என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதலனை திருமணம்"

    • வேறு இடத்தில் மணமகன் தேடியதால் தப்பி ஓட்டம்
    • பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் அடைந்தனர்.

    காேவை,

    திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள செம்பாகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வி (வயது 20).

    இவர் திருப்பூரில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 1 ஆண்டுக்கு முன்பு மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் தமிழ்செல்வின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தங்களது மகளுக்கு திருமணம் செய்வதற்காக வேறு இடத்தில் மணமகனை தேடி வந்தனர்.

    இதனால் காதலை பிரிந்து விடுவார்களோ என்ற பயத்தில் இருந்த மாணவி வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் அவர் தனது காதலனை சந்தித்து நடந்த சம்பவங்களை கூறினார். பின்னர் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

    திருமணம் செய்த கையோடு காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு ஆழியாறு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் காதலர்களிடம் விசா ரணை நடத்தினர். பின்னர் இதுகுறித்து அவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மகளை மீட்டு தரும்படி பெற்றோர் புகார்
    • நெகமம் போலீசார் விசாரணை

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சின்ன நெகமத்தை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண்.

    இவர் அந்த பகுதியில் உள்ள பேன்சி கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது அவருக்கு பக்கத்து கடையில் வேலை பார்த்து வந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

    2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் வீட்டிற்கு தெரிய வரவே இளம்பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வேலையை விட்டும் நிறுத்தினர்.

    சம்பவத்தன்று இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவர் தனது காதலனுடன் ஓட்டம் பிடித்தார். பின்னர் அவர் தனது உறவினர் ஒருவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தான் கோவையில் இருப்பதாகவும், காதலனை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

    வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய இளம்பெண்ணின் பெற்றோர் அவர்களது மகள் வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தனர். அக்கம் பக்கத்தில் தேடிய போது இளம்பெண் அவருடைய காதலனை திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது.

    இதுகுறித்து இளம்பெண்ணின் பெற்றோர் வீட்டை விட்டு வெளியேறி காதலனை திருமணம் செய்து கொண்ட தங்களது மகளை மீட்டு தரும்படி நெகமம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    ×