Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 25 டிசம்பர் 2025: வளர்பிறை சஷ்டி விரதம்

ஆலங்குடி ஸ்ரீ குருபகவானுக்கு கொண்டைக்கடலை சாற்று வைபவம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.
Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 25 டிசம்பர் 2025:  வளர்பிறை சஷ்டி விரதம்
Published on

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு மார்கழி-10 (வியாழக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : பஞ்சமி காலை 11.24 மணி வரை பிறகு சஷ்டி

நட்சத்திரம் : அவிட்டம் காலை 6.40 வரை பிறகு சதயம்

யோகம் : சித்த, மரணயோகம்

ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம் : தெற்கு

நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை

இன்று வளர்பிறை சஷ்டி விரதம். ஸ்ரீபிள்ளையார் நோன்பு. சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். சிதம்பரம், நெல்லை, வீரவநல்லூர் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் உற்சவம் ஆரம்பம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பனுக்கு புஷ்பாங்கி சேவை. மைசூர் மண்டபம் எழுந்தருளல். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமான் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சன சேவை. ஆலங்குடி ஸ்ரீ குருபகவானுக்கு கொண்டைக்கடலை சாற்று வைபவம்.

திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார சிறப்பு அலங்கார திருமஞ்சன சேவை. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமானுக்கும், தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கும் அபிஷேகம். அலங்காரம், வழிபாடு. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமியநாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம்-நிறைவு

ரிஷபம்-தெளிவு

மிதுனம்-பற்று

கடகம்-லாபம்

சிம்மம்-நலம்

கன்னி-ஜெயம்

துலாம்- திடம்

விருச்சிகம்-உண்மை

தனுசு- நற்செயல்

மகரம்-வரவு

கும்பம்-பெருமை

மீனம்-விவேகம்

X

Maalai Malar
www.maalaimalar.com