Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 20 டிசம்பர் 2025: பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை

திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம்.திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரெங்கராஜர் புறப்பாடு.
Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 20 டிசம்பர் 2025: பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை
Published on

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு மார்கழி-5 (சனிக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : அமாவாசை காலை 7.54 மணி வரை பிறகு பிரதமை

நட்சத்திரம் : மூலம் பின்னிரவு 1.16 மணி வரை பிறகு பூராடம்

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை

திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம். சகல விஷ்ணு ஆலயங்களிலும் பகற்பத்து உற்சவம் ஆரம்பம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் திருமொழி திருநாள் தொடக்கம் ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்த சாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபாலசுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை.

திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீநம்மாழ்வார் புறப்பாடு. திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரெங்கராஜர் புறப்பாடு. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் திருமஞ்சனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை.

இன்றைய ராசிபலன்

மேஷம்-தேர்ச்சி

ரிஷபம்-மாற்றம்

மிதுனம்-நன்மை

கடகம்-பெருமை

சிம்மம்-நட்பு

கன்னி-லாபம்

துலாம்- புகழ்

விருச்சிகம்-முயற்சி

தனுசு- உயர்வு

மகரம்-களிப்பு

கும்பம்-போட்டி

மீனம்-ஜெயம்

X

Maalai Malar
www.maalaimalar.com