 50 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது. கடலூரிலிருந்து 160, புதுச்சேரியில் இருந்து 140 , நெல்லூருக்கு 170 கி.மீ தொலைவிலும் ஆழ்ந்த காற்றழுத்தம் நிலவுகிறது. மேலும் தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரைப் பகுதிகளில் இருந்து 35 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது.

    சென்னையில் இருந்து 50 கி.மீ. தூரத்தில் ஒரே இடத்தில் பல மணி நேரமாக மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2-வது நாளாக இன்றும் மழை பெய்து வருகிறது.

    சென்னை அண்ணாசாலை, மெரினா, சாந்தோம், மயிலாப்பூர், எம்.ஆர்.சி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் அதிகாலையில் சாரல் மழை பெய்து வந்த நிலையில் தற்போது பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    மழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ள நிலையில் சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 13.4 செ.மீ. மழைப்பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக பாரிமுனையில் 26.5 செ.மீ., எண்ணூரில் 26.4செ.மீ., ஐஸ் அவுஸில் 23.1 செ.மீ., பேசின் பிரிட்ஜ்-ல் 20.7 செ.மீ மழைப்பதிவாகி உள்ளது. 

    • சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
    • சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையே தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக உருவெடுத்தது.

    இந்தப் புயலுக்கு டிட்வா என பெயரிடப்பட்டது. இந்த டிட்வா புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னை கடற்கரையை நெருங்கியிருக்கும் நிலையில், இன்று காலை முதல் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    மேலும் இந்த டிட்வா புயல் அடுத்து இரண்டு நாட்களுக்கு சென்னை கடற்கரை அருகே நிலை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், வட தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மணிக்கு 3 கிமீ வேகத்தில் நகர்ந்த நிலையில் கடந்த 6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் நீடிக்கிறது.

    ×