என் மலர்tooltip icon

    வழிபாடு

    weekly rasipalan 28.12.2025 to 3.1.2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார ராசிபலன்கள்
    X

    weekly rasipalan 28.12.2025 to 3.1.2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார ராசிபலன்கள்

    • ரிஷபம் நிதானத்துடன் செயல்பட வேண்டிய வாரம்.
    • கடகம் தடை, தாமதங்கள் விலகும் வாரம்.

    மேஷம்

    சகல சவுபாக்கியங்களும் உண்டாகும் வாரம்.ராசிக்கு 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் உள்ள சூரியன், செவ்வாய், சுக்கிரன், புதனுக்கு சனி மற்றும் குருவின் பார்வை உள்ளது. இழந்த அனைத்து இன்பங்களையும் மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கை உருவாகும்.தொழில் வளர்ச்சி அபரிமித மாக இருக்கும். லாபம் அதிகரிக்கும். வேலை பார்த்து கொண்டே உபதொழில் செய்து லாபம் ஈட்டும் மார்க்கம் தென்படும். தொழில் உத்தியோகத்தில் இருந்த பாதிப்புகள் விலகும்.வேலையில் பதவி உயர்வுகளை அடையக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. நெருக்கடியாக இருந்த பிரச்சினைகள் நீங்கும். சாமர்த்தியம் அதிகமாகும். பங்கு வர்த்தகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். பிள்ளைகளின் திருமணம், குழந்தை பாக்கியம், உத்தியோக, தொழில் அனுக்கிர கம் மன நிம்மதியை அதிகரிக்கும். மனதை மகிழ்விக் கும் நல்ல சம்பவங்கள் நடக்கும். சிலர் புதிய வாகனம் வாங்கலாம். சிலருக்கு நிலம், வீடு போன்ற சொத்துச் சேர்க்கை உண்டாகும். கை, கால், மூட்டு வலியால் ஏற்பட்ட அவதியில் இருந்து விடுதலை உண்டாகும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். நடராஜருக்கு இளநீர் அபிஷேகம் செய்து வழிபடவும்.

    ரிஷபம்

    நிதானத்துடன் செயல்பட வேண்டிய வாரம்.ராசிக்கு சனியின் 3ம் பார்வை உள்ளது. தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் குரு வக்ரமாக இருப்பதால் வரவுக்கு மீறிய செலவுகள் மனதை வருத்தும். அடுத்தவருக்கு ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களது செய்கை கோபத்தை அதிகரித்தாலும் நிதானத்தை கடைபிடித்தால் தேவையற்ற பிரச்சினைகளைத் தடுக்கலாம். தொழில், உத்தியோக ரீதியான பாதிப்பு எதுவும் இருக்காது. தொழில் கூட்டாளி களிடம் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. நல்ல சொந்த வீட்டிற்குச் செல்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடை பெறும். ஆண், பெண்களுக்கு திருமண வாய்ப்பு தேடி வரும். குழந்தை பாக்கியத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் வைத்தியத்தில் சீராகும். வீட்டுக்கடன் குறைந்த வட்டியில் கிடைக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். சொத்து தொடர்பான முக்கிய முடிவு, பத்திரப்பதிவுகளை ஓரிரு வாரங்களுக்கு தவிர்க்க வும். நடராஜருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து வழிபட எல்லா விதமான பிரச்சினைகளும் சீராகும்.

    மிதுனம்

    தடைபட்ட காரியங்கள் துரிதமாகும் வாரம். ராசி அதிபதி புதன் குருவுடன் பரிவர்த்தனை பெற்று சனி பார்வையில் இருக்கிறார். வாழ்க்கையை நடத்து வதில் இருந்த சிரமங்கள் உங்களுடைய முயற்சியால் சீராகும். பயம் என்பதே இருக்காது. தைரியசாலியாக இருப் பீர்கள். கடுமையாக உழைப்பீர்கள். குடும்ப சிக்கல்கள், மற்றும் சங்கடங்களில் இருந்து விடுபடுவீர்கள். கடந்த கால கடன்களைத் தீர்த்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள்.ஒரே நேரத்தில் பலவிதமான வாய்ப்புகள் வந்து சேரும். பணம் சம்பாதிக்கும் சிந்தனையுடனே இருப்பீர் கள். பண வரவில் முன்னேற்றம் இருக் கும். குடும்ப உறவுகளின் அனுசரனை யால் அனைத்து பிரச்சினைகளும் கானல் நீராக மறையும். பருவ வயதினர் மண நாளை எண்ணலாம். மனதும், உடலும் சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு குறையும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைத்து குடும்பத்துடன் இணையும் வாய்ப்புள்ளது. உடன் பிறந்தவர்கள், பங்காளிகளிடம் அனுசரித்துச் சென்றால் பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினைகள் தீரும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலை அதிகரிக்கும். நடராஜருக்கு வில்வ மாலை அணிவித்து வழிபடவும்.

    கடகம்

    தடை, தாமதங்கள் விலகும் வாரம். ராசி அதிபதி சந்திரன் 9,10,11-ம் இடங்களில் சஞ்சரிப்பதால் பிறர் ஆச்சரியப்படும் வகையில் அன்றாட பணிகளை திறம்பட செயல்படுத்த முடியும். தொழிலில் கணிசமான லாபம் கிடைக்கும்.வேலை செய்யும் இடத்தில் சில அசவுகரியங்கள் அதிகரித்தாலும் அதை பொருட்டாக மதிக்காமல் முன்னேறுவீர்கள். புதிய நட்பு வட்டாரம் உருவாகும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்காமல் இழுத்தடித்த வர்கள் வீடு தேடி வந்து பணத்தை கொடுப்பார்கள்.அதிக முதலீட்டில் சொந்த தொழில் செய்பவர்கள் நிதானந்துடன் செயல்பட வேண்டும். விவாகரத்து வரைச் சென்ற வழக்குகள் சுமூகமாகும். சுய ஜாதக ரீதியான திருமணத் தடை அகலும். மறு திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். தேவை இல்லாமல் குடும்பத்தில் நடந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தம்பதிகள் அமைதி கடை பிடித்தால் ஓரிரு வாரங்களில் நிைலமை சீராகும். வெளிநாட்டு வேலை எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். விவசாயிகள் பருவ காலத் திற்கு ஏற்ற பயிரை விளைவிப்பது நலம். இளநீர் அபிஷேகம் செய்து நடராஜரை வழிபடவும்.

    சிம்மம்

    எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும் வாரம். ராசி அதிபதி சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஆத்ம ஞானம் கிடைக்கும். உடலுக் கும், ஆன்மாவுக்கும் புத்துணர்வு தரும் பயிற்சி களில் ஆர்வம் ஏற்படும். மன சங்கடங்கள் அகலும். தடை பட்ட குல தெய்வ வேண்டுதல்களை நிறைவேற்று வீர்கள். பித்ருக்கள் வழிபாட்டில் ஆர்வம் மிகும். அரசு வழி ஆதாயம் உண்டு. குழந்தை பாக்கியம் தொடர் பான உங்களின் எண்ணம் ஈடேறும். பொறுப்புடன் வேலை செய்து அதிகாரிகளின் பாராட்டைப் பெறு வீர்கள். தடை பட்ட வெளிநாட்டு வேலை வாய்ப்பு இப்பொழுது கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். சனி, ராகு, கேதுக்களின் நிலைப்பாடு சுமாராக உள்ளதால் அதிக முதலீடு கொண்ட செயல் களைத் தவிர்ப்பது நல்லது. கிடைக்கும் பணத்தை வேறு வகையில் முதலீடு செய்ய வேண்டும். சிலரது காதல் பிரிவினையில் முடியும். வாழ்க்கைத் துணை யால் ஏற்பட்ட இடையூறுகள் குறையும். 29.12.2025 அன்று காலை 7.41 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிலருக்கு சளி, இருமல், காய்ச்சல், உடல் அசதி போன்ற சிறு சிறு உடல் உபாதைகள் உண்டாகும். திருவாதிரை அன்று நடராஜருக்கு விபூதி அபிஷேகம் செய்து வழிபடவும்.

    கன்னி

    புதிய தெளிவும் நம்பிக்கையும் பிறக்கும் வாரம். ராசி அதிபதி புதன் குருவுடன் பரிவர்த்தனை பெற்று உள்ளார். முயற்சிகளில் அதிக ஆர்வத்துடன் செயல்பட வேண்டும். அனைவரிடமும் பெருந் தன்மையாக நடந்து கொள்வது நல்லது. குடும்பத்தில் நிலவிய உட்பூசல் குறைந்து அமைதிப் பூங்காவாகும். தொழில், வேலையில் மாற்றம் ஏற்படலாம். வீடு மாற்றம், ஊர் மாற்றம் செய்ய வாய்ப்புள்ளது. வேலை, தொழில் சம்பந்தமாக வெளியூர் அல்லது வெளிநாடு செல்லலாம். சிலர் வாடகை வீட்டில் இருந்து சொந்த வீட்டிற்கு செல்லலாம். சிலருக்கு வட்டி இல்லாத கைமாற்றுக் கடன் கிடைக்கும். ஆரோக்கிய குறைபாடுகள் வைத்தியத்தில் கட்டுப்படும். கணவன், மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். உங்கள் திறமை யால் சாமர்த்தியத்தால் எதிரிகளை வெல்வீர்கள். 29.12.2025 அன்று காலை 7.41-க்கு சந்திராஷ்டமம் ஆரம்பித்து 31.12.2025 அன்று காலை 9.23-க்கு முடிவதால் சிலர் கை இருப்பை செலவழித்து விட்டு கடன் வாங்க நேரிடலாம். எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் மன சஞ்ச லத்தால் தாமதமாகும். நடராஜருக்கு பஞ்சகவ்ய அபிஷேகம் செய்து வழிபடவும்.

    துலாம்

    தடைகள் தகரும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் வெற்றி ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தேவையற்ற பேச்சுக்கள், வாக்கு வாதங்கள் குறையும். பேச்சை மூலதனமாக கொண்டவர்களின் வருமானம் உயரும். வருமானம் தரக்கூடிய புதிய வாய்ப்புகள் தேடி வரும். கைவிட்டுப் போனது எல்லாம் கிடைக்கும். திருமணத் தடை அகலும். புத்திரப் பிராப்தம் கிடைக்கும். பெற்றோர்கள், பெரியோர்கள், முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். தந்தையின் ஆரோக்கியத்தை அதிகரிக்க மாற்று முறை வைத்தியத்தை நாடுவீர்கள்.பொருளாதாரம், ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை திருப்தியான வாரம் என்பதால் நிம்மதியாக இருக்கலாம். மேலும் நன்மையை அதிகரிக்க குல தெய்வம், முன்னோர்களை வழிபடவும். 31.12.2025 அன்று காலை 9.23 மணி முதல் 2.1.2026 அன்று காலை 9.26 மணி வரை இருப்பதால் அன்றைய தினம் யாருக்கும் பணம் கடனாக தர, வாங்கக் கூடாது. நன்மையும் தீமையும் கலந்த வாரமாகவே இருக்கும் என்பதால் ஒரு செயலில் இறங்கும் முன்பு பலமுறை யோசிக்க வேண்டும். திருவாதிரையன்று நடராஜருக்கு கரும்புச் சாறு அபிஷேகம் செய்து வழிபடவும்.

    விருச்சிகம்

    விபரீத ராஜ யோகமான வாரம்.தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி குரு பகவான் 8,11ம் அதிபதி புதனுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளார்.லாட்டரி, பங்குச் சந்தை லாபம், அதிர்ஷ்ட பணம், சொத்துக்கள் என எதிர்பாராத ராஜ யோகங்கள் ஏற்படலாம்.விசுவாசமாக உழைப்பவர்களுக்கு மலைபோல் வந்த பிரச்சினைகள் பனி போல் விலகும். பெண்களுக்கு கணவராலும், ஆண்களுக்கு மனைவியாலும் அதிர்ஷ்டமும், யோகமும் உண்டாகும். சுய ஜாதக ரீதியான தோஷங்கள் விலகி திருமணம் நடைபெறும்.உடன் பிறப்புகள், பங்காளிகள், சித்தப்பாவிடம் நிலவிய மனக்கசப்புகள் மறைந்து பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் சுமூகமாகும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் நன்மை ஏற்படலாம். சிலர் நண்பர் களுடன் இணைந்து புதிய கூட்டுத் தொழில் துவங்க லாம். அல்லது தொழிலை விரிவாக்கம் செய்யலாம். வீடு கட்டுதல், விரிவாக்கம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளது. 2.1.2026 அன்று காலை 9.26 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரைப் பற்றியும் யாரிடமும் குறை கூறாமல், தர்க்கம் செய்யா மல் அமைதி காப்பது நல்லது. திருவாதிரை அன்று நடராஜருக்கு புனுகு சாற்றி வழிபடவும்.

    தனுசு

    உழைப்பும், அதிர்ஷ்டமும் பலன் தரும் வாரம். ராசியில் உள்ள சூரியன், புதன், செவ்வாய், சுக்கி ரன் சேர்க்கைக்கு சனி, குரு பார்வை உள்ளது. தனுசு ராசியினர் பதினாறும் பெற்று பெறு வாழ்வு வாழும் அமைப்பு உண்டாகும். செயற்கரிய செயல்களை செய்து புகழ், பாராட்டுகளை அடைவீர்கள். புத்திர தோஷம் விலகி குழந்தை பேறு கிடைக்கும். உங்கள் திறமைகள் வெளிப்படும். அலுவல கத்தில் மகிழ்ச்சியான போக்கு நீடிக்கும். வேலை மாற்ற சிந்தனையை ஒத்தி வைக்கவும். திருமண வயதில் இருப்பவர் களுக்கு கெட்டி மேளம் கொட்டப்படும். வீடு கட்ட, வாகனம் வாங்க உகந்த நேரம். சகோதர, சகோதரிகளிடம் நிலவிய போட்டி, பொறாமைகள் விலகும். பங்காளிகள் பிரச்சினை, கோர்ட்டு, கேஸ், வாய்தாக்கள் என அலைந்த நிலை மறையும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் தீரும். பூர்வீகம் தொடர் பான சர்ச்சைகள் முடிவிற்கு வரும். குல தெய்வ கோவிலுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டாகும். அண்டை அயலாருடன் சுமூகமான நிலை நீடிக்கும். உடன் பிறந்தே கொன்ற வியாதிக்கு முற்று புள்ளி வைப்பீர்கள். திருவாதிரை நட்சத்திர நாளில் விரதம் இருந்து நடராஜருக்கு பச்சைக் கற்பூரம் அபிஷேகம் செய்து வழிபடவும்.

    மகரம்

    நீண்ட கால கனவுகள், திட்டங்கள் நிறைவேறும் வாரம். ராசியை எந்த கிரகமும் பார்க்கவில்லை என்பதால் மனதில் நிம்மதி இருக்கும்.இதுவரை அனுபவித்த எண்ணிடலங்கா துயரம் தீரும். விரக்தியாக வாழ்ந்தவர்களுக்கு வாழ்க்கையில் பிடிப்பு, தைரியம் அதிகரிக்கும். முயற்சிகளுக்கும், திட்டமிடுதலுக்கும் குடும்ப உறவுகள் உதவியாக, ஆறுதலாக, பக்கபலமாக இருப்பார்கள். திருமணம், குழந்தை பேறு, உத்தியோகம், தொழில் என தடைபட்ட அனைத்து பாக்கிய பலன்களும் மன நிறைவாக நடந்து முடியும். அடிமைத்தனத்துடன் நாடோடிபோல் வாழ்ந்தவர்களுக்கு நிரந்தமான தொழில், அதிர்ஷ்டம், முன்னேற்றம், புகழ் உண்டாகும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். அடிப்படை தேவைக்கு தடு மாறியவர்களுக்கு கூட தாராளமான பணப் புழக்கம் உண்டாகும். கலை ஆர்வம், அரசுப் பணி, அரசியல் வெற்றி தரும். இழந்த வேலை, மீண்டும் கிடைக்கும். தந்தையாலும், தந்தை வழி உறவுகள் மூலமும் முன்னேற்றத்திற்கான உதவிகள் கிடைக்கும். அடமானச் சொத்துக்கள், நகைகளை மீட்க வாய்ப்பு உள்ளது. திருவாதிரை நட்சத்திரம் அன்று விரதம் இருந்து சிவனுக்கு சந்தன அபிஷேகம் செய்து வழிபடவும்.

    கும்பம்

    வைராக்கியத்தாலும், விடா முயற்சியாலும் வெற்றி வாய்ப்பு உண்டாகும் வாரம். ராசியில் உள்ள ராகுவிற்கு தனம், வாக்கு, குடும்ப ஸ்தான அதிபதி குருவின் பார்வை உள்ளது.ஞாபக சக்தி அதிகரிக்கும். தைரியமும் தெம்பும் குடிபுகும். சகல சவுபாக்கி யங்களையும் எல்லாவிதமான வளர்ச்சியையும் பெறக்கூடிய நிலை உள்ளது. நினைப்பது நடக்கும். கூட்டுத் தொழில், பங்குச் சந்தை ஆதாயம் உண்டு. சிலருக்கு வாடகை வருமானத்தை அதிகரிக்கும் சொத்துக்கள் சேரலாம். தடை பட்ட வாடகை வருமா னங்கள், சம்பள பாக்கிகள் கிடைக்கும். திருமணம், கல்வி, தொழில், உத்தியோகம், பிள்ளைப் பேறு போன்ற சுப செலவிற்காக உடன் பிறந்தவர்களுக்கு உதவ வேண்டிய சூழ்நிலை உள்ளது. பூர்வீக நிலப் பிரச்சினை தீரும். பூர்வீகத்தால் யோகம் உண்டாகும். காது, மூக்கு, தொண்டை தொடர்பான பிரச்சினைகள் அறுவை சிகிச்சையில் சீராகும். ராசியில் ராகு ஏழில் கேது உள்ளதால் திருமண முயற்சியில் எடுத்தோம், கவிழ்த்தோம் என்றில்லாமல் நிதானமாக செயல் பட்டால் அதிக நன்மைய டையலாம். திருவாதிரை நட்சத்திர நாளில் விரதம் இருந்து நடராஜருக்கு தயிர் அபிஷேகம் செய்து வழிபடவும்.

    மீனம்

    நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய வாரம்.ராசியில் உள்ள சனிக்கு செவ்வாயின் நான்காம் பார்வை உள்ளது. பிறர் அறியா நுட்பங்களை அறிந்து தன்னிச்சையாக செயல்படும் தைரியம் உருவாகும்.பொருளாதார சுணக்கங்கள் விலகி அதிகப்படியான வருமானம் கிடைக்கும். சுகமான, சொகுசான ஆடம்பர பங்களா, வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. இடப்பெயர்ச்சி செய்ய வாய்ப்புகள் உள்ளது.வேலை இழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சக ஊழியர்களால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். சிலர் வேலையில் இருந்து விடுபட்டு கடன் பெற்று புதிய சுய தொழில் துவங்கலாம். உடன் பிறந்த சகோதரர் அல்லது உங்களின் உதவியைப் பெற்ற வர்களே போட்டியாக, எதிரியாக மாறுவார்கள். பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் ஜாதக தசா புத்தி ரீதியான பரிகாரங்கள் செய்து கொண்டால் எல்லாச் பிரச்சினைகளும் விலகும். சில விசயங்கள் துவக்கத்தில் சாதகம் இல்லாமல் இருந்தாலும் முடிவில் வெற்றி உங்களுக்கே உண்டாகும். முரட்டு தைரியத்தை கைவிட்டு விவேகத்துடன் செயல்பட்டால் நல்ல முன்னேற்றம் உண்டாகும். திருவாதிரை நட்சத்திர நாளில் விரதமிருந்து நடராஜருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.

    பிரசன்ன ஜோதிடர்

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    Next Story
    ×