Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 24 டிசம்பர் 2025: வளர்பிறை சதுர்த்தி விரதம்

மிலட்டூர் ஸ்ரீவிநாயகப் பெருமான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமி அலங்கார திருமஞ்சன சேவை.
Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 24 டிசம்பர் 2025:  வளர்பிறை சதுர்த்தி விரதம்
Published on

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு மார்கழி-9 (புதன்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : சதுர்த்தி காலை 11.41 மணி வரை பிறகு பஞ்சமி

நட்சத்திரம் : அவிட்டம் (முழுவதும்)

யோகம் : மரணயோகம்

ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை

இன்று வளர்பிறை சதுர்த்தி விரதம். மிலட்டூர் ஸ்ரீவிநாயகப் பெருமான் புறப்பாடு. தேரெழுந்தூர் ஸ்ரீ ஞானசம்பந்தர் புறப்பாடு. ஆவுடையார் கோவில் ஸ்ரீ மாணிக்கவாசகர் உற்சவம் ஆரம்பம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் காளிங்க நர்த்தன காட்சி. திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி பாலாபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருநெல்வேலி சமீபம் 4-ம் நவதிருப்பதி திருப்புளியங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீபுளியங்குடி வள்ளியம்மை கோவிலில் திருமஞ்சன சேவை.

மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமி அலங்கார திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. விருதுநகர் ஸ்ரீவிஸ்வநாதர், வேதாரண்யம் ஸ்ரீதிருமறைக்காடர் கோவிலில் காலையில் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் அபய பிரதான ஸ்ரீலிங்க நாதர் புறப்பாடு. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமான், தேவகோட்டை ஸ்ரீ அரங்கநாதர் கோவில்களில் திருமஞ்சன சேவை.

இன்றைய ராசிபலன்

மேஷம்-வரவு

ரிஷபம்-ஒய்வு

மிதுனம்-ஆசை

கடகம்-வெற்றி

சிம்மம்-ஆதரவு

கன்னி-புகழ்

துலாம்- வரவு

விருச்சிகம்-செலவு

தனுசு- லாபம்

மகரம்-திறமை

கும்பம்-உண்மை

மீனம்-களிப்பு

X

Maalai Malar
www.maalaimalar.com