Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 26 டிசம்பர் 2025: அம்மன் கோவில்களில் சிறப்பு பால் அபிஷேகம்

திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு.திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு.
Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 26 டிசம்பர் 2025: அம்மன் கோவில்களில் சிறப்பு பால் அபிஷேகம்
Published on

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு மார்கழி-11 (வெள்ளிக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : சஷ்டி காலை 10.37 மணி வரை பிறகு சப்தமி

நட்சத்திரம் : சதயம் காலை 6.34 வரை பிறகு பூரட்டாதி, மறுநாள் விடியற்காலை 6.06 மணி வரை பிறகு உத்திரட்டாதி

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

அம்மன் கோவில்களில் சிறப்பு பால் அபிஷேகம், திருத்தணி முருகன் கிளி வாகன சேவை

சங்கரன்கோவில் ஸ்ரீகோமதி அம்மன் தங்கப் பாவாடை தரிசனம். சிதம்பரம் ஸ்ரீ சிவபெருமான் சந்திரபிரபையில் பவனி. ஆவுடையார்கோவில் ஸ்ரீ மாணிக்கவாசகர் திருக்கோலமாய்க் காட்சி. ஆழ்வார்திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் கஜேந்திர மோட்ச லீலை. ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை. மாடவீதி புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு.

கரூர் தான்தோன்றி ஸ்ரீ கல்யாண வேங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சன சேவை. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் மரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளிவாகன சேவை. இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலை சிறப்பு பாலாபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம்-மேன்மை

ரிஷபம்-சுகம்

மிதுனம்-சுபம்

கடகம்-ஆக்கம்

சிம்மம்-ஆதரவு

கன்னி-பரிவு

துலாம்- நன்மை

விருச்சிகம்-ஓய்வு

தனுசு- புகழ்

மகரம்-கடமை

கும்பம்-உவகை

மீனம்-வெற்றி

X

Maalai Malar
www.maalaimalar.com