என் மலர்
வழிபாடு

Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 22 டிசம்பர் 2025: சிவன் கோவில்களில் சோமவார அபிஷேகம்
- ஆழ்வார் திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் சேத்தியில் வேணுகான கண்ணன் திருக்கோலம்.
- திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் பவனி.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மார்கழி-7 (திங்கட்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : துவிதிைய காலை 10.46 மணி வரை பிறகு திருதியை
நட்சத்திரம் : உத்திராடம் மறுநாள் விடியற்காலை 5.31 மணி வரை திருவோணம்
யோகம் : மரண, அமிர்தயோகம்
ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
திருமயிலை, திருவான்மியூர், திருவிடைமருதூர் சிவன் கோவில்களில் சோமவார அபிஷேகம்
ஆழ்வார் திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் சேத்தியில் வேணுகான கண்ணன் திருக்கோலம். பல்லக்கத்தில் கன்றால் விளா எறிந்த திருக்கோலமாய்க் காட்சி. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் காளிங்க நர்த்தனக் காட்சி. நத்தம் ஸ்ரீவரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீவிஜயாசனப் பெருமாள் திருமஞ்சன சேவை. திருமயிலை ஸ்ரீகற்பகாம்பாள் சமேத ஸ்ரீகபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீதிரிபுர சுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட் நகர் ஸ்ரீஅராளகேசி அம்மன் சமேத ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர், திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத்சுந்தரகுசாம்பிகை சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி கோவில்களில் காலையில் சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.
கோவில்பட்டி ஸ்ரீசெண்பகவல்லி அம்மன் சமேத ஸ்ரீ பூவண்ணநாதர் பாலாபிஷேகம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. திருச்சேறை ஸ்ரீசாரநாதர் புறப்பாடு. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் பவனி. தேவகோட்டை ஸ்ரீசிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் காலையில் அபிஷேகம், அலங்காரம் வழிபாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உதவி
ரிஷபம்-பயணம்
மிதுனம்-உழைப்பு
கடகம்-கடமை
சிம்மம்-களிப்பு
கன்னி-தனம்
துலாம்- சிறப்பு
விருச்சிகம்-பரிவு
தனுசு- உதவி
மகரம்-மாற்றம்
கும்பம்-ஆர்வம்
மீனம்-இன்பம்






